Tuesday, 29 April 2014

ஏலக்காய்

ஏலக்காய்

Photo: சமையலில் முக்கியமாக இனிப்புப் வகைகள், கேக், போன்றவற்றிற்கு வாசனை, சுவை அளிக்க கூடிய ஏலக்காய் ஒரு இயற்கை மருந்து என்பது நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம்  ‘‘வாசனைப் பொருட்களின் ராணி’’(Queen of the spices) என்று சிறப்புப் பெயர் - செல்லப் பெயர் கொண்ட ஏலக்காய், இந்தியாவில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஏலக்காய் விதையில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை அடங்கியுள்ளன.

ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன.

* சிறிது ஏலப்பொடியை, வெற்றிலையுடன் மென்று தின்றால், அஜீரணம் அகலும். பசி ருசி உண்டாகும்.

* ஏலப்பொடியுடன், மிளகுப்பொடி சேர்த்து, சிறிது துளசிச்சாறில் சேர்த்துக் குடித்தால், கடும் கபம் இளகி வெளிப்பட்டு, நலம் உண்டாகும். பக்க விளைவு இல்லாத இயற்கை மருந்து இது.

* ஏலக்காய் தூள், டீ தூள் இரண்டையும் சேர்த்து டீ தயாரித்து அத்துடன் தேன் சேர்த்து, தினம் இருவேளை பருகி வர, நரம்புகள் வலுப்படும்.

* தேனுடன், ஏலக்காய்தூள் கலந்து, சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். நரம்புகள் நன்கு இயங்கும். வலிமை அடையும்.

* ஏலக்காயுடன், கறிவேப்பிலை வைத்து மைய்யாக அரைத்து எருமைத் தயிரில் சேர்த்து மூன்று வேளை சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

* ஏலக்காய் விதைகளை வாயிலிட்டு அடக்கிக் கொண்டு, உமிழ்நீரை விழுங்கிவர, வாய்நாற்றம் மாறும்.

* நான்கு மிளகு, சிறிது ஏலக்காய், சுக்கு இவைகளுடன் பால் தெளித்து விழுதாக அரைத்து, நெற்றியில் பற்றிட தலை வலிதானே போகும்.

* ஏலக்காய், மிளகு, சுக்கு, திப்பிலி, தனியா இந்த ஐந்தையும் சேர்த்து கஷாயம் செய்து பருகிவர குற்றிருமல் குணமாகும்.

* வெந்தயத்தை ஊற வைத்து எடுத்து சிறிது ஏலக்காய்ச் சேர்த்து மென்று தின்றால் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

* சிறிது ஏலக்காயுடன் வேப்பிலை மஞ்சள் வைத்து அரைத்து பித்த வெடிப்பு மீது பூசிவர, விரைவில் வெடிப்பு குணமாகும்.

* ஏலக்காயுடன், அதிமதுரம், மிளகு போட்டு கொதிக்க வைத்த நீரை வடிகட்டி பருகினால், வாந்தி, குமட்டல் உடனே நிற்கும்.

* அன்னாசிப்பழச்சாறுடன், ஏலக்காய்தூள் சேர்த்து பருகிவர, மூத்திரக் கோளாறுகள் குணமாகும். நீர்கடுப்பு நீங்கும். சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்களுக்கு, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

* சுக்கு, ஏலக்காய், கிராம்பு இவைகளுடன் சிறிது நீர் தெளித்து மைய அரைத்து, சூடாக்கி கை, கால் மூட்டுகளின் மீது பூசி வர, மூட்டுவலி குணமாகும். ஆரம்பநிலை வாதம் நீங்கும்.

* ஏலப்பொடி, சீரகப்பொடி, மல்லிப்பொடி இவைகளுடன், சிறிது கருப்பட்டி பொடித்திட்டு கலந்து, ஒரு நெல்லிக்காய் அளவு வீதம் காலை மாலை தின்றுவர, பித்த கிறுகிறுப்பு மாறும்.

* திராட்சைச்சாறுடன், ஏலக்காய்த்தூள் கலந்து சாப்பிட்டுவர, நரம்புத்தளர்ச்சி நீங்கும். நரம்புகள் வலுப்பெறும்.

