Saturday, 10 September 2016


 


இரைப்பைப்புண்

 இரைப்பை க்கான பட முடிவு

 நோய் அரங்கம் - டாக்டர் கு.கணேசன்

நம் செரிமான மண்டலத்தில் உள்ள மிக முக்கியமான உறுப்பு, இரைப்பை! நமக்குப் பசியைத் தூண்டி, சாப்பிட வைத்து, செமிக்க வைத்து, உணவுச் சத்துகளை ரத்தத்தில் கலக்க வைத்து, உடல் வளர்ச்சிக்கும் ஆற்றலுக்கும் வழி அமைப்பது இரைப்பை. அதே நேரத்தில் இரைப்பை அழற்சி, இரைப்பைப் புண், இரைப்பைப் புற்றுநோய் என வரிசையாகப் பல பிரச்னைகளைத் தருவதும் இரைப்பைதான். ஆகவே, இந்த இடத்தில் இரைப்பையை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

இரைப்பை எனும் மிக்ஸி! மார்புக்கூட்டின் இடதுபுறத்தில் உள்ள வயிற்றில் உதரவிதானத்திற்குக் கீழே பேரிக்காய் வடிவத்தில் அமைந்துள்ளது, இரைப்பை. இதன் கொள்ளளவு சுமார் 1000 மி.லிட்டரிலிருந்து  2500 மி.லிட்டர் வரை இருக்கும். என்றாலும் இது உணவு இல்லாத போது காற்றிழந்த பலூன் போல சுருங்கி இருக்கும். உணவு உள்ளே வரும்போது தேவைக்கேற்ப விரிந்து கொள்ளும். இது உணவுக்குழாய் முடியும் இடத்தில் தொடங்கு கிறது. முன்சிறுகுடலில் இணைகிறது. இரைப்பையின் உட்சுவரில் சிலேட்டுமப்படலம் (Mucus layer) எனும் சவ்வு உள்ளது இதில் உள்ள சுரப்பிகள் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தையும் பெப்சின் எனும் என்சைமையும் சுரக்கின்றன.

இவைதான் இரைப்பையில் உணவு செரிமானமடைவதற்கு உதவுகின்றன. உணவு இரைப்பைக்குள் வந்ததும் இரைப்பை ஒரு மிக்ஸி மாதிரி செயல்பட்டு, உணவை உடைத்துக் குழைத்துக் கூழ் போலாக்கி விடுகிறது. அப்போது உணவில் உள்ள புரதம் இங்கு செரிமானமடைகிறது. மேலும் உணவை சில மணிநேரம் தன்னிடம் தங்க வைத்துக்கொண்டு சிறிது சிறிதாக முன்சிறுகுடலுக்கு அனுப்பு கிறது. இதன் மூலம் உணவு ஒரே சீராக செரிமானமடைய இரைப்பை உதவுகிறது.

1.இரைப்பை அழற்சி


இரைப்பையில் ஏற்படும் முதல் பிரச்னையே இதுதான். இரைப்பையின் சளிப்படலத்தில் அழற்சி ஏற்படும் நிலைமை இது; புண் உண்டாவதற்கு முந்தைய நிலை என்று சொல்லலாம். இதை 'இரைப்பை அழற்சி’ (Gastritis) என்கிறார்கள். உடலில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டால் எப்படி இருக்குமோ அப்படி இரைப்பைச் சுவரில் சிவந்த சிராய்ப்புகளும் வீக்கங்களும் ஏற்படுவதால் இது உருவாகிறது. இதன் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சிலருக்குப் பசி இருக்காது. சிலருக்குக் கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். குமட்டல், வாந்தி, ஏப்பம், வயிறு உப்புசம் போன்ற தொந்தரவுகளும் வெளிப்படும். இதன் அறிகுறிகள் சில நாட்களுக்கு அல்லது வாரங்களுக்கு மட்டும் ஏற்பட்டால், அது தற்காலிக இரைப்பை அழற்சி (Acute gastritis) எனவும், மாதக்கணக்கில் நீடித்தால் நாட்பட்ட இரைப்பை அழற்சி (Chronic gastritis) எனவும் அழைக்கிறோம். நோய்க்கான காரணங்கள், கண்டுபிடிக்கப் பயன்படும் பரிசோதனைகள், சிகிச்சைகள் எல்லாமே இரைப்பைப் புண்ணுக்கு உள்ளவையே. இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம், இரைப்பையில் அழற்சி ஏற்படும்போது, அமிலச்சுரப்பு குறைந்துவிடும். இதனால், நாம் சாப்பிடும் உணவிலிருந்து இரும்புச் சத்து கிரகிக்கப்படாது. வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும், இதன் விளைவாக, ரத்தசோகை உண்டாகும்.

