Wednesday, 7 August 2013

இராவணன்



 
         
            இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும், அவனின் வீரம்போற்றுதலுக்குரியது மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான். உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். 

            ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் இராவணன் சிறந்த சிவபக்தன். இராமனை விட மேலானவன். இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார். பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாக இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல - "வானோடும் களம் இறங்குமிடம்" போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவனாகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகிறன

இராமாயணத்தில் இராவணன்

         இராமாயணத்தில் இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்தி சென்றதாகவும், இலங்கையில் சிறைவைத்துத் திருமணம் செய்ய எத்தனித்ததாகவும், இவன் பல பெண்களை பலாத்கரமாக தன் மனைவிகளாக அடைந்ததாகவும் சித்தரித்தனர். மண்டோதரி, வேதவதி, ரம்பா ஆகியோர் இவர் மனைவியர்கள். இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன - நாட்டு நிலைமை பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்து இப்படிச் சொல்வது வழக்கம். அதாவது இராமன் ஆண்டால் நாடு நன்றாக இருக்கும் என்றும், இராவணன் ஆண்டால் நாடு மோசமாக இருக்கும் என்றும் கர்ண பரம்பரையாக சொல்லிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், இராமன் ஆட்சி என்று சொல்லப்படுவது, சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த செருப்பின் ஆட்சிதான். அந்த ஆட்சியின்போது இராமனும் சீதையுமே காட்டில் திரிய வேண்டியிருந்தது என்றால், அந்த நாட்டு மக்கள் எங்கெங்கே திரிந்திருப்பார்களோ! வனவாசம் முடிந்து நாடு திரும்பிப் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பிறகாவது ராமனால் சிறப்பாக ஆட்சி செய்ய முடிந்ததா? இல்லை.... யாரோ எதையோ சொன்னார்கள் என்று மனைவி சீதையை தீக்குளிக்கச் செய்த பெண்ணடிமைத்தனம்தான் அந்த ஆட்சியில் நிலவியது. அதன்பிறகும் அவளைக் காட்டுக்கு அனுப்பிவிட்டான் மகாராசன் இராமன். இப்படியெல்லாம் சீதை என்ற பெண் தன்னந்தனியாக திரிய வேண்டியிருந்ததை மனத்தில் வைத்துத்தான், நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியும், “நடு இரவில் ஒரு பெண் உடல் நிறைய நகைகளை அணிந்துகொண்டு தன்னந்தனியாக நடக்கும் சூழ்நிலை இந்த நாட்டில் எற்பட்டால் அதுவே இராமராஜ்ஜியம்” என்றார் போலும். இராவணன் ஆட்சி எப்படி நடந்தது? அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஒங்கியிருந்த சூழலையும் கம்பன் வர்ணித்திருக்கும் விதத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். நல்லது நடப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல்காரர்கள் அதைக் கெடுக்க நினைப்பது போல, ஓங்கியுயர்ந்த மாளிகைகளைக் கொண்ட இலங்கையை இராம பக்தனான அனுமன் தன் வாலில் பற்றிய தீக் கொண்டு அழித்ததையும் இராமாயணம் வர்ணிக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இராமனின் அயோத்தியைவிட ஆயிரம் மடங்கு உயர்வானதாகவே இருந்திருக்கிறது இராவணன் ஆண்ட இலங்கை. அப்புறம் ஏன் நல்ல ஆட்சியை இராமன் ஆட்சி என்றும் மோசமான ஆட்சியை இராவணன் ஆட்சி என்றும் சொல்கிறோம்? இந்தக் கேள்விக்கான விடையைத்தான் 60 ஆண்டுகளுக்கு முன்பு உரக்கச் சொல்லின திராவிட இயக்கங்கள். ஆரிய ஆதிக்கத்தின் விளைவால், தமிழ் மகாகவியான கம்பன் ஆரியத்தின் தாசானு தாசனாகி, வால்மீகியையும் மிஞ்சிடும் வகையில் கற்பனைப் பாத்திரங்களான இராமனைத் தெய்வம் என்றும் தமிழ் மன்னனான இராவணனை அரக்கன் என்றும் சித்திரித்து இராமாயணத்தைப் படைத்தான். கவிச்சுவையிலும், பக்தி சொட்டும் தமிழிலும் கம்பன் பின்னி எடுத்திருந்த காரணத்தால் இராமனே நமக்கும் தெய்வமானான். தமிழ் மன்னனான இராவணன் அரக்கன் ஆனான். இந்த ஆரியப் பண்பாட்டு படையெடுப்பை விரட்ட வேண்டும், காப்பியங்கள் வழியாகத் தமிழ் மக்களின் மனங்களில் வரையப்பட்டுள்ள இழிவான சித்திரம் அழிக்கப்படவேண்டும் என்பதைத் திராவிட இயக்கங்கள் போர்க்குரலோடு வலியுறுத்தின. கம்பராமாயணம் தமிழர்களை இழிவுபடுத்தும் காப்பியமே என்பதை நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும், அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களுடனும் மேடையில் வாதிட்டு வென்று காட்டினார் பேரறிஞர் அண்ணா. அடுத்தவன் எழுதியதைக் குற்றம் சொல்லத்தான் தெரியுமா? தமிழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் உங்களால் ஒரு காப்பியத்தை படைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பியவர்களும் அப்போது உண்டு. அத்தகையவர்களின் வாயை அடைக்கும் விதத்தில் புலவர் குழந்தை அவர்களால் படைக்கப்பட்டதுதான் இராவண காவியம். வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணன் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைக்கும் மாற்றுக் காப்பியத்தைப் படைத்தார் புலவர் குழந்தை. அவரது படைப்பு, கற்பனைப் பாத்திரமான இராவணனின் பழியை மட்டும் துடைக்கவில்லை. நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமைகளையும் மீட்டெடுத்தது. இலக்கியத்தின் இலக்கு எதுவாக இருக்கவேண்டுமோ அதனை உணர்ந்து செய்யப்பட்டதே இராவண காவியம் எனும் பெருங்காப்பியம் குடும்பம் இராவணனது தந்தை வைச்ரவ மகரிஷி ஆவார். வீடணன், கும்பகர்ணன், சூர்ப்பணகை ஆகியோர் உடன் பிறப்புகளாவர்

