Monday, 7 July 2014

கள்ள நோட்டைக் கண்டறிய சில வழிகள்

       









பொதுவாக நம் அன்றாட வாழ்வில் பல ரூபாய்களை உபயோகப்படுத்துகின்றோம் ஆனால் அவற்றின் சிறபம்சங்கள் பற்றி தெறிந்து கொள்வதே இல்லை இதனால்தான் பல கள்ள நோட்டுகளை நாம் எளிதில் அடையாளம் காண இயலமுடியவில்லை,ஆனால் 1990 பிறகு நமது இந்திய
ரூபாய் நோட்டுகளில் பல மாற்றங்கள் ொண்டுவரப்பட்டது இது அடிக்கடி
மாற்றப்படும் இதனை வரயறை மற்றும் வடிவமைப்பது ரிசர்பேன் ஆஃப் இந்தியா. இப்படி வந்த ரூபாய் நோட்டுகளின் சிறப்பம்சங்களை பற்றி தெறிந்து கொண்டால் ,எளிதாக கள்ள நோட்டுகளை அடையாளம் காணலாம். (பின்வரும் படத்தில் உள்ள எண்ணைக்குறிக்கும்)

1)ஒவ்வொரு ரூபாயிலும் உள்ள "ரைஸெட் இமேஜ்" எனப்படும் குறிப்பாக 1000 ரூபாயில் "டயமன்ட்" இமேஜ் 500 ரூபாயில் "வட்டவடிவிலும்" 100 ரூபாயில் "முக்கோண வடிவிலும்" 50 ரூபாயில்சதுர வடிவிலும்" இருக்கும் இதனை தொட்டுபார்த்தால் அதன் வடிவத்தை நாம் உண்ரமுடியும்.

2)ரூபாயின் கம்பி இலைகள் 1990 பிறகு வந்த நோட்டுகளில் இந்த கம்பி இலைகள் விட்டுவிட்டு இருக்கும் ஆனால் அதனை தூக்கிபார்த்தால் ஒரு நேர்கோடாக இருக்கும், அதன் மீது "ஆர்பிஐ""500" என்ற வார்த்தைகள் இருக்கும்.

3)ரூபாயை 45டிகிரி சாய்த்து பார்த்தால் கம்பிஇழை மற்றும் ரூபாயின் மதிப்பு நீல நிறமாகவும் நேராக பார்த்தால் பச்சை நிறமாகவும் இருக்கும்.

4)வாட்டர்மார்க்கிங் இதானது நவீன தொழில்ஙுட்ப்பமாகும் இதன்படி ரூபாயின் இடது ஓரத்தில் உள்ள பகுதியில் காந்தி அடிகளின் படமும் ரூபாயின் மதிப்பும் வெளிச்சத்தில் தூக்கி பார்த்தால் தெறியும்.

5)காந்தி அடிகளின் வலது ஓரத்தில் மிக ஙுண்ணிய அளவில் "ஆர்பிஐ""500" போன்ற பல எழுத்துக்கள் இருக்கும்.

6)ரூபாயின் பின்புறத்தில் அடிவாட்டில் அந்த ரூபாய் அச்சிடப்பட்ட வருடம் இருக்கும்.

இப்படிபல சிறப்புகளை நாம் சொல்லி கொண்டே போகலாம் இந்த ரூபாய்களின் பண்புகள் அடிகடி மாற்றப்படலாம்,மேலும் இப்போது பிளாஸ்டிக்கில் ரூபாயை வெளிவிடவும் ஆர்பிஐ பரிசீலித்து வருகின்றது.


