இயற்கை தந்த அதிசயம் மனிதன். மனிதனுள் பல அதியசங்கள் இருந்தாலும் மனிதனின் எலும்புகள் பற்றிய தகவல்கள் மிகவும் சுவாரசியமானவை, விசித்திரமானவை. உடலைத் தாங்குவதோடு மட்டுமில்லாமல், உடல் உறுப்புகளுக்கு விறைப்பாகவும், பாது...காப்பாகவும் இருக்கிறது. நிமிர்ந்து நடப்பது, நிற்பது, இடம் விட்டு ஒரு இடத்திற்கு நகர வைப்பது, என மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் உடலின் எலும்புகளே முக்கிய ஆதாரமாக திகழ்கின்றன. எலும்புகள் இல்லாமலோ, மனித எடையை தூக்கி நிறுத்தும் அளவு வலு இல்லாமலோ இருந்தால் மனிதன் மண்புழுவை போல ஊர்ந்துதான் கிடந்திருக்க முடியும்...
பலவகையான வடிவங்களில் அமைந்துள்ள மனித எலும்புகள், அளவில் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். நம் உடலமைப்பை நிர்ணயம் செய்யும் முக்கிய பணியை செவ்வனே செய்து முடிப்பவை கடினத்தன்மை கொண்ட இந்த எலும்புகளே ஆகும். உடலுக்கு ஆதாரமாக இருப்பதுடன் தசை நரம்புகளுக்கு ஆதாரமாக இருப்பதும் இந்த எலும்புத் கூடுதான். மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கு ஏற்றவாறும் எலும்புகள் அமையப் பெற்றுள்ளன.
மனித உடலில் உள்ள அனைத்து எலும்புகளின் எடை சுமார் 9 கிலோவாகும்.எலும்புகள் 50% நீரும், 33% சதவீதம் உப்புக்களும் 17% சதவீதம் மற்ற பொருட்களும் அமையப்பெற்றது.
பிறந்தவுடன் 306 எலும்புகளும், பின் எலும்புகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து 206 எலும்புகளாகி வலுவான எலும்பாக மாறும். இந்த 206 எலும்புகளில் உடலில் எந்தெந்த பகுதியில் எத்தனை எத்தனை எலும்புகள் இருக்கின்றன தெரியுமா???
1. மண்டை ஓடு - 29
2. தண்டு வடம் - 26
3. மார்புக்கூடு - 25
4. கை எலும்புகள் - 64
5. கால் எலும்புகள் - 62
மொத்தம் - 2௦6
மண்டை ஓடு என்பது 29 தனித்தனி எலும்புகளால் இணைக்கப்பட்ட ஒரு கவசம் போன்ற கூடு அமைப்பு உடையது...
தண்டு வடம் என்பது 26 எலும்புகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்ட எலும்பு தொகுப்பு...
மார்புக்கூடு என்பது இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல் போன்ற அதி முக்கிய உறுப்புகளை பாதுகாக்கவும் உடலுக்கு பொலிவான தோற்றத்தை தரவும் வல்ல 25 எலும்புகளால் அமையப்பெற்ற ஒரு பாதுகாப்பு வளையம் போன்ற அமைப்பை உடையது...
தோள்பட்டை தொடங்கி விரல் நுனி வரையிலான கை எலும்புகள் எண்ணிக்கை மொத்தம் 64
இதே போல இடுப்பில் தொடங்கி கால் விரல் நுனி வரை உடலின் ஓட்டு மொத்த எடையையும் தாங்கும் விதமாகவும், நாம் ஒரு இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு இடம் பெயரும் விதமாகவும் இருக்கும் சிறியதும் பெரியதுமான எலும்புகளின் மொத்த எண்ணிக்கை 62
மேற்கண்ட அனைத்து எலும்புகளையும் சேர்த்து மொத்த எலும்புகள் 206
மனிதனின் அனைத்து உறுப்புகளையும் பாதுகாப்பிற்கு தகுந்தவாறு எலும்புகள் சில சிறியதாகவும், பெரியதாகவும், மிகவும் உறுதி வாய்ந்த எலும்புகளும் உறுதி குறைந்த எலும்புகளும் என இயற்கை மிக அழகாக அமைத்து கொடுத்து இருக்கிறது. உடலில் எலும்புகளில் குறைபாடு உண்டானால் உடலின் தோற்றம் மாறி, அழகு கெட்டு, மிகவும் அலங்கோலமான தோற்றமே மிஞ்சும்.