வேத வித்தகன்

           இராவணன் சாம வேதத்தில் நிபுணத்துவம் பெற்றவன். இதனை இராமாயணமே எடுத்தியம்புகிறது. இவன் தனது கை நரம்புகளால் சாம கானம் பாடி சிவனை மகிழ்வித்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது. கைலாயத்தைத் தூக்கும் இராவணன் (இராவணன் பத்துத்தலை கொண்ட இலங்கை அரசன். இராமனுக்கு எதிரியான இவன் மிகச் சிறந்த சிவபக்தன். புராணங்களில் இராட்சசனாகச் சித்தரிக்கப் படுபவன்.) கைலாயத்தை தன் நாட்டில் வைக்க விரும்பிய இராவணன் வடக்கே சென்று, எந்த வித கடினமும் இல்லாமல் இமயத்தைத் தூக்கி தன் நாடு நோக்கி நடந்தான். மலையில் திடீரென ஏற்பட்ட ஆட்டத்தை உணர்ந்த பார்வதி தேவி பாதுகாப்பு வேண்டி சிவனிடம் ஓட, நடந்ததை அறிந்த சிவன், இராவணனுக்கு ஒரு பாடம் புகட்ட விரும்பி தன் இடது கட்டைவிரலால் மலையை சற்று அழுத்த, தப்பிக்க வழியின்றி கீழே மாட்டிக் கொண்டான் இராவணன். ஆனால் சிவபக்தர்களுக்குத் தெரியும் சிவனை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று. தன் தொடை நரம்பினால் வீணை போன்ற ஏற்பாடு செய்து, சாம வேதப் பாடல்களைப் பாட, மனம் இரங்கினார் சிவ பெருமான், இராவணனைச் செல்ல அனுமதித்தார். மற்ற தெய்வங்களுக்கு சொல்லப்படாத சிறப்பு இதுவே. சிவபெருமானுக்கும் அவர்தம் அடியார்களுக்கும் மிகச் சிறந்த உறவு உண்டு. ஒருத்தரை யொருத்தர் மதிக்கும் பண்பு வந்துவிட்டார் ஏது இங்கே பிரச்சினைகள்?