யாரோ உங்களிடம் கொடுத்த 1,000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டாக இருக்குமோ என்ற சந்தேகமா? உற்றுப்பார்த்தும் தடவிப் பார்த்தும் திருப்பிப் பார்த்தும் அது நல்ல நோட்டா, கள்ள நோட்டா என்று கண்டுபிடித்து விடலாம். அருகில் உள்ள 1,000 ரூபாய் நோட்டு படத்தை உற்று நோக்குங்கள்.
வழிகாட்டும் ஒளி
ரூபாய் நோட்டின் முன்பக்கத் தில் இடதுபுறம் உள்ள பூ வேலைப் பாடு ஒளியைப் பாய்ச்சுவதன் மூலம் ஊடுருவிப் பார்க்கக் கூடியது. நோட்டின்மீது வெளிச்சம் படும்படியாக வைத்துக்கொண் டால், நல்ல நோட்டாக இருந்தால் அதில் அந்த ரூபாய் நோட்டுக் கான எண் தெரியும். பூ வேலைப் பாடுக்கு அருகில் உள்ள வெள்ளை வெற்றிடத்தில் மகாத்மா காந்தியின் உருவமும், நோட்டின் எண்ணும் நீரோட்ட வடிவில் தெரியும். வெளிச்சத்துக்கு எதிராக இதை நன்கு பார்க்கலாம்.
நோட்டின் முன்பக்கத்தின் மையத்தில் அச்சிடப்பட்டுள்ள எண், இருவேறு கோணங்களில் பார்க்கும்போது இருவேறு வண்ணங்களில் தெரியும் வகை யில் விசேஷ மை பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
நோட்டைக் கிடை மட்டத்தில் வைத்துக்கொண்டால் இந்த எண் பச்சை நிறத்திலும் சாய்த்தால், நீல நிறத்திலும் இருக்கும். நோட்டின் கீழ்ப்புறத் திலும் வலது ஓரத்திலும் இருக்கும் எண் கட்டங்களின் மீது வெளிச்சத் தைப் பாய்ச்சினால் அது ஒளிரும்.
நோட்டின் முன்புறத்தில் ஒரு நேர்க்கோடு விட்டுவிட்டுச் செல்லும். அதில் பாரத் (இந்தி), ஆர்.பி.ஐ. என்ற எழுத்துகளும் ரூபாய் நோட்டின் எண்ணும் அச்சிடப்பட்டிருக்கும். ரூபாய் நோட்டைச் சாய்க்கும்போது நூலின் நிறமும் பச்சையிலிருந்து நீலமாக மாறும். வெளிச்சத்தைப் பாய்ச்சிப் பார்க்கும்போது நூல் அறுபடாமல் முழுதாகத் தெரியும்.
நல்ல நோட்டுகளில் பின்புற முள்ள பூ வேலைப்பாடும் ஊடு ருவிப் பார்க்கும் வகையில் இருக் கும். முதல் பக்கமுள்ள பூ வேலைப் பாட்டுடன் அது பொருந்தும். வெளிச்சத்துக்கு நேராக நோட்டை வைத்துப்பார்க்கும்போது ரூபாய் நோட்டின் எண், கண்ணாடிக்கு நேராகக் காட்டினால் தெரிவதைப் போன்ற பிம்பத்தில் இருக்கும்.
புடைப்பான மை
நல்ல நோட்டுகளில் எண்கள் கைகளால் தொட்டு உணரப்படும் வகையில் இன்டாக்ளியோ முறையில் அச்சிடப்பட்டிருக்கும். பார்வையற்றவர்களும் கைகளால் தடவிப் பார்த்துத் தெரிந்துகொள்வதற்காக இந்த ஏற்பாடு. ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா என்று மேலேயும் ரூபாய் நோட்டின் மதிப்பு நடுவில் இந்தியிலும் மகாத்மா காந்தியின் உருவமும் இப்படி இன்டாக்ளியோ முறையில் புடைப்பாக இடம்பெற்றிருக்கும். மகாத்மா காந்தியின் படத்துக்கு வலதுபுறத்தில் ஆர்.பி.ஐ. என்ற எழுத்தும் ரூபாய் எண்களும் சிறிய வடிவிலான எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருக்கும். உருப் பெருக்கிக் கண்ணாடி உதவியுடன் இவற்றைப் பார்க்கலாம்.
இடதுபுறத்தில் அசோகர் ஸ்தூபி சின்னத்துக்கு மேலே அடையாளக் குறியொன்று உயர்த்தப்பட்ட வடிவத்தில் எழுதப்பட்டிருக்கும். வெவ்வேறு வகையிலான முகமதிப்புள்ள ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப இது மாறும். பார்வையற்றவர்கள் இதைத் தடவிப் பார்த்து ரூபாய் நோட்டின் மதிப்பை அறிவார்கள்.
ரூபாய் நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு, நோட்டின் பின்புறத்தில் இடம்பெற்றிருக்கும். 2005- ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட நோட்டில் இது இருக்காது. பழைய நோட்டுகளில் பாதுகாப்பு ஏற்பாடு கள் குறைவு என்பதால்தான் அவற்றைப் புழக்கத்திலிருந்து விலக்கிக் கொள்ள ஆர்.பி.ஐ. முடிவு செய்திருக்கிறது.
சோதித்துப் பாருங்கள்
1,000 ரூபாய் நோட்டில் மட்டுமே ரூபாய் நோட்டின் எண், பாதுகாப்பு நூலில் இடம்பெற்றுள்ளது. 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளில் ரூபாயின் எண், நிறம் மாறும் மையில் அச்சிடப்படவில்லை. எனவே இவற்றைச் சாய்த்துப் பார்த்தாலும் எண்ணின் நிறம் அப்படியே இருக்கும். 10 ரூபாய் நோட்டில், பார்வையாளர்கள் தடவிப் பார்த்து அறியும் வகையி லான மையில் எண் அச்சிடப்பட வில்லை. செங்குத்தான கோட்டில் மறைக்கப்பட்ட படமும் இல்லை.
கள்ள நோட்டு என்று தெரிந்தபிறகு அவற்றைக் கொண்டு எதையும் வாங்க முயற்சிக்காதீர்கள். (நீண்ட நாள் கடனையும் அடைத்துவிடா தீர்கள்!). தெரிந்தோ தெரியா மலோ நீங்கள் கள்ளநோட்டைக் கொடுத்தால், அதை வைத்திருந் ததற்காகவே உங்களைக் கைது செய்யலாம். எங்கிருந்து உங்கள் கைக்கு வந்தது, யார் கொடுத்தார்கள் என்று எதுவுமே தெரியாவிட்டாலும் போலீஸ் நிலையத்தில் கொடுத்துவிடுங்கள்.

வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவனுடைய பெயர் ஸ்ரீமாறன். தமிழில் இதை திருமாறன் என்று சொல்லலாம். வியட்னாமில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைய சமஸ்கிருத கல்வெட்டு இவனை ஸ்ரீமாறன் என்று குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டில் ஆட்சி, ஆண்டு முதலிய விவரங்கள் கிடைக்கவில்லை. கல்வெட்டின் பெரும்பகுதி அழிந்துவிட்டது. ஆனால் எழுத்து அமைப்பின் அடிப்படையில் இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

வியட்னாமில் வோ-சான் என்னும் இடத்தில் ஒரு பாறையின் இரண்டு பக்கங்களில் (VO–CHANH ROCK INSCRIPTION) இது செதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமாறன் என்ற அரசனின் குடும்பம் செய்த நன்கொடையை (தானத்தை) கல்வெட்டு குறிப்பிடுகிறது. பாறையின் ஒரு பக்கத்தில் 15 வரிகளும் மறு பக்கத்தில் ஏழு வரிகளும் உள்ளன. ஆனால் ஒன்பது வரிகள் தவிர மற்றவை தேய்ந்து அழிந்துவிட்டன. சமஸ்கிருத பாட்டுப் பகுதி வசந்த திலகா அணியிலும் ஏனைய வரிகள் உரைநடையிலும் உள்ளன. கிடைத்த வரிகளிலும் கூட சில சொற்கள் அழிந்துவிட்டன. கல்வெட்டின் சில வரிகள்:-

. .. . . ... ப்ரஜானாம் கருண . .. . .. ப்ரதாம் விஜய
. . . . . .. . . . . . . . . . . . . . . . . .. . . . . . . . ..
ஸ்ரீ மாற ராஜகுல . . . . . . வ . .. .. . . . . ..
ஸ்ரீ மாற லோ. . . .. ன. . . .. .. .குலதந்தனேன
க்ராபதிம் ஸ்வகன. . .. ..ச . . . . . . . .. .. ..


இந்தக் கல்வெட்டில், தனக்குச் சொந்தமான வெள்ளி, தங்கம், தானியக் குவியல் மற்றுமுள்ள அசையும், அசையா சொத்து (ஸ்தாவர, ஜங்கம்) வகைகள் அனைத்தையும் தமக்கு நெருங்கிய மக்களுக்கு பொதுவுடமையாக்குவதாக மன்னன் அறிவிக்கிறான். எதிர்கால மன்னர்கள் இதை மதித்து நடக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கிறான். இது வீரனுக்கு தெரியட்டும். . .. . . .. . . .. .. . .என்று பாதியில் முடுகிறது கல்வெட்டு.