2.இரைப்பைப் புண்

இரைப்பையில் ஏற்படுகிற நோய்களில் முக்கியமானது, `அல்சர்’ என அனைவராலும் அழைக்கப்படும் இரைப்பைப் புண். இது உணவுக்குழலின் இறுதிப்பகுதி, இரைப்பை, முன் சிறுகுடல், மெக்கலின் பக்கப்பை ஆகிய நான்கு இடங்களில் வரும். இரைப்பையில் வருவதை 'இரைப்பைப் புண்’ (Gastric Ulcer) எனவும், முன்சிறுகுடலில் வருவதை `முன்சிறுகுடல் புண்’ (Duodenal Ulcer) எனவும் தனித்தனி பெயர்களில் மருத்துவர்கள் அழைக்கிறார்கள். இந்த இரண்டையும் சேர்த்து `செரிமானப் புண்’ அல்லது பெப்டிக் அல்சர் (Peptic Ulcer) எனவும் அழைக்கிறார்கள். இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் என்சைமும் அளவுக்கதிகமாக சுரக்கும்போது இரைப்பையிலும் முன்சிறுகுடலிலும் உள்ள சிலேட்டுமப் படலம் சிதைந்து புண்ணாகிறது. இதுதான் பெப்டிக் அல்சர்.

காரணங்கள்


இரைப்பைப் புண் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. `ஹெலிக்கோபேக்டர் பைலோரி’(Helicobacter pylori) எனும் கிருமி காரணமாக இரைப்பைப் புண் ஏற்படுவதுதான் இப்போது அதிகம். அசுத்தமான  குடிநீரில் இவை வசிக்கும். அதைக் குடிப்போருக்கு இந்த பாக்டீரியா தொற்றிக்கொள்ளும். இது எச்சிலில் கூட இருக்கும். முத்தம் கொடுக்கும்போது இது மற்றவர்களுக்குப் பரவிவிடும். இது பல வருடங்களுக்கு இரைப்பையில் வாழும். ஆனால், இது எல்லோருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. அதிகபட்சமாக 100ல் 10 பேருக்கு இது இரைப்பைப் புண்ணை உண்டாக்கும். மது அருந்துதல், புகைப்பிடித்தல், காரம் நிறைந்த உணவு, புளிப்பு மிகுந்த உணவு, மசாலா கலந்த உணவு, எண்ணெயில் வறுத்த உணவு போன்றவற்றை அதிகஅளவில் உண்பது, கோலா, காபி மற்றும் தேநீர் பானங்களை அதிகப்படியாக குடிப்பது, ஆஸ்துமா மற்றும் மூட்டுவலிகளுக்கு தரப்படும் ஸ்டீராய்டு மாத்திரைகள், தலைவலிக்குத் தரப்படும்.

ஆஸ்பிரின், அனால்ஜின், இபுபுரூஃபன் போன்ற வலிநிவாரணி மாத்திரைகள் ஆகியவற்றை மருத்துவரின் ஆலோசனையின்றி அடிக்கடி சாப்பிடுவது போன்றவற்றால் பெப்டிக் அல்சர் வருகிறது. உணவை நேரந்தவறி சாப்பிடுவது, சூடாகச் சாப்பிடுவது, அவசர அவசரமாகச் சாப்பிடுவது போன்ற தவறான உணவுப் பழக்கங்களாலும் இவ்வாறு புண் ஏற்படலாம். எலுமிச்சை, நெல்லிக்காய், கடுக்காய் போன்ற புளிப்புச் சுவை உடையவற்றை அதிகமாகச் சாப்பிட்டாலும் இந்த நோய் ஏற்படும். சில மூலிகை மருந்துகளை நீண்ட காலம் சாப்பிடுவதும் இந்த நோய்க்கு வழி அமைக்கும். 'ஜோலிங்கர் எலிசன் நோய்த்தொகுப்பு’ (Zolinger Ellison Syndrome) காரணமாகவும் பெப்டிக் அல்சர் வருகிறது.