இராவணன் நீர்வீழ்ச்சி

          இராவணன் நீர்வீழ்ச்சி இலங்கையின் ஊவா மாகாணத்தில் கிரிந்தி ஆற்றில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும். இது எல்லை - வெள்ளவாயா பெருந்தெருவிற்கு அருகே அமைந்துள்ளது. பாதையில் இருந்தபடியே இதனை பார்வையிடமுடியும். இதன் நீர் ஊற்று வெவதன்னை மேட்டுநிலக்காடாகும். நீர்வீழ்ச்சி மூன்று படிநிலைகளில் பாய்கிறது. முக்கிய பாய்ச்சல் 9 மீட்டர் (30 அடி) மட்டுமேயாகும். நீர்வீழ்ச்சி சுண்ணாம்புக்கல் பறையில் அமைந்துள்ளது எனவே பாறை அறிப்பு துரிதமாக நடைபெறுகின்றது. மானசரோவர் ஏரி கைலை மலையில் உள்ள நன்னீர் ஏரி, இது உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி என்று கருதப்படுகின்றது. இதன் அருகே ராட்சதலம் ஏரியும் உள்ளது. இந்த ராட்சதலம் ஏரியில் இருந்து இராவணன் தவம் புரிந்ததாக ஒரு கதை உள்ளது. இராவணன் நீர் வீழ்ச்சி இராமாயணத்தோடு தொடர்புடையதாக நம்பப்படுகிறது. நீர்வீழ்ச்சிக்கு பின்னால் அமைந்துள்ள குகையில் சீதையை இராவணன் மறைத்து வைத்திருத்தார் என்பது தொன்மையான நம்பிக்கையாகும்.

இராவணன் காலத்து ஆலயங்கள்
திருக்கேதீசுவரம் 1930களில்


             இந்தப்பதிவில் இராவணன் காலத்து ஆலயங்கள், இராவணனின் வேறு சில வரலாற்று எச்சங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். இராவணன் காலத்து ஆலயங்கள் என்று குறிப்பிடுவதனால் அவை இராவணனால் கட்டப்பட்டன என்று பொருள் இல்லை. விஜயன் வருகைக்கு முன்னரே இலங்கையில் இருந்த சைவாலயங்கள் என்று இவற்றைக்கூறலாம். விஜயனின் வருகைக்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த இயக்கர் நாகரின் ஆட்சியில் அக்காலத்து மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. அக்கால மன்னர்களில் இராவணன் குறிப்பிடக்கூடிய ஒருவனாகையால் இவ்வாறு இராவணன் காலத்து சைவாலயங்கள் என்று குறிப்பிட்டேன். "வித்துசேசன் இருபத்தொன்பது வருடங்களும், மூன்று மாதங்களும் இலங்கையை ஆண்டான். இவனுக்குப் பின் இவனது மகன் சுகேசன் என்பவன் மணிபுரம் என்னும் கதிரவன் மலையைத் தலைநகராக்கி இலங்கையை ஆட்சி புரிந்தான். ஆதிகாலத்தில் மயனால் கட்டப்பட்ட திருக்கேதீசுவரம், முனீசுவரம், நகுலேசுவரம் என்னும் சிவாலயங்களை சுகேசன் பழுது பார்த்து அவற்றுக்கு அநேக நகைகளையும், நிலங்களையும் கொடுத்தான். " இவ்வாறு கணபதிப்பிள்ளையின் இலங்கையில் புராதன சரித்திரம் என்ற நூலில் கூறப்படுகின்றது. சுகேசன் என்பவன் இராவணனுக்கு முன்னைய காலத்தில் இலங்கையில் ஆண்ட ஒரு மன்னன் என்பது பற்றி முந்தய பதிவில் பார்த்தோம்.