இதில் முக்கியமான சொற்கள் “ஸ்ரீமாற ராஜகுல” என்பதாகும். இந்த திருமாறனைக் குறித்து மிகவும் குறைவான தகவலே கிடைத்துள்ளது. ஆனால் வியட்னாம், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளில் 1300 ஆண்டுகளுக்கு நிலவிய இந்து சாம்ராஜ்யத்தின் முதல் மன்னன் இவன் என்பதை சீனர்களின் வரலாறும் உறுதி செய்கிகிறது.

திருமாறனை சீன வரலாற்று ஆசிரியர்கள் கியு லியன்(KIU LIEN) என்றும் இவன் ஹான் வம்சம் (HAN DYNASTY) சீனாவை ண்டபொழுது அவர்களின் கட்டுபாட்டில் இருந்த ‘சம்பா’ தேசத்தில் புரட்சி செய்து ஆட்சியைக் கைபற்றியதாகவும் எழுதிவைத்துள்ளனர். சம்பா (CHAMPA) என்பது தற்போதைய வியட்னாமின் ஒரு பகுதியாகும். மன்னனின் குடும்பப் பெயர் கியு(KIU) என்றும் மன்னனின் பெயர் லியன் (LIEN) என்றும் எழுதிவைத்துள்ளனர். இவன் காங்ட்சாவோவின் (KONG TSAO) புதல்வன் என்றும் தெரிகிறது. தென்கிழக்கு ஆசியா முழுதும் முதல்முதலாக தொல்பொருள் ஆராயச்சி நடத்திய பிரெஞ்சுக்காரர்கள் ஸ்ரீமாறனும், கியு லியானும் ஒருவர்தான் என்று உறுதிசெய்துள்ளனர். கி.பி. 137 ல் சீனர்களை எதிர்த்துக் கலகம் துவங்கியது. ஆனால் கிபி 192 ல்தான் ஸ்ரீ மாறன் ஆட்சி ஏற்பட்டது.

ஸ்ரீ மாறனுக்குப் பின்னர் ஆண்ட மன்னர்களில் பெயர்கள் எல்லாம் சீனமொழி வாயிலாக ‘உருமாறி’ கிடைப்பதால் அவர்களின் உண்மையான பெயர்கள் தெரியவில்லை. எல்லா மன்னர்களின் பெயர்களும் பான்(FAN) என்று முடிவதால் இதை ‘வர்மன்” என்று முடிவுசெய்துள்ளனர். ஏனெனில் இடையிடையேயும் ஆறாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் மன்னர்களின் பெயர்களுக்குப் பின்னால் ‘வர்மன்’ என்ற பெயர் தெளிவாக உள்ளது. இதில் வியப்பு என்னவென்றால் தமிழ்நாட்டில் கிடைத்த செப்புப் பட்டயங்களிலும் பாண்டியன் வம்சாவளியில் ஸ்ரீமாறன், வர்மன் என்ற இரண்டு பெயர்களும் கிடைக்கின்றன.

இந்தோனேசியாவுக்குச் சொந்தமான போர்னியோ தீவின் அடர்ந்த காட்டிற்குள் மூலவர்மன் என்ற மன்னனின் சமஸ்கிருதக் கல்வெட்டு கிடைத்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் 800க்கும் அதிகமான சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

வியட்னாமியக் கல்வெட்டு ‘பாண்டிய’ என்ற பெயரைக் குறிப்பிடவில்லை. ஆயினும் ஸ்ரீமாறன் (ஸ்ரீ = திரு) என்பவன் பாண்டியனே என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன:-

(1) இடைச்சங்கத்தின் கடைசி மன்னன் பெயர் திருமாறன். அவன் அரசாண்ட காலத்தில் கடல் பொங்கி தென் மதுரையை அழித்ததால் அவன் தற்போதைய மதுரையில் கடைச்சங்கத்தை அமைத்ததாக உரையாசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். இந்த மன்னனோ இவனது குலத்தினரோ வியட்னாமில் ஒரு அரசை நிறுவியிருக்கலாம்.

(2) வேள்விக்குடி செப்பேடும் திருமாறன் என்ற மன்னனைக் குறிப்பிடுகிறது. அதே செப்பேட்டில் மாறவர்மன் (அவனி சூளாமணி), ஸ்ரீமாறவர்மன்(அரிகேசரி) ஸ்ரீ மாறன்(ராஜசிம்மன்) என்ற பெயர்களையும் காணலாம். பாண்டிய வம்ச மன்னர்கள் மாறன், சடையன் என்ற பெயர்களை மாறி மாறிப் பயன்படுத்துவர்.