சிலருக்குப் பரம்பரை காரணமாகவும் இது ஏற்படுகிறது. குறிப்பாக, உறவினர்களுக்குள்ளே திருமணம் செய்து கொண்டவர்களுக்கு இந்நோய் ஏற்பட மற்றவர்களை விட மூன்று மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. 'ஓ’ரத்தப்பிரிவு உள்ளோருக்கு இயற்கையிலேயே இரைப்பையில் அமிலச் சுரப்பு அதிகமாக இருப்பதால், இவர்களுக்கு சிறுவயதிலேயே இது வந்துவிடுகிறது. மனக்கவலை, மனஉளைச்சல், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், கோபம், பரபரப்பு, ஓய்வில்லாதது போன்ற காரணங்களாலும் இது பலரையும் பாதிக்கிறது.

அறிகுறிகள்

இந்நோயின் தொடக்கத்தில் நெஞ்சுப்பகுதியில் எரிச்சலும் வலியும் ஏற்படும். அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும். பசி இல்லாமல் இருக்கும். அப்படியே சாப்பிட்டாலும், குறைந்த அளவு உணவு சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிவிட்ட உணர்வு ஏற்படும். நெஞ்சில் ஏதோ பந்து போல் திரண்டு வந்து அடைப்பது போலத் தோன்றும். இது ஏப்பம் விட்டதும் சரியாகும்.

நோயின் அடுத்த கட்டமாக வயிற்றில் வலி தோன்றும். இரைப்பையில் சுரக்கும் அமிலம் அங்குள்ள புண்மேல் படுவதால் இந்த வலி வருகிறது. அடுத்து உணவு சாப்பிட்ட பின்பு இதேவலி உண்டாகும். இதற்குக் காரணம், உண்ட உணவு இரைப்பைப் புண்ணில் படுவதுதான். சிலருக்கு இந்த வயிற்று வலி நடு
முதுகுக்கும், வயிற்றின் வலது பக்கத்திற்கும் பரவலாம்.

வயிற்று வலிக்கு அடுத்தபடியாக வாந்தி வரும். வாந்தியினால் நோயாளிக்கு நன்மையும் உண்டு; தீமையும் உண்டு. அடிக்கடி வாந்தி வந்தால் சரியாக உணவு சாப்பிட முடியாது, இதனால் உடல் எடை குறையும். உடல் மெலியும். இது தீமை. இரைப்பைப் புண் உள்ளவர்கள் வாந்தி எடுக்கும்போது, இரைப்பையில் உள்ளவை எல்லாமே வெளியில் வந்துவிடுவதால் அங்கு அமிலத்தன்மை குறைந்துவிடும். இதனால் வயிற்றுவலி தற்காலிகமாக குறையும். இது இவர்களுக்கு நன்மை. இதற்காக வயிற்று வலியைத் தாங்க இயலாத ஒரு சிலர் தாங்களாகவே வாய்க்குள் விரலை விட்டு வாந்தி எடுக்கத் தூண்டுவார்கள். இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கு உணவு சாப்பிட்ட உடன் வயிற்றுவலி அதிகமாகும். வாந்தி எடுத்தால் வயிற்றுவலி குறையும். அதேநேரத்தில் முன்சிறுகுடலில் புண் உள்ளவர்களுக்கு சாப்பிட்டவுடன் வயிற்று வலி குறையும்.

மோசமான விளைவுகள்

இந்த நோயை சரியாக கவனிக்கத் தவறினால், புண் பெரிதாகி இரைப்பையில் உள்ள ரத்தக்குழாய்கள் சிதைவடைந்து ரத்தக்கசிவு ஏற்படும். இதனால் மலம் கருப்பு நிறத்திலோ, கருஞ்சிவப்பாகவோ வெளியேறும். ரத்தம் அதிகமாகக் கசியும்போது ரத்தவாந்தியும் வரலாம். ஆனால், வாந்தி ரத்தம் போல் தோற்றமளிக்காது; காப்பி நிறத்தில் காணப்படும். புண் பெரிதாகப் பெரிதாக இரைப்பையில் துளை விழுந்து விடும். இது ஒரு மோசமான நிலை. இந்நிலையில் உள்ள நோயாளிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து துளையை மூட வேண்டிய அவசியம் ஏற்படும். இன்னும் சிலருக்கு இரைப்பையின் இறுதிப்பகுதியிலோ, முன்சிறு குடலின் துவக்கப்பகுதியிலோ புண் பெரிதாக இருந்தாலும் அல்லது புண் ஆறி தழும்பாக மாறினாலும் உணவு செல்லும் பாதையில் தடை உண்டாகும். இதனால் வயிற்றுவலி, வாந்தி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் தீவிரமாகும். இதற்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும்.