                 இதைவிட.....இலங்கையில் விஜயமன்னன் குடிகளை வசப்படுத்தும் நோக்குடன் சமய வழிமுறைகளை சரியாக கடைப்பிடித்தான். இலங்கையில் ஆட்சியை அமைக்கு முன்னரே நாலு திசைகளிலும் சிவாலயங்களை எழுப்பினான். கீழ்திசையில் கோணெசர் கோவிலையும், மேல்திசையில் கேதீச்சர கோவிலையும் பழுதுபார்த்து, அக்கோவில்களில் பூசை நடாத்தும் பொருட்டு காசிப் பிராமணர்களை அழைத்துவந்தான் எனக் யாழ்ப்பாண வைபமாலையில் கூறப்படுகின்றது. இதிலிருந்து விஜயனின் வருகைக்கு முன்னரே இலங்கையில் இருந்த ஈழத்தின் பழமைவாய்ந்த சைவாலயங்கள் இவை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இவ்வாலயங்க்ள் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம். திருக்கேதீஸ்வரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள மன்னார் மாவட்டத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிவன்கோவில். ஈழத்தின் பழங்குடியினராகிய நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது. இச்செய்தியால் சைவசமயிகளின் தொன்மையையும் பெருமையையும் இத்திருக்கோயில் இயம்புகின்றது. திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையில் திருகோணமலையில் உள்ள திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும். இதுவும் இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜா என்ற மன்னன் கி.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன. சிவபக்தனாகிய இராவணனால் இங்குள்ள சிவலிங்கம் தாபிக்கப்ப்ட்டதாக ஐதீகம். இதுதவிர புத்தள மாவட்டத்தில் சிலாபம் என்ற இடத்தில் காணப்படுகின்ற முன்னேஸ்வரம், வடபதியில் கீரிமலைப்பகுதியில் அமைந்துள்ள நகுலேஸ்வரம், தென்பகுதியில் காணப்படுகின்ற தொண்டீஸ்வரம் ( சரியாக தெரியவில்லை ) என்பன இலங்கையில் ஆதிக்குடிகளான இயக்கர் நாகர் என்ற இனத்தவர்கள் காலத்து ஆலயங்களாகும். இவ்வாலயங்கள் யாரால் கட்டப்பட்டன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை என்றே கருதுகிறேன். இவ்வாலயங்கள் பற்றிய பழைய புராணக் கதைகளை பற்றி அறிய முற்பட்ட போதிலும் அவை பற்றி எனக்கு ஏதும் தெரியவில்லை. வாசகர்கள் யாராவது தெரிந்திருப்பின் குறிப்பிடலாம். அல்லது அவைகள் பற்றி அறியும்போது அவற்றை இங்கு நான் இணைத்துவிடுகிறேன். இங்கு மிகவும் வேதனைப்படக்கூடிய விடயம் என்னவெ
ன்றால்.... தமிழர்களின் தொன்மையைக்கூறும் இவ்வாலயங்கள் சில இன்று சிங்கள மயப்படுத்தப்பட்ட சிங்களவர்கள் வாழும் பகுதியில் அமைந்துள்ளன. உதாரணமாக கதிர்காம முருகன் ஆலையத்தையும், மாத்தறை மாவட்டத்தில் தேவேந்திர முனையில் அமைந்துள்ள தொண்டீஸ்வரர் ஆலையத்தையும் குறிப்பிடலாம். போத்துக்கீசரால் அழிக்கப்பட்ட இத்தொண்டீஸ்வரர் ஆலயம் சிங்கள மக்களால் விஸ்ணு ஆலயமாக மாற்றப்பட்டுள்ளது. இது தவிர திருமலை கோணேச்சரர் ஆலயம், கீரிமலை நகுலேஸ்வர ஆலயம், மாந்தோட்ட கேதீச்சர ஆலயம், சிலாபத்து முன்னீஸ்வரர் ஆலயம் என்பன நினைத்தவுடன் சென்றவர முடியாத, மக்களே இல்லாத சூனியப் பிரதேசங்களில் அமைந்துள்ள ஆலயங்களாகும். இவற்றுக்கு சென்றுவர பல கட்டுப்பாடுகள் இராணுவத்தினரால் விதிக்கப் பட்டுள்ளமையால் இக்கோவில்களுக்கு செல்லும் பக்தர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்த ஆலயங்கள் தவிர இராவணனுடன் தொடர்புடைய வேறு சில வரலாற்று எச்சங்களைப்பார்க்கலாம்.
 

இராவணன் வெட்டு

          இராவணன் வெட்டு திருகோணமலையில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்துக்கு அண்மையில் அமைந்திருக்கிறது. இதுபற்றிய புராணக்கதைகள் எனக்கு தெரியவில்லை. தெரியக் கிடைத்தால் இங்கு இணைத்து விடுகிறேன். இதுமட்டுமல்ல திருக்கோணேச்சரம் ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் சிவ பக்தனாகிய இராவணனால் தான் ஸ்தாபிக்கப்பட்டதாக ஒரு ஐதீகமும் உள்ளது.

