3,000 வருடத்திற்கு முந்தைய தமிழ் - இஸ்ரேல் தொடர்புகள்:
தொல்வேதியியலாளர்களால் (Archaeochemists) தற்போதைய இஸ்ரேலின் பல தொல்லியல் ஆய்வு பகுதிகளில் இருந்து இலவங்கப்பட்டையுடன் (Cinnamon) கூடிய தென்னிந்திய மட்பாண்டங்கள் கண்டெடுப்பு.....
இது பீனிசியர்கள் (Phoenicians) ஆண்ட பீனிசியா (Phoenicia) எனப்படும் பல மத்திய தரைக்கடல் பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் தற்போதைய இஸ்ரேலுக்கும் பண்டைய தமிழ்நாட்டுக்கும் கடல்வழி வணிகத் தொடர்பு இருந்ததை மிகத்தெளிவாக இந்த தொல்லியல் ஆய்வு சொல்கிறது.
இது பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே நம்முடைய Spices எனப்படும் இலவங்கம் பட்டை மிளகு (கருமிளகு [Black Pepper] தென்னிந்தியாவுக்கே உரிய முதல்தர மருத்துவ குணமுடைய மிளகு) கிராம்பு (உலகின் முதல்தர கிராம்பு இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் விளைகிறது) போன்ற மசாலா பொருட்களுக்கும் மற்றும் வேறெங்கும் கிடைத்திராத வாசனை பொருட்களான ஏலம், முந்திரி போன்றவற்றிக்கும் பெயர்பெற்று இருந்திருக்கின்றன என்பதற்கு இவ்வாய்வு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. பீனிசியர்களின் மொழியில் பல சொற்கள் தமிழின் தாக்கத்தோடு இருக்கிறதை ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஸ்பானியர்கள் தங்கள் நாட்டினில் கிடைக்கும் பழங்கால கப்பல்கள் இந்திய நாட்டினைச் சேர்ந்தவை என்கிறார்கள். இந்தியாவில் கடல் கடந்த ஆகப்பெரும் வணிகத்தினை செய்தவர்கள் பழங்காலத்தில் யாரிருந்தார்கள்? தென்தமிழகத்தையும் ஈழத்தினையும் (தற்போதைய So-Called இலங்கை) சேர்ந்த பண்டைய தமிழர்கள்.
அதிநவீன தொல்லியல் ஆராய்ச்சியில்தான் எத்தனை பிரிவுகள் உள்ளன Archaeochemistry, Archaeoastronomy, Archaeometallurgy, Zooarchaeology, Geoarchaeology...etc., ஒவ்வொரு பிரிவும் வாழ்கின்ற வாழ்வின் உள்ளார்ந்த உண்மையான அர்த்தத்தினை தேடும் ஆவலை உருவாக்குகின்றன. உண்மையில் இன்றைய அறிவியல் தொழில்நுட்பம் முழுவடிவை அடைய வேண்டுமென்றால் அது வரலாற்றில் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்ட "NON-POLLUTION TECHNOLOGY"-யை திரும்ப கொண்டுவருவதில் தான் இருக்கிறது. நாம் தற்பொழுது பயன்படுத்தும் அனைத்து வாழ்வியல் முறைகளும் நடைமுறை தொழில்களும் இயற்கையை சிதைக்கும் இயற்கை சுழற்சிகளை அறுக்கும் "POLLUTED TECHNOLOGY"-யாக இருப்பதில்தான் வாழ்வின் இன்னல்கள் சிக்கல்கள் இருக்கின்றன. மனித மனங்கள் நஞ்சாகிவிட்டன. சுற்றுசூழலை அது பாதித்துவிட்டது. மனித மனம் வரலாற்றினை ஆய்ந்து அதனை தற்காலத்திற்கு ஏற்ப மாற்றினால் நவீன அறிவியல் முழுமையடையும்.
மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் காண்பிக்கும் வரலாறு சார்ந்த முயற்சிகள் பிரமிப்பாக இருக்கின்றது நமக்கு. ஆனால் அதுதான் இயல்பான குணம். தன் நாட்டை (அது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து போன்று Settlers Country வந்தேறிய நாடாக இருந்தாலும்) பற்றிய அறிவு தமக்கு இருக்கவேண்டும் என்று முழுக்க முழுக்க வாழ்வை அர்பணிக்கிறார்கள். அத்தனை அறிவியல் தொழில்நுட்பங்களும் அதில் பயன்படுத்தப்படுகின்றன. மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கிய ஒரு பண்டைய கப்பலின் Digital 3-D Model-யை உருவாக்கி அதை வைத்து முழுக்கப்பலின் மரத்தாலான மாதிரியை உருவாக்கி விடுகின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். காவிரிப்பூம்பட்டினம் ஒரு காலத்தில் பத்தாயிரம் கலங்களை நிறுத்திவைத்து வணிகம் செய்த இயற்கைத் துறைமுகம். மிகப்பெரிய கலங்கள் கடல் மட்டுமல்லாது வணிகத்திற்காக சோழநாட்டின் ஊடே காவிரியில் உள்புகுந்து ஊடேறி வந்து சென்றுள்ளதாகக்கூட செய்தியுண்டு.
"தூம்பு" எனப்படும் தொழில்நுட்பத்தினை அன்றைக்கு நம் தமிழ் மூதாதையர் கையாண்டு நீர்மேலாண்மை செய்துள்ளனர். ஆனால் இன்று நம் நாட்டில் இவைகளை மீட்டெடுக்க வரலாற்றை பதிவுசெய்ய ஆள் இல்லை. மாறாக தொல்லியல் துறையையே மூடிவிடலாமே என்று முடிவெடுத்ததாக கூட செய்தி வந்தது. தொல்லியத்திற்கு உண்மையான அர்த்தத்தையும், அள்ள அள்ள குறையாத வளத்தினையும் வரலாற்றினையும் தன்னகத்தே வைத்துள்ள தமிழ் பண்டைய வரலாறு இன்று மறுக்கப்படுகிறது. நம் நாட்டின் வரலாற்றினை நாமே மறுத்ததால் இன்னபிற மேற்கத்திய ஆய்வாளர்களின் ஆராய்ச்சி நமக்கு மாபெரும் வியப்பான செய்தியாக இருக்கிறது...
தற்பொழுது கடலியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் திரு. ஒரிசா பாலு (Orissa Balu ) அவர்களால் இவ்வரலாறு ஆதாரப்பூர்வமாக மீட்டெடுக்கப்படுகிறது. மேலும் மேற்கத்திய தொல்லியல் ஆராய்ச்சியாளர்களும் உண்மை வரலாற்றினை பதிவு செய்தார்களேயானால் தமிழ் வரலாறு புதுப்பிக்கப்படும். மனிதனும் இயற்கை படைப்பு தான். ஆதலால், மிக விரைவில் சரியான பாதையில்
தன் பயணத்தை நவீன அறிவியல் ஆராய்ந்து கொண்டுசெல்லும் என நம்புவோமாக.
நன்றி:
http://archaeology.org/
இஸ்ரேலில் கண்டறியப்பட்ட அம்மட்பாண்டம் இதுவே |

No comments:
Post a Comment