(3) தொல்காப்பியத்தை அரங்கேற்றிய இடைச்சங்க கால மன்னன் நிலந்தரு திருவில் பாண்டியன் என்று பனம்பாரனாரின் பாயிரம் கூறுகிறது. பல நாடுகளை வென்று தந்ததால் “நிலந்தரு” “திரு பாண்டியன்” (ஸ்ரீமாறன்) என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

(4) சங்க இலக்கியப் பாடல்களிலும் அடிக்குறிப்பிலும் குறைந்தது பத்து முறை ‘மாறன்’ என்ற மன்னர்கள் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் இடைச்சங்ககால மன்னன் முடித்திருமாறன். நற்றிணை 105, 228 ஆகிய 2 பாடல்களை இயற்றியவன்.

(5) தென்கிழக்கு ஆசியா முழுவதும் அகத்திய முனிவரின் சிலைகள் கிடைக்கின்றன. அகத்தியர் “கடலைக் குடித்த” கதைகளும் பிரபலமாகியிருக்கின்றன. முதல்முதலில் கடலைக் கடந்து ஆட்சி நிறுவியதை “கடலைக் குடித்தார்” என்று பெருமையாக உயர்வு நவிற்சியாக குறிப்பிடுகின்றனர். வேள்விக்குடி செப்பேடு இந்தக் கதைகளைக் குறிப்பிட்டுவிட்டு அகத்தியரை பாண்டியரின் “குல குரு” என்றும் கூறுகிறது.

(6) இந்திய இலக்கியகர்த்தாக்களின் முக்கிய இடத்தை வகிக்கும் மாபெரும் வடமொழிக் கவிஞன் காளிதாசன், பாண்டியர்களையும் அகத்தியரையும் தொடர்புப்படுத்தி கவி புனைந்துள்ளான் (ரகு வம்சம் 6 –61)

ஆசியாவில் 800க்கும் அதிகமான சமஸ்கிருதக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

(7) புறநானூற்றுப் பாடல் (புறம் 182) பாடிய ஒரு பாண்டிய மன்னன் பெயர் “கடலுள் மாய்ந்த” இளம்பெருவழுதி. இவன் வெளிநாடு செல்லும்போதோ, வெளிநாடுகளை வென்று திரும்பும் போதோ கடலில் மூழ்கி இறந்திருக்கலாம்.

(8) டாலமி, பெரிப்ளூஸ் என்ற யாத்ரீகர்கள் கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் நடந்த தென் இந்திய கடல் வாணிபத்தைக் குறிப்பிடுகின்றனர்.

(9) தென் இந்தியாவை கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் 400 ஆண்டுகளுக்கு ஆண்ட சாத்வா இன மன்னர்கள் தமிழ் மொழியில் வெளியிட்ட நாணயங்களில் ‘கப்பல்’ படம் உள்ளது.

(10) தமிழ் நாடு முழுவதும் கிடைக்கும் ரோமானிய நாணயங்களும் தமிழர்களின் கடல் வாணிபத்தை உறுதி செய்கின்றன.

(11) ‘மிலிந்த பன்ன’ என்ற கி.மு. இரண்டாம் நூற்றாண்டு பெளத்த மத நூல் வங்கம், சோழமண்டலம், குஜராத், சீனம், எகிப்து இடையே நிலவிய வணிகத்தைக் குறிப்பிடுகிறது.

(12) மலேசியாவில் தமிழ் கல்வெட்டு இருக்கிறது. தாய்லாந்தில் தமிழ்நாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளன.

மேற்கூரிய சான்றுகள் அனைத்தும் தமிழர்களின் கடல் பயண வன்மையைக் காட்டுகின்றன. அகஸ்டஸ் சீசரின் அவையில் பாண்டிய மன்னனின் தூதர் இருந்ததையும் ரோமானிய ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றன.

ரோம் (இத்தாலி) வரை சென்ற தமிழனுக்கு, தென்கிழக்கு ஆசியாவிலுள்ள வியட்னாமுக்குச் செல்வது எளிது தானே!

Reference:

(1) R.C. MAJUMDAR- CHAMPA: HISTORY & CULTURE OF AN INDIAN COLONIAL KINGDOM IN THE FAR EAST GIAN PUBLISHING HOUSE DELHI – REPRINT 1985.


-ச. சுவாமிநாதன்