சிகிரியாக் குன்றம்

              சிகிரியாக்குன்றமானது 6ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த காசியப்பனால் அமைக்கப்பட்டது என்றுதான் வரலாற்று நூல்களில் காணப்படுகின்றது. இருப்பினும்.... இராவணன் இறுதியாக ஆட்சி செய்த இடம் சிகிரியா, இராவணனின் மறைவுக்கு பின்னர் ஆட்சிப்பொறுப்பை பெற்றுக்கொண்ட விபீஸணன் தனது தலைநகரத்தை சிகிரியாவில் இருந்து களனிக்கு மாற்றினான். இன்றும் களனியில் உள்ள ஒரு விகாரையில் விபீஸணனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் இராவணனின் ஒலைச்சுவடியில் காணப்படுகின்றன என்று தினக்குரலில் அண்மையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் படித்தேன். இது பற்றிய மேலதிக விபரங்கள் தெரியவில்லை.

இராவணன் சிறியகோட்டை பெரிய கோட்டை

            இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் கதிர்காமத்திலுள்ள கதிரைமலைமீது (ஏழுமலை) நின்று தென் கடலை நோக்கினால் குடா வடிவிலான கற்சிகரமும், கற்கொடியும் ஒன்று கடற்தளத்தின் மீது தெரிவதனை இன்றும் அவதானிக்கலாம். இந்த இரண்டு பாறைகளும் இராவணனின் சிறிய கோட்டை பெரிய கோட்டை என்று அழைக்கப்படுகின்றன.

இராவணன் ஆட்சி

         மகாவம்சதின்படி இலங்கையின் வரலாறு விஜயன் வருகையோடுதான் ஆரம்பிக்கிறது. இருப்பினும் அதற்கு முதலில் இயக்கர் நாகர் என்ற ஆதிக்குடிகள் இலங்கையில் வாழ்ந்ததாக மகாவம்சத்தில் கூறப்படுகின்றது. இவ்வாறு இலங்கையின் ஆதிக்குடிகளாக கருதப்படும் இயக்கர் நாகர் பற்றியும், இவர்களோடு இராவணனுக்கு உள்ள தொடர்புகள் பற்றியும் பல ஐதீகங்கள் பல உள்ளன. இவற்றுக்கு மேலாக இலங்கையானது முதலில் இந்தியத் துணை கண்டத்துடன் முதலில் இணைந்தே இருந்தது பின்னர் ஏற்பட்ட ஒரு கடற்கோள் அழிவின்போது நிலத்தின் பலபகுதிகள் நீரில் தாழ்ந்துபோக இந்திய துணைக் கண்டத்திலிருந்து இலங்கையானது தனிமையாக்கப்பட்டது என்ற ஒரு ஐதீகம் பலரால் கூறப்படுகின்றது. அதற்கு இன்னும் ஒரு படி மேலாக பைபிளில் கூறப்படுகின்ற நோவா காலத்தில் பூமியில் ஏற்பட்ட பேரழிவும் இந்நிகழ்வுடன் சேர்த்து கூறப்படுகின்றன. இவைகள் எல்லாம் வெறும் ஐதீகங்களே தவிர இதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை. இப்போது இலங்கைத் தீவு உருவான கதைபற்றியும்... அங்கு வாழ்ந்த ஆதிக்குடிகள் பற்றியும் சில ஐதீகங்களை பார்ப்போம். புவிநிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன. அவற்றில் ஒரு கண்டமாக இப்போதைய இந்தியாவும் அதனை அண்டிய நிலப்பரப்புகளும் காணப்பட்டன. இக்கண்டங்களை ஆட்சி செய்தவர்களில் மனுச்சக்கரவர்த்தி என்பவனும் ஒருவன். இவனுக்கு சமன் என்று ஒரு மகனும், ஈழம் என்று ஒரு மகளும் இருந்தார்கள். மனுவின் பின்னர் இவ்விருவரும் இக்கண்டத்தை ஆண்டு வந்தனர். தென்பகுதியை சமனும், வடபகுதியை ஈழம் என்று அழைக்கப்பட்ட குமரியும் ஆண்டு வந்தனர். குமரி ஆட்சிசெய்த பகுதிகளை குமரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டு வந்தது. குமரிக் கண்டத்தில் உள்ள ஒரு நகரில் கன்னியாகிய குமரி (ஈழம்) ஆட்சி புரிந்தமையால் அந்நகரம் கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது. இக்கன்னியாகுமரி என்னும் பட்டினம் குமரிகண்டத்துக்குச் சிலகாலம் தலை நகராகி விளங்கியது. இந்தக் குமரிக் கண்டத்திலேயே இலங்கை நாடு, பாண்டி நாடு, சேர நாடு, சோழ நாடு முதலிய நாடுகள் அடங்குகின்றன. ஈழம் என்னும் அரசி அட்சி புரிந்த பகுதியே அவளின் பெயரால் ஈழம்நாடு என்று அழைக்கப்பட்டுக் காலக்கிரமத்தில் ஈழநாடு ஆகியது. இடையில் ஏற்பட்ட கடல்கோள்களே ஈழநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதைய இலங்கையை ஏனைய நிலப்பரப்புகளில் இருந்து பிரித்துவிட்டன. இக்கடல் கோள்களினால் நிலப்பரப்பு மாத்திரமன்றிப் வரலாற்றுச் சான்றுகள் எல்லாம் சமுத்திரத்துள் ஆழ்ந்து விட்டது. சமன் ஆண்ட பிரதேசமும் கடலுள் அமிழ்ந்தி விட்டது. மிகுதியான நிலப்பரப்பு பாரத கண்டம் இலங்கை முதலிய பல தேசங்களாக பிரிந்தது.