நோய் அறியும் முறைகள்

முன்பெல்லாம் இரைப்பைப் புண்ணை உறுதி செய்ய அமில சுரப்புப் பரிசோதனை மற்றும் பேரியம் கதிர்வீச்சுப் படங்கள் (Barium Xrays) உதவின. இப்போது 'எண்டோஸ்கோப்பி பரிசோதனை’ (Gastro endoscopy) மூலம் நோயாளியின் செரிமானப் பாதையில் இருக்கும் புண்ணின் இருப்பிடம், அளவு, நிலைமை, ரத்தக்கசிவு, குடலடைப்பு போன்ற பல தகவல்களை மருத்துவரே நேரடியாகப் பார்த்து உறுதி செய்கிறார். மேலும் இந்தக் கருவி மூலம் புண்ணின் சிறு பகுதியை வெட்டியெடுத்து, திசுப் பரிசோதனைக்கு (Biopsy) அனுப்பி, புண் சாதாரணமானதா, புற்றுநோயைச் சேர்ந்ததா அல்லது ஹெச்.பைலோரி கிருமி உள்ளதா
என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். ரத்தப் பரிசோதனை மூலம் ஹெச்.பைலோரி கிருமிக்கு எதிரணுக்கள் (Antibody) உள்ளனவா என்பதைக் கண்டறிந்தும் இக்கிருமி பாதிப்பை உறுதி செய்யலாம்.  மலத்தில் இதன் புரதக்கூறு (Antigen) உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்வதன் மூலமும் இந்தப் பாதிப்பை அறியலாம்.

சிகிச்சைகள் என்னென்ன?

இந்த நோய்க்கு மருந்து சிகிச்சை, அறுவை சிகிச்சை என இரண்டு வகை சிகிச்சைகள் உள்ளன. பொதுவாக மருத்துவ சிகிச்சையைத்தான் முதலில் பின்பற்றுவார்கள். இதில் நான்கு வகை மருந்துகள் தரப்படுகின்றன. அதாவது, இரைப்பையில் சுரக்கின்ற அமிலத்தை சமப்படுத்துபவை; அமிலம் சுரப்பதைத் தடை செய்பவை; புண்ணின்மேல் அமிலம் படுவதைத் தடுப்பவை. ஹெலிக்கோபேக்டர் பைலோரி கிருமிக்குத் தரப்படும் கூட்டுமருந்து. இவற்றோடு வயிற்று வலியைக் குறைக்கும் மாத்திரைகள், வாந்தியை நிறுத்தும் மாத்திரைகள், இரைப்பை இயக்கத்தைச் சீராக்கும் மாத்திரைகள், மன அமைதியைத் தரும் மாத்திரைகள் என நோயாளியின் தேவைக்கேற்ப சிகிச்சை அளிக்கிறார்கள். இவற்றோடு முறையான உணவுப்பழக்கத்தையும் வலியுறுத்துவார்கள். இதற்குப் பிறகும் வயிற்று வலி குணமாகவில்லை என்றால், அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கிறார்கள். இதுபோல் ரத்தக்கசிவு, இரைப்பையில் துளை, உணவுப்பாதைத் தடை போன்றவற்றுக்கும் அறுவை சிகிச்சைதான் தீர்வு. இப்போதெல்லாம் பெப்டிக் அல்சர் நோய்க்குத் தொடர்ந்து 6 வாரங்களுக்கு மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டால் நல்ல நிவாரணம் பெற முடியும். 100ல் 3 பேருக்குத்தான் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.

தடுப்பது எப்படி?

சரியான உணவுமுறையைக் கையாள்வது. குறிப்பாக நேரத்தோடு சாப்பிடுவது. அளவோடு சாப்பிடுவது. நிதானமாகச் சாப்பிடுவது. காரம், மசாலா, புளிப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது. புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றை நிறுத்துவது. வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின் பேரில் மட்டுமே உபயோகிப்பது. காபி மற்றும் கோலா பானங்களை அளவோடு உபயோகிப்பது. கவலை, மன அழுத்தம், பரபரப்பு, கோபம், எரிச்சல் போன்ற உளம் சார்ந்த குறைபாடுகளை நீக்குவது. தியானம், யோகாசனம் போன்றவற்றைப் பின்பற்றுவது ஆகிய வழிகள் மூலம் ஒருவருக்கு பெப்டிக் அல்சர் வராமல் நிச்சயம் தடுக்கலாம்.