* ஏலக்காய்தூள், சுக்குப்பொடி, மிளகுப்பொடி இவைகளை தேனில் கலந்து சாப்பிட்டுவர, தசைபிடிப்புகள் நீங்கும்.

* செவ்வாழைப்பழத்துடன், சிறிது ஏலக்காய்தூள் சேர்த்துச் சாப்பிட்டால் மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்குபடும்.

* வெல்லத்தைப் பொடித்து நீரில் கலந்து, அத்துடன், எலுமிச்சைச்சாறு, ஏலக்காய் தூள் சேர்த்து பானம் தயாரித்து பருகினால் கோடைத்தாகம் நீங்கும். உடல் குளிர்ச்சி அடையும். சோர்வு மாறி புத்துணர்ச்சி ஏற்படு

* ஏலக்காயின் முக்கியமான பயன் என்னவென்றால். சூரிய வெப்பத்தால், உடலில் வெப்பம் அதிகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் பக்கவாதம் வராது. அதிலும் வெளியே செல்லும் போது ஏலக்காயை வாயில் போட்டு மென்று சென்றால், வெப்ப அலைகள் உடலை தாக்காமல் பார்த்துக் கொள்ளும்.

* ஆயுர்வேத கொள்கையின் படி, ஏலக்காய் உடலில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றிற்கு சிறந்தது. இவை உடலில் இந்த மூன்றையும் சமநிலையில் வைத்து, உடலை ஆரோக்கியமாக வைக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆகவே இதனை உண்டால் நன்கு ஆரோக்கியமாக வாழலாம். மேலும் அதனை உண்பதால், நல்ல குரல் வளத்தையும் பெறலாம்.

* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

* மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ‘ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள்.

* நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

* வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

* விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.

* வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

* பாலுணர்வு தூண்டும் பொருளாகவும் உள்ளது.

தகவல்கள் - இணையம் 

          சமையலில் முக்கியமாக இனிப்புப் வகைகள், கேக், போன்றவற்றிற்கு வாசனை, சுவை அளிக்க கூடிய ஏலக்காய் ஒரு இயற்கை மருந்து என்பது நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம் ‘‘வாசனைப் பொருட்களின் ராணி’’(Queen of the spices) என்று சிறப்புப் பெயர் - செல்லப் பெயர் கொண்ட ஏலக்காய், இந்தியாவில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Thursday, 17 April 2014

தமிழுக்கு நாம் தரும் மரியாதை இதுதானா?

தமிழுக்கு நாம் தரும் மரியாதை இதுதானா?
 
Photo: இந்திய பிரதமரை "வணக்கம்' தெரிவிக்க வைத்த ஜப்பான் தமிழறிஞர் நொபுரூ கராஷிமா

ஜப்பானியத் தமிழறிஞர் நொபுரூ கராஷிமாவுக்கு, டோக்கியோ நகரத்தில் இந்தியப் பிரதமர் "பத்மஸ்ரீ' விருது வழங்கினார்

தமிழை நேசிக்கும் அந்த ஜப்பானியர், தள்ளாத வயதில் சக்கர நாற்காலியில் மேடைக்கு அழைத்து வரப்பட்டபோது, இருகரம் கூப்பி "வணக்கம்' என்று சொன்னதும், பிரதமர் சிரித்துக்கொண்டே அவருக்குத் தமிழில் "வணக்கம்' தெரிவித்ததும் நெகிழ்ச்சியான நிமிடங்கள். 

இந்தியப் பிரதமரை அந்நிய மண்ணில் "வணக்கம்' தெரிவிக்க வைத்தமைக்கே, அந்த மாமனிதருக்கு நாம் ஆயிரம் வணக்கங்கள் தெரிவிக்கலாம்.

கரகோஷத்துக்கு இடையே தனக்கு வழங்கப்பட்ட "பத்மஸ்ரீ' விருதைப் பெற்றுக்கொண்ட நொபுரூ கராஷிமா, "நன்றி' என்று நல்ல தமிழில் கூறியபோது மீண்டும் கரகோஷம். 

நான் கைதட்டவில்லை. டோக்கியோ நகரில் தமிழ் ஒலித்தது கேட்டு, கண்ணீர் மல்க நின்றுவிட்டேன்.