குமரிக்கண்டம் பற்றிய சில ஆதாரங்கள்:- -

             சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களில் குமரிக்கண்டம் பின்னர் அழிவுக்குட்பட்தாக கூறப்படுகின்றது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஏர்ண்ஸ்ட் ஹேக்கெல் (Ernst Haeckel) கூற்றுப்படி இலேமுரியாக் கண்டத்திலிருந்தே மனித இனம் தோன்றொயிருக்கலாம் எனவும் மேலும் அவற்றின் தொல்லுயிர் எச்சங்கள்பல அக்கண்டம் கடற்கோளால் அழிக்கப்பட்டதனால் கிடைக்கப் பெற இயலவில்லையெனவும் கூறுவது குறிப்பிடத்தக்கது. மேலும் சில விஞ்ஞானிகள் இத்தகு கண்டம் பசிபிக் கடல்வரை இருக்கப்பெற்றிருக்கலாம் என்னும் கூற்றையும் தெரிவுபடுத்துகின்றனர். இந்த இலேமூரியாக் கண்டமே குமரிக்கண்டமாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றார்கள்.

அழிவுற்றது எனக்கருதப்படும் குமரிக்கண்டம்

           பின்னர் குமரியின் சந்ததிகளில் தோன்றிய அரசர்களில் பரதன் என்பவனும் ஒருவன். இவன் நாற்பது வருடங்களாக குமரிக்கண்டத்தை ஆண்டுவந்தான். இவனின் ஆட்சியில் இக்கண்டம் செழிப்பாக சிறப்புற்று விளங்கியமையால் பின்னாளில் இக்கண்டத்துக்கு பரதகண்டம் என்ற வழங்கப்பட்டது. அந்நாட்களில் இக்கண்டத்தில் வாழ்ந்தவர்களை பரதர், நாகர், இயக்கர், அரக்கர், இராட்சதர், பூதர், அசுரர், அவுணர், இடிமபர், கருடர், முனிவர், சித்தர், கந்தருவர், வானரர் என பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தனர். இராமாயணத்தில் வாலி, சுக்கிரீவன் எனும் வீரர்கள் மேற்கூறப்பட்ட வானர வகுப்பை சேர்ந்தவர்களெனக் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வேந்தனாக கூறப்படும் இராவணனும் அவனை சேர்ந்தவர்களையும் இயக்கர், நாகர் அல்லது ராட்சதர்கள் எனக்கூறப்பட்டுள்ளது. இவர்கள் அந்நாட்களில் நாகரீகம் அடைந்தவர்களாகவே காணப்பட்டார்கள். சமயவழிபாடுகளில் சிறப்பாக இருந்தார்கள். எனினும் இராமயணமானது வட இந்தியர்களான ஆரியர்களால் இயற்றப்பட்டமையாலும், அவர்களின் கதைகளுக்கு முக்கியத்துவமாக கொண்டு காணப்படுவதால் தென்பகுதியை சேர்ந்த இராவணனை ஒரு அரக்கனாக, காமுகனாக சித்தரித்துள்ளார்கள் என்பது சிலருடைய கருத்து. இராவணன் சிவபக்தன், சமயவழிபாடுகளில் அக்கறை உள்ளவன் என்பதை இராமாயணம் கூறியுள்ளபோதிலும், அக்காலத்தில் தென் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த இயக்கர் நாகர் போன்ற பூர்வீகக்குடிகளுடன் குடியேற்றவாசிகளான ஆரியர்களுக்கு பகை இருந்துள்ளது. இதன் காரணமாகவே இராவணனையும் அவனை சார்ந்தோரும் அவ்வாறு தீயவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அவ்வாறில்லை என்று கூறுகிறார்கள். இலங்கையின் ஆதிக்குடிகளான, முக்கியமாக பேசப்படுகின்ற இயக்கர் நாகரின் ஆட்சிகள் பற்றிப் பார்ப்போமேயானால்... திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர், பணிபுரம், திருகோயில், முருகன்துறை, கலியாணி ஆகிய இடங்களை தலைநகராக் கொண்டு பல மன்னர்கள் ஆட்சி செய்ததாக வரலாற்று நூல்களில் கூறப்படுகின்றது. இவற்றில் முக்கியமானவனான இராவணனின் ஆட்சிக்காலம் பற்றி பார்க்கலாம். இக்காலத்தில் ஆண்ட சில மன்னர்கள் - சயம்பன் - சயம்பனின் மருமகன் யாளிமுகன் - ஏதி - ஏதியின் மகன் வித்துகேசன் - வித்துகேசனின் மகன் சுகேசன் - சுகேசனின் மகன் மாலியவான் - மாலியவான் தம்பி சுமாலி - குபேரன்