இரைப்பைக்கு உதவுங்கள்


வயிறு நிறைய சாப்பிடாதீர்கள். உடல் உழைப்பு குறைந்தவர்கள் முக்கால் வயிறு சாப்பிட்டால் போதும்.

சாப்பிட்டு மூன்று மணி நேரத்துக்குள் நொறுக்குத் தீனி சாப்பிடுவதை நிறுத்தவும்.

அசைவ உணவு சாப்பிட்டதும் குளிர் பானங்கள், கோலா பானங்கள் மற்றும் ஜூஸ் குடிப்பதைத் தவிர்க்கவும்.

காலை உணவைத் தவிர்க்க வேண்டாம்.

இரவில் எளிதாக செரிக்கக்கூடிய உணவை சாப்பிடுங்கள்.

சமைத்த உணவையும் சமைக்காத உணவையும் ஒரேநேரத்தில் சாப்பிட வேண்டாம்.

உணவு சாப்பிட்ட உடனே பழங்களை சாப்பிடாதீர்கள்.

உணவை சீரான இடைவெளியில் புசித்து சாப்பிடுவதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

3.  முன்சிறுகுடல் புண் இரைப்பையில் அமிலம் அதிகமாகச் சுரக்கப்படும்போது, அது முன்சிறுகுடலின் முதலாவது பகுதியையும் அரித்துப் புண்ணாக்கிவிடும். இதுதான் முன்சிறுகுடல் புண் (Duodenal ulcer) என்று அழைக்கப்படுகிறது.

அறிகுறிகள்

உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து வயிற்றில் வலி வந்தால் அது முன்சிறுகுடல் புண்ணாக இருக்க வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் நள்ளிரவிலும், அதிகாலையிலும்தான் இவர்களுக்கு வயிற்று வலி வரும். இவர்களுக்கு ஆரம்பத்தில் வாந்தி வராது. பசி நன்றாக இருக்கும். எடை குறையாது. நாட்பட்ட நோயாளிகளுக்கு மலத்தில் ரத்தம் வரலாம். புண்ணானது முன்சிறுகுடலை அடைத்துக்கொண்டது என்றால், வயிற்று வலியோடு வாந்தியும் வரும். முன்சிறுகுடல் புண்ணுக்கான பரிசோதனைகள், சிகிச்சைகள், தடுப்புமுறைகள் எல்லாமே இரைப்பைப் புண்ணுக்கு சொல்லப்பட்டவையே.


 நன்றி குங்குமம் டாக்டர்

 நன்றி http://www.dinakaran.com

Thursday, 8 September 2016

சிறந்த அம்மாவாக இருப்பது எப்படி?

 best mother க்கான பட முடிவு

 best mother க்கான பட முடிவு


            பெற்றோராக இருப்பவர்கள், தங்கள் குழந்தைக்கு மிகவும் பிடித்தவாறு இருப்பதற்கு, புத்தகங்கள் பலவற்றை படித்து தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் தங்கள் குழந்தைகளிடம் நடந்து கொள்வார்கள். குறிப்பாக அப்பாக்களை விட, சில மாறுபட்ட சவால்களை அம்மாக்களே எதிர்கொள்கின்றனர்.

           இப்போது அம்மாவாக இருப்பவர்கள், அந்த சவால்களை எப்படி எதிர்கொள்வது என்றும், குழந்தைகளை எப்படி நன்றாக வளர்ப்பது என்பது பற்றியும் கீழே சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1. தாயாக இருப்பது சில நேரங்களில் சற்று சவாலானதாகவே இருக்கும். அதனால் எப்போதும் அமைதியாகவும் மற்றும் பொறுமையாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள். மேலும் அவர்கள் ஏதாவது குறும்பு செய்தால், அதை ஏன் செய்யக் கூடாது என்பதற்கான காரணத்தைப் பொறுமையாக எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும்.

2. உங்கள் குழந்தைகளின் விருப்பங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குழந்தைக்கு இசையில் விருப்பமிருந்தால், அவனுக்காக ஏதேனும் ஒரு இசைக்கருவியை வாங்கிக் கொடுத்து, அவர்கள் வாசிப்பதை கவனியுங்கள். குழந்தை கோபமாக இருந்தால், அப்போது அவர்களிடம் மனம் விட்டு பேசி, அவர்களுக்கு ஒரு நல்ல தோழனாக இருக்க வேண்டும்.