முனைவர் நொபுரூ கராஷிமா சாதாரண அறிஞர் அல்லர். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். 

ஜப்பானிலுள்ள டாய்ஷோ பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் துறையின் பேராசிரியர். 

சீனக் கடற்கரையோரங்களில் 9 முதல் 13-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையிலான பல தமிழ்க் கல்வெட்டுகள் இருப்பதைக் கண்டறிந்தவர்.

"தென்னிந்திய சரித்திரமும் சமுதாயமும்' என்கிற இவரது புத்தகம் கி.பி. 850-1800 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளின் ஆராய்ச்சி நூல். 

விஜயநகரப் பேரரசின் கீழ் தென்னிந்திய சரித்திரம், இந்திய சரித்திரத்தில் அரசுமுறை முதலிய பல படைப்புகளுக்குச் சொந்தக்காரர். 

நம்மிடையே வாழும் தலைசிறந்த உண்மையான தமிழறிஞர்களுள் ஒருவர்.

தமிழுக்குப் பெருமை சேர்த்த ஜப்பானிய அறிஞரை, இந்தியப் பிரதமரே தேடிப்போய் "பத்மஸ்ரீ' விருது வழங்கி கெüரவிக்கிறார். 

நமது தமிழகத்திலுள்ள தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் இது முதற்பக்கச் செய்தியாக வந்திருக்க வேண்டாமா? 

தமிழுக்கு நாம் தரும் மரியாதை இதுதானா?

(தினமணியில் கலாரசிகன்)
இந்தியப் பிரதமரை அந்நிய மண்ணில் "வணக்கம்' தெரிவிக்க வைத்தமைக்கே, அந்த மாமனிதருக்கு நாம் ஆயிரம் வணக்கங்கள் தெரிவிக்கலாம்....

இந்திய பிரதமரை "வணக்கம்' தெரிவிக்க வைத்த ஜப்பான் தமிழறிஞர் நொபுரூ கராஷிமா

ஜப்பானியத் தமிழறிஞர் நொபுரூ கராஷிமாவுக்கு, டோக்கியோ நகரத்தில் இந்தியப் பிரதமர் "பத்மஸ்ரீ' விருது வழங்கினார்

தமிழை நேசிக்கும் அந்த ஜப்பானியர், தள்ளாத வயதில் சக்கர நாற்காலியில் மேடைக்கு அழைத்து வரப்பட்டபோது, இருகரம் கூப்பி "வணக்கம்' என்று சொன்னதும், பிரதமர் சிரித்துக்கொண்டே அவருக்குத் தமிழில் "வணக்கம்' தெரிவித்ததும் நெகிழ்ச்சியான நிமிடங்கள்.

இந்தியப் பிரதமரை அந்நிய மண்ணில் "வணக்கம்' தெரிவிக்க வைத்தமைக்கே, அந்த மாமனிதருக்கு நாம் ஆயிரம் வணக்கங்கள் தெரிவிக்கலாம்.

கரகோஷத்துக்கு இடையே தனக்கு வழங்கப்பட்ட "பத்மஸ்ரீ' விருதைப் பெற்றுக்கொண்ட நொபுரூ கராஷிமா, "நன்றி' என்று நல்ல தமிழில் கூறியபோது மீண்டும் கரகோஷம்.

நான் கைதட்டவில்லை. டோக்கியோ நகரில் தமிழ் ஒலித்தது கேட்டு, கண்ணீர் மல்க நின்றுவிட்டேன்.

முனைவர் நொபுரூ கராஷிமா சாதாரண அறிஞர் அல்லர். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்.

ஜப்பானிலுள்ள டாய்ஷோ பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் துறையின் பேராசிரியர்.

சீனக் கடற்கரையோரங்களில் 9 முதல் 13-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையிலான பல தமிழ்க் கல்வெட்டுகள் இருப்பதைக் கண்டறிந்தவர்.

"தென்னிந்திய சரித்திரமும் சமுதாயமும்' என்கிற இவரது புத்தகம் கி.பி. 850-1800 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளின் ஆராய்ச்சி நூல்.