இராவணன் ஆட்சி

              அக்காலத்து நாகர் பரம்பரையில் வந்த கைகேகி என்னும் தமிழ் அரச குமாரி (இவள் மேலே கூறப்பட்ட சுமாலியின் மகள்) வச்சிரவாகுவைக் கூடி இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள். இப்பெயர்கள் இவர்களின் பகைவர்களால் அழைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்த பெயர்களாகும். ஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்கள் முறையே சிவதாசன், பரமன், பசுபதி, உமையம்மை என்பனவாகும். சிவதாசனே இராவணன் என்றும், பரமனே கும்பகருணன் என்றும் பசுபதியே விபீசணன் என்றும் உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர். இலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானாகிய குபேரனுடன் யுத்தம் செய்தான். குபேரன் என்பவன் இராவணனின் தந்தையாகிய வச்சிரவாகுவின் இயக்கசாதியை சேர்ந்த இன்னொரு மனைவியின் மகன். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத்தான் அழகாபுரியை ஆட்சி செய்தான். அக்காலத்தில் குபேரனின் ஆட்சியில் இயக்கர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள். குபேரனுக்குப்பின் இராவணனன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான். இராவணன் மண்டோதரியை திருமணஞ் செய்தான். மண்டோதரியும் கற்பிற் சிறந்தவளாக விளங்கினாள். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிக திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றேடுத்தாள் திருக்கோணேச்சரத்தில் இராவணன் சிலை சிங்களவர் ஆரியர்களின் வழித்தோன்றல்கள் இல்லையாம்; அமைச்சர் சம்பிக்க கண்டுபிடிப்பு சிங்களவர் ஆரிய மக்களின் வழித்தோன்றல்கள் இல்லையென மின்வலு மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வரலாற்று ஆசிரியரான அரிசன் ஹாபோதுவின் 'இர ஹந்த நெகி ரட்ட' எனும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். அதில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில், விஜயன் குவேனி காலத்திற்கு முன்பே இந் நாட்டில் மக்கள் வாழ்ந்து வந்தமை அகழ்வாராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வில்பத்து போன்ற பிரதேசங்களில் இதற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. சிங்களவர்களின் மூதாதையர்கள் ஆரியர்கள் இல்லை. இதனை வரலாற்று ஆய்வாளர்கள் விரைவில் நிரூபிப்பார்கள். ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டு பிடிப்பதற்கு முன்னதாகவே இலங்கையில் விமானம் போன்ற போக்குவரத்துச் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் இராமயணத்தில் புஷ்பக விமானம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். எமது வரலாற்று சின்னங்களை சிங்களவர்கள் தமதுடையது என்று உரிமை கொண்டாடுவதை பலவழிகளில் பார்த்து இருக்கின்றோம் ராவணன் சிங்கள இனத்தவன் என்று வந்தேறிகளான சிங்களவர் தமது இருப்பை நிலை நிறுத்துவதற்காக சொல்ல வெளிக்கிட்டு விட்டார்கள் தமிழ் இனமே விழித்துக்கொள் சிங்களவர்கள் ஆரிய மக்களின் வழித்தோன்றல்கள் இல்லையெனில் தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் சொல்வதுபோல் மகாவம்சம் பல பொய்கள் நிறைந்த வரலாற்று
திவு என்பதை அமைச்சர் சம்பிக்க ஏற்றுக்கொள்வாரா? முழு இலங்கையும் தமிழ் மக்களுக்கு உரியா நாடு இங்கு வாழ்ந்தவர்கள் தமிழ் மக்களின் மூதாதையினரான இயற்கரும் நாகரும் ஆவார் ஆரிய மொழி இலங்கையில் அறியப்படுவதற்கு முன்பு தமிழ் மொழியைத்தான் பேசிவந்துள்ளனர் தமிழர்கள்தான் இலங்கையின் பூர்விக குடிமக்கள் சிங்களவர்களின் மொழி ஆரிய தமிழ் கலப்பு மொழி சிங்களவர்கள் வந்தேறிகள் என்பதற்கு பல பொய்கள் நிறைந்த மகாவம்சம் சாட்சியாக இருக்கின்றது இலங்கை வரலாறு பற்றிப் பேசும் நூல்களில் மகாவம்சம் என்ற பாளி மொழியிலமைந்த நூல் முதன்மையானது. இது பௌத்தத் துறவிகளால் எழுதப்பெற்றது.இந்நூல் மூலமாக இலங்கையில் மிகப்பழைய காலத்திலேயே சைவசமயம் முக்கியமாக இருந்திருப்பதாக அறியக் கூடியதாக உள்ளது. இலங்கையில் கி.மு 3ம் நூற்றாண்டில் அசோகப்பேரரசன் காலத்தில் பௌத்தம் பரப்பப்படுவதற்கு முன்னரே இந்த மதம் சிறப்பான நிலை பெற்று விளங்கியிருக்கிறது. இலங்கையில் பௌத்தம் வந்த போது ஆட்சி செய்தவன் தேவநம்பியதீசன். அவனது தந்தையின் பெயர் முடசிவ என்பது. அவனது முன்னோர்களில் பலருக்கும் கிரிகந்தசிவ, மஹாசிவ, போன்ற பெயர்களே அதிகளவில் வழங்கியிருக்கின்றன. இது அவர்களது சைவப்பற்றையும் சிவநெறி வாழ்வையும் உறுதி செய்கிறது பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னரே சிங்களம் என்கிற மொழி பெருவளர்ச்சியுற்றிருக்கிறது. இம்மொழி சமஸ்கிருதம், தமிழ், பாளி ஆகிய மொழிகளின் கலப்பில் உருவானதாகும் விஜயன் இலங்கைக்கு வரும் முன்னரே இலங்கையில் தமிழ் மக்களின் மூதாதையினர் நாகரியம் அடைந்த ஒரு இனமாக சிவா வழிபாடு செய்து வாழ்ந்து வந்து இருக்கின்றனர். பின் விஜயனோடு வந்த பிராமணர்கள் இலங்கையில் ஐந்து திசைக்கு சென்று அங்கிருந்த சிவா ஆலயங்களுக்கு பூசைகள் செய்ததாக அறியமுடிகிறது.


நன்றி:

 -  
தமிழர் வரலாறு ( History of Tamil )

No comments:

Post a Comment