3. பணவிஷயத்தில் மிகவும் சரியாக இருக்க வேண்டாம். ஒவ்வொரு நாளும் பணத்தை கொடுப்பது சரியில்லைதான், அதற்காக உங்கள் குழந்தை கேட்கும் எந்தவொரு விருப்பத்தையும் உடனே முடியாது என்று நிராகரிக்க வேண்டாம். எதைக்கேட்டாலும் முடியாதென்றும், எப்போதும் பணத்தை சேமிப்பது பற்றிய அறிவுரைகளை சொல்லி, எந்த ஒரு பொருளையும் வாங்கிக் கொடுக்காமல் இருந்தால், பின் அவர்கள் மனதில் உங்கள் மீது இருக்கும் அன்பு குறைய நேரிடும். எனவே அவ்வப்போது ஏதேனும் விருப்பமானதை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

4. உங்களை எப்பொழுதும் அவர்களுடன் பேசுவதற்கு ஏற்ற நபராக வைத்துக் கொள்வதில் உறுதியாக இருங்கள். எப்பொழுதும் புரிந்துகொள்ளக் கூடியவராகவும் மற்றும் அவர்கள் பேசுவதை செவிகொடுத்து கேட்பவராகவும் இருப்பதற்கு, உங்களால் முடிந்தவரை கடினமான முயற்சிகளை எடுங்கள். அம்மாவிடம் நட்புடன் ஆலோசனை கேட்பதும், வயதுக்கு வருவது பற்றிய சந்தேகங்களை கேட்கவும், வீட்டுவேலைகளில் உதவி செய்யவும், அல்லது சாதாரணமாக அம்மாவை கட்டிப்பிடிப்பதும் அவர்களுக்கு தெரியும். தங்களிடம் பேசுவதற்கு யாரும் இல்லாமலிருந்தால், பின் குழந்தைகள் தனிமையிலேயே இருப்பார்கள். எனவே அவ்வப்போது அவர்களிடம் பேசும் வழக்கத்தை கொள்ள வேண்டும்.

5. குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு மருத்துவம் படிப்பதிலோ அல்லது மருத்துவராக ஆவதிலோ விருப்பம் இல்லையென்றால், அப்போது கோபப்பட வேண்டாம். உங்கள் மகளின் எண்ணம் உங்களுடையதிலிருந்து மாறுபடுவதை ஏற்றுக் கொள்ளுங்கள். மேலும் குழந்தைகளை எப்போதுமே குழந்தையாக எண்ணாமல், அவர்களின் வயதிற்கு ஏற்றவாறு மாறுங்கள். ஏனெனில் அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்கனவே பெரியளவில் பங்கேற்றிருக்கிறீர்கள். அதனால் அதனையே திரும்பவும் செய்ய வேண்டாமே!

6. தவறு செய்தால் அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் மற்றும் மன்னிப்பு கேட்க பயப்படாதீர்கள். இது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் உங்கள் தவறை நீங்கள் ஒப்புக் கொள்வதும் மன்னிப்பு கேட்பதும் அனைவருக்கும் நன்மையாக இருக்கும். நீங்கள் பிடிவாதமாக இல்லாமலிருந்தால் அது மற்றவர்கள் உங்கள் மேல் கோபப்படுவதை தடுக்கும். மேலும் குழந்தைகளுக்கு மன்னிப்பு கேட்பதன் முக்கியத்துவத்தையும் கற்றுக் கொடுங்கள்.

7. குழந்தை தனது தந்தையை நேசிப்பதற்கு மதிப்பளித்திடுங்கள். உங்கள் குழந்தை, அவர்களது தந்தையை அளவுக்கு அதிகமாக நேசிப்பதைப் பார்த்து பொறாமைப்படக் கூடாது.

8. இறுதியாக, மற்ற எல்லாவற்யையும் விட உங்கள் குழந்தைகளை அதிகமாக நேசியுங்கள். அவர்களை நேசிக்காமல், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் எந்தவொரு செயலும் அர்த்தம் தராது. எந்த நேரத்திலும் குழந்தைகளை நேசித்தால், அவர்களது மனதில் எக்காலத்திலும் பெற்றோர்களை மறக்காமல் நேசிப்பார்கள். 



 நன்றி

மாலைமலர்

Wednesday, 7 September 2016

ஆதி மனிதன் என்ன சாப்பிட்டான்

 

       ஆதி மனிதன் என்ன சாப்பிட்டான் என்பது எப்படி தெரியும்? ஆதிமனிதன் ரொட்டி சாப்பிட்டான், தானியம் சாப்பிட்டான், பழம் சாப்பிட்டான் என்றெல்லாம் காமடி பண்ணுகிறார்கள்.

