Thursday, 29 August 2013

தமிழக அரசு பாடம் படிக்குமா ?

 தமிழக அரசு பாடம் படிக்குமா ?

தமிழ் மொழியை வாழ வைக்கும் கனடா அரசு ! தமிழக அரசு பாடம் படிக்குமா ? 



        நாங்கள் வாழும் ஊர் ஒரு சிறு கிராமம். இந்த ஊரின் பெயர் கொல்போன். இது கனடாவின் ரொறன்ரோ மாநகரிலிருந்து சுமார் இருநூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பெரும்பான்மையாக விவசாயிகள் மட்டுமே வாழும் இந்த ஊரின் மக்கள் தொகை வெறும் இரண்டாயிரம் மட்டும்தான். இந்த ஊரில் பள்ளிக்கூடம் கிடையாது. பக்கத்து ஊரிலிருக்கும் பள்ளிக்கூடத்துக்குத்தான் புலிக்கோ, தமிழ்க்கோ போய் வருகிறார்கள். அவர்களது பள்ளிக்கூடத்தில் வேற்றினத்தவர், வேறு நிறத்தவர் எவரும் இல்லை. இவர்கள் இருவரும்தான் வெள்ளை அற்ற வேறுபட்ட நிறத்தைக் கொண்டவர்கள். 

இதையெல்லாம் ஏன் இப்போது சொல்கிறேனென்றால், புலிக்கோ, தமிழ்க்கோ இருவருக்கும் இரண்டரைமாத கால விடுமுறையின்பின் பள்ளிக்கூடம் அடுத்த வாரம் தொடங்குகிறது. பள்ளியின் முதல்வாரம், புலிக்கோ (முதலாம் வகுப்பு மாணவர்கள்) எந்த நாள் வரவேண்டும், தமிழ்க்கோ எந்த நாள் வரவேண்டும் (மேல் மழலையர் வகுப்பு) என்ற விவரங்களோடு பெற்றோருக்கான அறிவித்தல் ஒன்றைப் பள்ளி நிர்வாகம் அனுப்பியுள்ளது. அதன் கூடவே மூன்று இணைப்புகள் இன்று அஞ்சலில் வந்திருந்தன. அவற்றில் குழந்தைக்கு கணிதம், விஞ்ஞானம் ஆகியவற்றை எப்படிச் சொல்லிக்கொடுக்கவேண்டும் (5 வயதுக்குழந்தைக்கு எவ்வாறு வாழ்வியல் அனுபவங்களை வைத்து கணிதம் சொல்லிக்கொடுப்பது, 6வயதுக்குழந்தைக்கு எப்படிச்சொல்லிக்கொடுப்பது) என்று மூன்று சிறு நூற்கள் அந்த அறிவித்தலோடு இருந்தன. 

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அவை அனைத்தும் தமிழில் இருந்தன. அதாவது தமிழ்ப்பெற்றோர் (ஆங்கிலம் தெரியாதவிடத்தும்) சரியான வகையில் இத்தகவல்களைப் புரிந்துகொண்டு குழந்தைகளுக்கு நேர்த்தியான முறையில் சொல்லிக்கொடுக்கவேண்டும் என்ற அக்கறையோடு, கூடுதல் சிரத்தையெடுத்து தமிழில் இந்தத் தகவல்கள் பெறப்பட்டு (மொழிபெயர்க்கப்பட்ட நூற்கள்) எமக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

அத்தோடு இன்னும் ஓர் ஆச்சர்யம் என்னவெனில், இந்த நூற்களோடு ஒரு வேண்டுகோள் பக்கமும் இணைக்கப்பட்டிருந்தது. 

தமிழன் என்பதற்காகவே அடையாளப்படுத்தப்பட்டு கொல்லப்படும் நாட்டில் பிறந்து, என் தாய்மொழி கண்கூடாகவே அழிக்கப்படும் மற்றொரு தமிழா் நாட்டில் வளர்ந்து, எனக்கும் என் மொழிக்கும் எந்தவித தொடர்புமற்ற இந்தக் கனடிய நாட்டில் வாழ்ந்து தொலைக்கவேண்டியிருக்கிறதே என்று விதியை நாள்தோறும் நொந்துகொள்ளும் என்னை, என் மனதை ஆசுவாசப்படுத்திய அந்த “வேண்டுகோளை“, 'தாய்மொழி தமிழை எதற்குப் படிக்கவேண்டும்? அதனைப் படிப்பதன் பயன் என்ன? தமிழில் பேசுவது நாகரீகம் இல்லை, தாய்மொழிக்கல்வி அவசியமில்லை' என்று தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டே தன் தாய்மொழியை எள்ளிநகையாடுபவர்கள் நிச்சயம் படிக்கவும். அந்த வேண்டுகோள் பின்வருமாறு: 
-----------------------
If you want your children to succeed, 
then HOLD ON to your HOME Language!

Children who know and use the home language:
-learn traditions
-have an additional worldview
-have a wide choice of college/university acceptance
-have a greater choice in the job market

The two languages work together. Your child's knowledge of the home language will help him/her learn English.
What is learnt in one language is easily transferred into the other language. 

Parents...

- please encourage your children to use the family language in the home. 
- take every opportunity to Talk with your children. 
- using two languages will NOT confuse your children.
- mixing languages is normal for bilinguals. This is a sign of mastery of two linguistic systems and is NOT a sign of language confusion. 

ஒளிப்படத்தில்- கனடியத் தமிழ்க் கல்லுாரியி்ன் “நாற்றுமேடை” நிகழ்வில் தமிழ்க்கோ 

- அன்பு அன்பு


- முகநூலிளிருந்து 

No comments:

Post a Comment