Saturday, 24 August 2013

பூண்டு மருத்துவப்பயன்கள்

பூண்டு மருத்துவப்பயன்கள்


 

1. மூலிகையின் பெயர் -: பூண்டு.
2. வேறு பெயர்கள் -: வெள்ளைப்பூண்டு.
3. தாவரப்பெயர் -: ALLIUM SATIVUM.
4. தாவரக்குடும்பம் -: AMARYLLIDACEAE.
5. பயன் தரும் பாகங்கள்- வெங்காயம் போன்று பூமிக்கடியில் இருக்கும் கிழங்கு மட்டும்.

6. வளரியல்பு -: வெள்ளை வெங்காயம் பூண்டு எனப்படும். வெள்ளைப் பூண்டு என்றே பலரும் கூறுவர். இதை நடுவதற்கு நாற்று அல்லது பூண்டுப்பல் பார்களில் நட்டுத் தண்ணீர் விட்டு வளர்ப்பார்கள். இதை புரட்டாசி மாதத்தில் நட்டு வளர்த்து பார்களிலிருந்து வளர்ந்த பின் தை மாதத்தில் வெட்டியெடுப்பார்கள். இதன் தாயகம் ஆசியாக்கண்டமாகும். அதன் பின் தான் மேலை நாடுகளுக்குச் சென்றது. இது எரிப்பும் காரமும் உடையது. முகர்ந்தால் நெடியுடையது. பண்டை காலம் தொட்டே மருந்துகளில் பயன்படுத்தப் படுகிறது. பூண்டிலிருந்து அல்லி சாடின் என்ற மருந்தைத் தயாரிக்கிரார்கள். நாட்டுவைத்தியத்தில் பூண்டிலிருந்து மாத்திரைகள், லேகியங்கள், தைலம் ஆகியவை தயாரிக்கப்படுகிறது.

7. மருத்துவப் பயன்கள் -: பூண்டு நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறு துணையாகிறது. புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உடவுகிறது. வெள்ளணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது. ஊளைச் சதையைக் கரைக்கும். தண்டுவட உறையழற்சிக்கும் சிறந்த மருந்தாகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. நீரழிவைக் குணப்படுத்தவும் உதவுகிறது. மாதவிடாய்க் கோளாறுக்கும் மருந்தாகும்.

பூண்டை பாலில் போட்டுக் காய்ச்சி அருந்தி வந்தால் இரத்த அழுத்தம், மாரடைப்பு வராது. இரத்தக் குழாயில் கொழுப்புப் படியாது.

பூண்டைப் பாலில் காய்ச்சியும், ஊறுகாயகவும், லேகியமாகவும் செய்து தொடர்ந்து சாப்பிட்டால் ஊளைச் சதை குறையும். உடல் எடையும் குறையும்.

பூண்டை நசுக்கிய சாற்றுடன் கற்பூரத்தை கரைத்துப் பூச மூட்டு வலி குணமாகும். பூண்டு 50 கிராம், மிளகு 50 கிராம், ஓமம் 20 கிராம், சுக்கு 20 கிராம், எருக்கிலை சாறு 100 மி.லி. ஆமணக்கு நெய் ஒரு லிட்டர் சேர்த்துக் காய்ச்சி வடிக்கவும். இதனை மூட்டு வலி, வீக்கம், வாதம், நரம்பு வலிக்கும் பூசலாம்.

கட்டிகள் கரைய பூண்டை அரைத்துப் பற்றிட வேணடும்.

பூண்டைப் பாலாவியில் வேக வைத்துக் கடைந்து கொள்ள வேண்டும். பனங்கருப்பட்டியும் தேனும், சுக்குத் தூளும் போட்டு இளகலாகச் செய்து வைத்துக் கொண்டு 10 கிராம் அளவு சாபிபிட வேண்டும். வயிற்று வலி, வாய்வுக் கோளாறு யாவும் குணமாகும்.

பூண்டை வதக்கி வற்றல் கழம்பு வைத்துச் சாப்பிட குளிர் தொல்லை நீங்கும்.

இதன் சாற்றை காதில் சில துளிகள் விட காது வலி குணமாகும்.

எந்த ரூபத்தில் பூண்டை உண்டாலும் கபத்தை வெளியேற்றும், மலத்தை இளக்கும்.

பூண்டுச் சாற்றில், சிறிது உப்பு கலந்து உடம்பில் எங்கேனும் சுளுக்கு எற்பட்ட இடத்தில் பூசினால் சுளுக்கு மறையும்.

பூண்டுரசம் கபத்தை நீக்கும்.

குப்பபைமேனி இலையுடன் பூண்டை வைத்து அரைத்துச் சாறு எடுத்து, இச்சாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியே வந்திடும்.

பூண்டு வசம்பு, ஓமம், இவைகளை சம அளவு எடுத்து இடித்து மூன்று நாட்கள் சாப்பிட மாந்த ஜன்னி குறையும்.

பூண்டை நசுக்கி, சாறெடுத்து சாறை உள் நாக்கில் தடவ உள் நாக்கு வளர்ச்சி குறையும்.