விஜயநகரப் பேரரசின் கீழ் தென்னிந்திய சரித்திரம், இந்திய சரித்திரத்தில் அரசுமுறை முதலிய பல படைப்புகளுக்குச் சொந்தக்காரர்.

நம்மிடையே வாழும் தலைசிறந்த உண்மையான தமிழறிஞர்களுள் ஒருவர்.

தமிழுக்குப் பெருமை சேர்த்த ஜப்பானிய அறிஞரை, இந்தியப் பிரதமரே தேடிப்போய் "பத்மஸ்ரீ' விருது வழங்கி கெüரவிக்கிறார்.

நமது தமிழகத்திலுள்ள தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் இது முதற்பக்கச் செய்தியாக வந்திருக்க வேண்டாமா?

தமிழுக்கு நாம் தரும் மரியாதை இதுதானா?

(தினமணியில் கலாரசிகன்)

தமிழனின் தற்காப்பு கலை

" தமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை "

ஆதி தமிழன் படைத்த அற்புத கலைகளில் ஒன்று இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இக்கலை தமிழ்நாடு, தமிழ் ஈழம், கேரளா, தற்கால ஆந்திராவின் கிழக்கு பகுதியில் பரவி இருந்தது, இக்கலை சித்த மருத்துவத்தை துணையாக கொண்டு பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது.
இக்கலையை படைத்தவர் சித்தர்களில் சிறந்தவரான அகத்தியர். இது உருவான இடம் பொதிகை மலை (தற்போதைய குற்றால மலை)."தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே" என்ற கி. மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலை சுவடிகளின் வரியே இதற்கு சாட்சி.
" ஜடாவர்மன் பாண்டியன்" என்ற பாண்டிய மன்னன் இக்கலையில் சிறந்து விளங்கினான் பின்னர் பாண்டிய இனம் அழிய தொடங்கியதும் இக்கலையும் அழிய தொடங்கியது. பின்னர் வந்த சோழர்கள் இதை கற்றனர். பின்னர் இந்த கலை இலங்கை சீன போன்ற நாடுகளில் பரவ தொடங்கியது.
காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி சீனாவில் இக்கலையை பரப்பினார். Tenjiku Naranokaku என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "The fighting techniques to train the body from India " என்ற பொருளை தருகின்றது.
இக்கலையானது அனைவருக்கும் கற்றுதரபடமாட்டாது. இதன் ஆசிரியர் தன மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்கவழக்கங்களை அறிந்த பின்னரே கற்று தருவார். இக்கலை மூலம் ஒருவர் தாக்கபட்டால் அதற்கென்று தனியாக உள்ள சிகிச்சை முறையை பயன்படுத்தியே சரிசெய்யமுடியும் என "அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே" என்ற வரிகள் விளக்குகின்றன
உலகில் வேறெந்த இனத்திடமும் காணப்படாத ஓர் அதிசயக் கலை என்பதை அறியும் போது, செந்தமிழ்ப் பரம்பரையின் ஒவ்வோர் உயிரும் உச்சத்தில் நிற்கிறது. சித்தர் பெருமக்களின் தவத்தால் நமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த வர்மக் கலை, யுகம் யுகமாக நம் மூதாதையர்கள் ஆய்ந்து ஆய்ந்து கண்டறிந்த உண்மைகளின் தொகுப்பாகும். தமிழனுக்குச் சொந்தமான இந்த அரிய கலையின் அற்புதப் பயன்பாடுகள் குறித்துத் தமிழர்களே பெருமளவில் அறியாதிருப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இன்னொரு புறம், வர்மக்கலை நடைமுறைக்கு ஒவ்வாத பழங்கலை என்றெல்லாம் தமிழ் மக்களே கேலிபேசிக் கொண்டிருப்பது மேலும் வேதனையாக இருக்கிறது. அதன் வெளிபாடே இந்த பதிவு.
இதர மொழியினர்க்கு “வர்மம்” என்ற சொல்லை வழங்கிய தமிழ் இனம். வர்மக் கலையையும் வழங்கியிருக்கிறது. “தெற்கன் களரி” என்னும் பெயரால் அறியப்படும் திராவிடர்களின் இந்த வர்மக் கலைதான் சீனம் வரை சென்றது என்பதற்குச் சரித்திர ஆதாரங்கள் உள்ளன.