பழைய எலும்புகள் மாறுவதும், புதிய எலும்புகள் தோன்றிக்கொண்டே இருப்பதும் என நம் வாழ்நாள் முழுவதும் எலும்பில் இருக்கும் உயிர் திசுக்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கும்.
எலும்பை உருவாக்கும் திசுக்களில் ஒரு வகை கனிமங்கள் நிறைந்துள்ளன. பழைய எலும்புகள் வலு இழக்கும் போது அதற்கு ஈடாக புதிய எலும்புகள் அதை விட விரைவாக உருவாகும் திறன் பெற்றவை. தன்னிச்சையாக, யாரையும் சாராமல் வாழ நம் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் நம்முடைய எலும்புகளை நோய்களில் இருந்து காத்து ஆரோக்கியத்தை பேணவேண்டும்.
எலும்பின் மேல் உறை பெரியோஸ்டியம் என்று அழைக்கபடுகிறது. கால்சியம், பாஸ்பரசால் ஆன எலும்புகள் கடின தன்மை கொண்டது. இதில் எலும்பு மஜ்ஜை, இரத்தக் குழாய்களும், நரம்புகளும், இரத்த அணுக்கள், குருத்தெலும்பு போன்றவற்றை உள்ளடக்கியது. எலும்புகள் உடல் உறுப்புகளை பாதுகாப்பதோடு நில்லாமல் இரத்த சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள் இவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்கூடமாகவும், கனிமங்களை சேகரித்து வைக்கும் சேமிப்பு கூடமாகவும் உள்ளன.
எலும்புகளுக்கு விரைப்புத் தன்மையை கொடுப்பது எலும்புத் திசுக்கள் தான். எலும்புகளில் சிறய எலும்பு காதிலும், மிகப் பெரிய எலும்பு தொடையிலும் உள்ளது. மனிதனின் இதயம், நுரையீரல் போன்றவற்றை பாதுகாப்பவை மார்பெலும்புகள்.
நம் தலையில் அதாவது மண்டையோட்டில் 29 எலும்புகள் இருந்தாலும் அதில் 8 எலும்புகள் மிக கடினமானவை . மண்டையோட்டில் உள்ள எலும்புகளில் அசையும் தன்மையுள்ள ஒரே ஒரு எலும்புப்பகுதி "மாண்டிபுல்" என்ற தாடை எலும்பு மட்டும்தான். இந்த எலும்பு சுமார் ஒன்னரை டன் எடையை தாங்க கூடிய அளவு உறுதியும் வலிமையையும் நிறைந்தது...
பெரும்பாலான எலும்புகள் கைகளிலும், கால்களிலும் அமைந்துள்ளன. எலும்புகளைச் சுற்றி நரம்புகள், தசை, தமணி, தசை நார்கள் போன்றவை பின்னிப் பிணைந்துள்ளன.நமது உடல் நலத்திற்குத் தேவையான கால்சியம் சத்துக்கள் அனைத்தும் எலும்புகளில் தான் சேமித்து வைக்கப்படுகின்றன. கால்சியம் சத்துக் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதிலிருந்தே எலும்புகள் பலமிழப்பதோடு எளிதில் உடையும் நிலைக்கு செல்லும்.

மனித எலும்புகள் பற்றி அறிவோம்
ReplyDeleteஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் வைட்டமின் டி (Vitamin D)