பறிபோன இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்கள்
பழங் காலம் தொட்டே ஏராளமான வளங்கள் கொண்ட நாடாக இந்தியா
இருந்திருக்கிறது. ஆனால், காலனி ஆதிக்கத்துக்குப் பிறகு இந்தியாவில் இருந்த
பொக்கிஷங்கள் பல காணாமல் போயிருக்கின்றன.
கேரளாவின் பத்மநாபா கோயில் ரகசிய அறையிலிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கப் புதையல் மற்றும் பொக்கிஷங்கள் நம் அனைவரின் புருவங்களை உயர்த்த செய்தது. இதேபோல, இந்தியாவின் பல்வேறு சமஸ்தானங்களிலும் நமக்கு தெரிந்த தெரியாத அரண்மனைகளிலும் விலைமதிப்பற்ற வளங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் பல இப்போது இந்தியாவில் இல்லை.
ஆந்திர மாநிலத்தில் உருவாகி பாரசீக, மொகலாயா, துருக்கிய ஆட்சியாளர்களின் கைகளுக்கு மாறி தற்போது பிரிட்டன் அரச மணிமுடியை அலங்கரித்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் பொக்கிஷம், கோஹினூர் வைரம்.
முகலாயப் பேரரசர் ஷாஜஹானின் மயில் சிம்மாசனத்தில் இருந்த இந்த வைரம், இந்தியாவின் ஆயிரம் ஆண்டு வரலாற்றைப் பார்த்திருக்கிறது. ஆனால், இன்று வரை அதனை பிரிட்டன் அரசு இந்தியாவுக்குத் திருப்பித் தர மறுத்து வருகிறது.
கோஹினூர் மட்டுமல்ல, அது இடம் பெற்றிருந்த மயில் சிம்மாசனமேகூட தற்போது இந்தியா வசம் இல்லை. வாரிசு உரிமைச் சண்டைகளில் அது கை மாறிப் போனதாக சொல்லப்படுகிறது. கொஹினூர் வைரம், வைடூரியங்கள், மாணிக்கம், முத்து, மரகதம் என அங்குலம் அங்குலமாக ஆடம்பரத்தை பறைசாற்றி இருந்தது இந்த மயில் சிம்மாசனம். 1739-ஆம் டெல்லியிலிருந்து பாரசீக ஆட்சியாளர்களால் கவரப்பட்டு, பின்னர் அழிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிகிறது.
2.3 மீட்டர் உயரமுள்ள புத்தா சாக்யமுனி எனப்படும் சுல்தான்கஞ்ச் புத்தரின் வெண்கலச் சிலை. மிக அரிதாகக் கருதப்படும் இந்த பொக்கிஷம் தற்போது பிர்மிங்கம் புத்தா(BIRMINGHAM BUDDHA) என்ற புதிய பெயரில் பிரிட்டனின் பிர்மிங்கம் அருங்காட்சியகத்தில் உள்ளது.
தென் கிழக்கு இந்தியாவின் புத்தமத ஸ்தூபிகளில் இருந்த புகழ் பெற்ற அமராவதி சுண்ணாம்பு கல்வெட்டு இரு பிரிட்டன் ராணுவத்தினரால் கண்டறியப்பட்டு, பிரிட்டன் அருங்காட்சியத்திற்கு விற்கப்பட்டது. 2 ஆயிரம் ஆண்டுப் பழமையான இந்தக் கல்வெட்டு புத்தரின் வாழ்க்கைக் குறிப்புகளைக் கொண்டிருக்கிறது. போஜசாலா கோவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட சரஸ்வதி சிலை ஒன்றும் இன்று பிரிட்டன் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.
இவை தவிர திப்பு சுல்தான் மற்றும் ஷாஜஹானின் பெயர் பொறிக்கப்பட்ட வரலாற்று போர் வாள் இந்தியாவில் இருந்து திருடப்பட்டு பின்னர் லண்டனில் விடப்பட்ட ஏலத்தில் திப்பு சுல்தான் போர்வாள் இந்தியரான விஜய்மால்யாவால் பல கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டது. மற்றொரு வாளை யார் வாங்கினார் என்பது கூட தெரியவில்லை.
இதுபோன்ற இந்திய அடையாளங்களை திரும்ப கொண்டுவர தொல்லியல் துறை யுனெஸ்கோவின் உதவியை நாடியுள்ளது. ஆனால் தங்களது 1963-ஆம் ஆண்டு அருங்காட்சியக சட்டப்படி எந்தவொரு பொருளை எடுக்கவோ, நகர்த்தவோ கூடாது என பிடிவாதம் பிடித்து வருகிறது பிரிட்டன் அரசு.

நன்றி
No comments:
Post a Comment