        19,000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஸ்பெய்னின் வாழ்ந்த "ரெட் லேடி" எனப்படும் பெண்ணின் எலும்புகள் அதற்கான விடையை பகர்கின்றன.

   இந்த பெண் அன்றைய ஸ்பெயினில் வாழ்ந்த தொல்குடி ஒன்றின் தலைவியாக இருந்திருக்கவேண்டும் என கணிக்கிறார்கள். இவளுக்கு தனியாக ஒரு கல்லறை அமைக்காப்ட்டுள்ளது. அவ்விடத்தில் பாறைகளில் கிடைக்கும் ரெட் ஆக்சைட் எனப்படும் சிகப்பு சுண்ணம் பூசி ஏராளமான மலர்களுடன் இவள் புதைக்கபட்டிருக்கிறாள். அன்றைய காலகட்டத்தில் கிடைத்த எலும்புகூடுகள் எவற்றுக்கும் இத்தகைய மரியாதை கிட்டததால் இவள் அக்கூட்டத்தால் மிக மதிக்கபட்ட பெண் அல்லது அரசி என கருதப்படுகிறது.
 
        அவள் இறக்கையில் வயது 35 முதல் 40 என கருதப்படுகிறது. இறப்புக்கான காரணம் தெரியவில்லை.பேஸ்ட், பிரஷ் எதுவுமில்லாத அக்காலகட்டத்தில் பற்கள் சொத்தையின்றி எத்தனை ஆரோக்கியமாக உள்ளன என்பதை படத்தில் காணவும்.

ரெட்லேடி என்ன சாப்பிட்டாள்?

        பற்களில் உள்ள ஐசோடோப்புகளை மிகுந்த நுண்ணிய ஆய்வுட்குட்படுத்தி அவள் என்ன சாப்பிட்டள் என்பதையும் கண்டுபிடித்து விட்டார்கள். அவள் உணவில் 80% கலோரிகள் குளம்பு உள்ள மிருகங்களின் இறைச்சியில் இருந்து வந்துள்ளன (மான், மாடு, பன்றி போன்ற சிகப்பிறைச்சி). மீதமுள்ள 20% கலோரிகளில் பெரும்பங்கு மீனில் இருந்து வந்துள்ளன. சிறிதளவு காய்கள், காளான், விதைகள், ஃபங்கஸ் ஆகியவற்றையும் ரெட் லேடி உண்டிருக்கிறாள்.
ஆக ரெட் லேடி உணவிற்கும் நம் அசைவ பேலியோ உணவிற்கும் பெரிய வித்தியாசமில்லை.. இதான் பேலியோ டயட்.. அல்ல, ரெட்லேடி டயட.

நன்றி

Tuesday, 6 September 2016




இயற்கை மருத்துவம் :-
1) என்றும் 16 வயது வாழ ஓர் 🍈 ""நெல்லிக்கனி.""
2) இதயத்தை வலுப்படுத்த🌺 ""செம்பருத்திப் பூ"".
3) மூட்டு வலியை போக்கும் 🌿 ""முடக்கத்தான் கீரை.""
4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் 🍃""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).
5) நீரழிவு நோய் குணமாக்கும் 🌿""அரைக்கீரை.""
6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
🌿""மணத்தக்காளிகீரை"".
7) உடலை பொன்னிறமாக மாற்றும் 🍂""பொன்னாங்கண்ணி கீரை.""
8) மாரடைப்பு நீங்கும் 🍊""மாதுளம் பழம்.""
9) ரத்தத்தை சுத்தமாகும் 🌱""அருகம்புல்.""
10) கான்சர் நோயை குணமாக்கும் 🍈"" சீதா பழம்.""
11) மூளை வலிமைக்கு ஓர் ""பப்பாளி பழம்.""
12) நீரிழிவு நோயை குணமாக்கும் "" முள்ளங்கி.""
13) வாயு தொல்லையிலிருந்து விடுபட 🌿""வெந்தயக் கீரை.""
14) நீரிழிவு நோயை குணமாக்க 🍈"" வில்வம்.""
15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""துளசி.""
16) மார்பு சளி நீங்கும் ""சுண்டைக்காய்.""
17) சளி, ஆஸ்துமாவுக்கு 🌿""ஆடாதொடை.""
18) ஞாபகசக்தியை கொடுக்கும் 🌿""வல்லாரை கீரை.""
19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""பசலைக்கீரை.""
20) ரத்த சோகையை நீக்கும் 🍒"" பீட்ரூட்.""
21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்🍍"" அன்னாசி பழம்.""
22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை 🌾(முள் முருங்கை)
23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் 🌿🍪 கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
24) மார்புசளி, இருமலை குணமாக்கும் ""தூதுவளை""
25) முகம் அழகுபெற 🍇""திராட்சை பழம்.""
26) அஜீரணத்தை போக்கும் 🍃"" புதினா.""
27) மஞ்சள் காமாலை விரட்டும் 🌱“கீழாநெல்லி”
28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.
பகிர்ந்துகொள்ளுங்கள் கண்டிப்பாக மற்றவரும் அறிந்துகொள்ளட்டும்..