பூண்டோடு சிறிது எலுமிச்சை சாறு விட்டு அரைத்து இரு வேளை சாப்பிடக் கீல்வாதம் குணமாகும்.

பூண்டையும், சிறிது உப்பையும் சேர்த்துத் தின்றால்—தீடீரென ஏற்படும் வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், நெஞ்சுக் கரிப்பு குறையும்.

வெள்ளைப் பூண்டு, வெற்றிலை இரண்டையும் அரைத்து தேமல் மீது பூசினால் மறைந்து விடும். அது போல் தொடை இடுக்கிலுள்ள கக்கூஸ் படை மீது தடவி வர அதுவும் குணமாகிவிடும்.

பூண்டை அரைத்துக் கரைத்து வீட்டின் முன் பகுதி, பின் பகுதிகளில் தெளித்திட்டால் நல்ல பாம்பு வராது.

பூண்டை வெல்லம் கலந்து சாப்பிட்டால் உடல் வலி மறையும்.

பூண்டுடன் சிறிது ஓமத்தை நசுக்கிப்போட்டு கசாயம் வைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்க குழந்தைகளின் வாந்தி, கொட்டாவி குறையும்.

வெற்றிலைக் காம்பு, வசம்பு, திப்பிலி, பூண்டு இவைகளைச் சம அளவு எடுத்து வெந்நீரில் அரைத்து உள்ளுக்குக் கொடுக்க—குழந்தைகளின் மாந்தம் குறையும், சளித் தொல்லையும் குறையும்.

வெள்ளைப் பூண்டு, வசம்பு, ஊமத்தை வேர் இவைகளைச் சம அளவு எடுத்து, நன்கு அரைத்து, நல்லெண்ணையில் கலந்து, காய்ச்சி நன்கு சிவந்து வரும்போது இறக்கி விடவும். இந்த எண்ணெயை ஆறாத புண்கள் காயத்தின் மீது பூசினால் ஆறிவிடும்.

பூண்டுத் தைலத்தை உடலில் தேய்த்து வர சருமத்தில் ஏற்படும் நமச்சில், அரிப்பு மறையும்.

பூண்டைப் பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சேர்த்துச் சாப்பிட மூலநோய் நீங்கும்.

ஒரு வெள்ளைப் பூண்டு, ஏழு மிளகு, ஒன்பது மிளகாய் இலை—இவைகளைச் சேர்த்து அரைத்து காலை, மாலை சாப்பிட்டால் குளிர் காச்சல் போய்விடும்.

பூண்டுச் சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு கலந்து காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட நெஞ்சுக் குத்து நீங்கும்.

பூண்டைப் பொடி செய்து தேனில் குழைத்து தலை, புருவத்தில்—பூச்சிவெட்டு முடிவளராமல் இருக்குமிடத்தில் தேய்த்து வர முடி வளரும்.

பூண்டைப் பச்சையாகச் சாப்பிட்டால் வாத நோய் குணமாகும்.

அரைக்கீரையோடு பூண்டு, சீரகம், பச்சை மிளகாய்ச் சேர்த்து புளி சேர்க்காமல் சமைத்துச் சாப்பிட வாயுத் தொல்லை நீங்கும்.

பச்சைப் பூண்டை உண்பதால் உடல் பலம் பெறும். உற்சாகம் ஏற்படும். அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலி மறையும், புளிப்பால் உண்டாகும் எரிச்சல் நீங்கும். இரத்த அழுத்தம் குறையும்.

பூண்டு, மிளகு, கரிசலாங்கண்ணிக் கீரை மூன்றையும் அரைத்துக் காலையில் மட்டும் மூன்று நாட்கள் நெல்லிக்காய் அளவு சாப்பிட சோகை நோய் குணமாகும்.

பூண்டை நசுக்கி சுண்ணாம்பு நீரில் நனைத்துக் கட்ட நகச்சுற்றி குறையும்.

பூண்டையும், துத்தி இலையையும் சேர்த்து லேசாக நசுக்கி நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி எண்ணெயை உடலில் தடவி வர உடல் வலி குறையும்.

காய்ச்சிய பாலில் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டைப் போட்டுப் பருக நன்கு தூக்கம் வரும். இரத்தக் கொதிப்பு அடங்கும்.

பூண்டு, மிளகு, துத்தி இலைகளை ஒவ்வொன்றும் 50 கிராம் வீதம் எடுத்து, இத்தோடு 15 கிராம் வசம்பு சேர்த்து நன்றாக அரைத்துப் பெண்கள் சூதக காலத்தில் சாப்பிட சூதக வலி வராது.

பூண்டை நெய்யில் வறுத்து, உணவு உண்ணும் போது சாதத்தில் சேர்த்து 40 நாட்கள் சாப்பிட வாய்வுத் தொல்லை மறையும்.

பூண்டுச்சாற்றை டி.பி. நோயாளிகள் பருகி வந்தால் டி.பி. குறையும்.

தகவல் - மூலிகைவளம்

No comments:

Post a Comment