தொலைகிழக்கு நாடுகளில் பௌத்தம் பரவிய வேகத்தில், தமிழனின் வர்மக் கலையும் கூடவே பயணம் சென்று வேறு வேறு வடிவங்களில் வளர்ச்சி கண்டுப் பொலிவடைந்தன என்பதைத் தற்காப்புக் கலைப் பேரறிஞர்களே தயங்காமல் ஒப்புக் கொள்கின்றனர். சீனாவில் வேரூன்றியிருக்கும் குங்ஃபூ மட்டுமல்ல, ஏனைய எல்லாத் தூரக்கிழக்கு நாடுகளின் தற்காப்புக்கலைப் பிரிவுகளான ஜூடோ, கராத்தே, தேக்வாண்டோ ஆகியவற்றுக்கும் தாயாக இருப்பது தமிழனின் களரிதான் என்பதற்குச் சரித்திரம் எண்ணற்ற சாட்சியங்கள் வைத்திருக்கின்றது. இந்தச் சாட்சியங்கள் யாவும் மூத்த தமிழ்க்குடியின் புகழை முரசறைந்து நிற்கும் சத்தியங்கள் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு
வர்ம கலையை அகத்தியர் நான்கு பிரிவுகளாக பிரிக்கிறார் அவை:
தொடு வர்மம்:
இது பலமாக தாக்க படுவதன் மூலம் ஏற்படுகிறது.
தட்டு வர்மம்:
இது ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாமல் மிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும்.
நோக்கு வர்மம்:
பார்வை ஒரே இடத்தில செலுத்தி விளைவுகளை ஏற்படுத்துவதே நோக்கு வர்மம் ஆகும். நோக்கு வர்மம் முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகர் உலகில் எவரும் இல்லை என குறிப்பிடுகிறார்
படு வர்மம் :
நான்கு வகை வர்மங்களில் அபாயகரமானது இதுவே, உடலில் உள்ள வர்ம பகுதிகளில் அடியோ தாக்குதலோ ஏற்படுத்தினால் அதுவே படு வர்ம ஆகும். இத்தாக்குதலுக்கு ஆளானவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இது மிகவும் ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.
ஒரு மனிதன் படுவர்மா புள்ளிகளில் அடிபட்டால் உடனே மயங்கி விழுவான் என்று, வாயில் நுரை தள்ளி நாக்கு வெளியே தள்ளும் என்றும், அடிபட்ட இடம் குளிர்ச்சியாக என்றும் குறிப்பிடுகிறார் எல்லோராலையும் இதை செய்து விடமுடியாது. மிகுந்த பயிற்சி உள்ளவரால் மட்டுமே இது இயலும்.
உடலில் உள்ள முக்கியமான வர்ம புள்ளிகளை பட்டியலிடுகிறார் அவை:
தலை பகுதியில் முக்கியமான 37 வர்ம புள்ளிகளும்
நெஞ்சு பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்
உடலின் முன் பகுதியில் 15 வர்ம புள்ளிகளும்
முதுகு பகுதியில் 10 வர்ம புள்ளிகளும்
கைகளின் முன் பகுதியில் 9 வர்ம புள்ளிகளும்
கைகளின் பின் பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்
கால்களின் முன் பகுதியில் 19 வர்ம புள்ளிகளும்
கால்களின் பின் பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்
கீழ் முதுகு பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்
இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்...
வர்மத்தின் அதிசயங்கள் !!
வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு, இங்கே சில உண்மைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்
ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் தமிழனின் வர்மக்கலையில் இருப்பதுபோல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.
வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.
ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.
ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.
நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும்.
மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.
மேற்கூறிய உண்மைகளைச் சிலர் நம்ப மறுக்கலாம். நக்கல் புரியலாம். ஆனால் வர்மக் கலையின் அரிச்சுவடிகளையேனும் அறிய நேரிடுபவர்க்கு அங்ஙனம் மறுக்கவோ நகைக்கவோ இயலாது என்பது திண்ணம். வர்மத்தின் அதிசயங்களை அறிவார் மட்டுமே அறிவார்.

- தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் - Tamil History and Culture with Selvam Selvam

Beware of Paper Cups

Beware of Paper Cups

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkexXrts754SftJ2GJ2trbjZ3tobtCCOqSSpDIQteynqfCECqex3VldzLQC3mdnQqa6kjOYXxLCdjENQP1YOFDBsT_uzsb5Rry1leGSWwviOHoFrUfhppXWylwCDllxg-KvxP7QV8YmGiN/s1600/Paper+Cups+Side+Effects.JPG

Wax Buildup

  • Some people had been afflicted with gastrointestinal distress for a long time, and couldn't figure out what was wrong with them. Doctors also had a hard time identifying the source of the discomfort, until they got a personal history from these patients. Patients were routinely drinking hot drinks like coffee, tea and cocoa from paper cups. The paper cups are impregnated with wax to make them waterproof. The hot liquid melts some of the wax, which is ingested then builds up along the digestive tract.

Carbon Buildup

  • Even drinking cold drinks in paper cups may affect your health, though not in such a direct way. Paper cups are made using trees as a feedstock. Cutting trees to make paper products lowers net carbon sequestration and oxygen production, and amplifies water pollution, which contributes to poor air and water quality. Moreover; when paper cups are disposed of, they find their way into landfills, where they break down into methane, another powerful greenhouse gas.

Black Mold

  • Paper cups stored in dark, humid environments are excellent hosts for Stachybotrys chartarum, or black mold. Black mold articulates a mycotoxin that can cause asthma attacks, memory loss and pulmonary hemorrhage. Black mold on paper cups may not be that easy to see when it first finds a purchase, because the mold attaches to the places where moisture has been wicked into the cellulose, or the seam around the bottom of the inside of the cup.

BPA

  • Bisphenol A is a substance that imitates some human hormones. Because human hormones exist in such a delicate balance in the body, hormone-mimics can disrupt the endocrine system. Thus, bisphenol A (BPA) is called a hormone disruptor. It is commonly found in plastics, and several states are considering bans on the many plastic products that contain BPA. One of those products is paper cups. Not all paper cups are made with plastic impregnated paper, but some are; some cups made out of recycled paper have been found to contain BPA as well.

Wednesday, 16 April 2014

திருக்குறள் - Thirukural

திருக்குறள் - Thirukural

அறத்துப்பால்

பாயிரம்

கடவுள் வாழ்த்து:

  • குறள் எண் : 1
    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.

    With alpha begins all alphabets;
    And the world with the first Bagavan.
    விளக்கம் :

  • குறள் எண் : 2
    கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்.

    No fruit have men of all their studied lore,
    Save they the ‘Purely Wise One’s’ feet adore.
    விளக்கம் :
  • குறள் எண் : 3
    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்.

    His feet, ‘Who o’er the full-blown flower hath past,’ who gain
    In bliss long time shall dwell above this earthly plain.
    விளக்கம் :

  • குறள் எண் : 4
    வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல.

    His foot, ‘Whom want affects not, irks not grief,’ who gain
    Shall not, through every time, of any woes complain.
    விளக்கம் :

  • குறள் எண் : 5
    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

    The men, who on the ‘King’s’ true praised delight to dwell,
    Affects not them the fruit of deeds done ill or well.
    விளக்கம் :

  • குறள் எண் : 6
    பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்.

    Long live they blest, who ‘ve stood in path from falsehood freed;
    His, ‘Who quenched lusts that from the sense-gates five proceed’.
    விளக்கம் :

  • குறள் எண் : 7
    தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது.

    Unless His foot, ‘to Whom none can compare,’ men gain,,

    ’Tis hard for mind to find relief from anxious pain.
    விளக்கம் :

  • குறள் எண் : 8
    அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது.

     Unless His feet ‘the Sea of Good, the Fair and Bountiful,’ men gain,
    ’Tis hard the further bank of being’s changeful sea to attain.
    விளக்கம் :

  • குறள் எண் : 9
    கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை.

    Before His foot, ‘the Eight-fold Excellence,’ with unbent head,
    Who stands, like palsied sense, is to all living functions dead.
    விளக்கம் :
  • குறள் எண் : 10
    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்.

    They swim the sea of births, the ‘Monarch’s’ foot who gain;
    None others reach the shore of being’s mighty main.
    விளக்கம் :