Monday, 7 July 2014

கள்ள நோட்டைக் கண்டறிய சில வழிகள்

       









பொதுவாக நம் அன்றாட வாழ்வில் பல ரூபாய்களை உபயோகப்படுத்துகின்றோம் ஆனால் அவற்றின் சிறபம்சங்கள் பற்றி தெறிந்து கொள்வதே இல்லை இதனால்தான் பல கள்ள நோட்டுகளை நாம் எளிதில் அடையாளம் காண இயலமுடியவில்லை,ஆனால் 1990 பிறகு நமது இந்திய
ரூபாய் நோட்டுகளில் பல மாற்றங்கள் ொண்டுவரப்பட்டது இது அடிக்கடி
மாற்றப்படும் இதனை வரயறை மற்றும் வடிவமைப்பது ரிசர்பேன் ஆஃப் இந்தியா. இப்படி வந்த ரூபாய் நோட்டுகளின் சிறப்பம்சங்களை பற்றி தெறிந்து கொண்டால் ,எளிதாக கள்ள நோட்டுகளை அடையாளம் காணலாம். (பின்வரும் படத்தில் உள்ள எண்ணைக்குறிக்கும்)

1)ஒவ்வொரு ரூபாயிலும் உள்ள "ரைஸெட் இமேஜ்" எனப்படும் குறிப்பாக 1000 ரூபாயில் "டயமன்ட்" இமேஜ் 500 ரூபாயில் "வட்டவடிவிலும்" 100 ரூபாயில் "முக்கோண வடிவிலும்" 50 ரூபாயில்சதுர வடிவிலும்" இருக்கும் இதனை தொட்டுபார்த்தால் அதன் வடிவத்தை நாம் உண்ரமுடியும்.

2)ரூபாயின் கம்பி இலைகள் 1990 பிறகு வந்த நோட்டுகளில் இந்த கம்பி இலைகள் விட்டுவிட்டு இருக்கும் ஆனால் அதனை தூக்கிபார்த்தால் ஒரு நேர்கோடாக இருக்கும், அதன் மீது "ஆர்பிஐ""500" என்ற வார்த்தைகள் இருக்கும்.

3)ரூபாயை 45டிகிரி சாய்த்து பார்த்தால் கம்பிஇழை மற்றும் ரூபாயின் மதிப்பு நீல நிறமாகவும் நேராக பார்த்தால் பச்சை நிறமாகவும் இருக்கும்.

4)வாட்டர்மார்க்கிங் இதானது நவீன தொழில்ஙுட்ப்பமாகும் இதன்படி ரூபாயின் இடது ஓரத்தில் உள்ள பகுதியில் காந்தி அடிகளின் படமும் ரூபாயின் மதிப்பும் வெளிச்சத்தில் தூக்கி பார்த்தால் தெறியும்.

5)காந்தி அடிகளின் வலது ஓரத்தில் மிக ஙுண்ணிய அளவில் "ஆர்பிஐ""500" போன்ற பல எழுத்துக்கள் இருக்கும்.

6)ரூபாயின் பின்புறத்தில் அடிவாட்டில் அந்த ரூபாய் அச்சிடப்பட்ட வருடம் இருக்கும்.

இப்படிபல சிறப்புகளை நாம் சொல்லி கொண்டே போகலாம் இந்த ரூபாய்களின் பண்புகள் அடிகடி மாற்றப்படலாம்,மேலும் இப்போது பிளாஸ்டிக்கில் ரூபாயை வெளிவிடவும் ஆர்பிஐ பரிசீலித்து வருகின்றது.


யாரோ உங்களிடம் கொடுத்த 1,000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டாக இருக்குமோ என்ற சந்தேகமா? உற்றுப்பார்த்தும் தடவிப் பார்த்தும் திருப்பிப் பார்த்தும் அது நல்ல நோட்டா, கள்ள நோட்டா என்று கண்டுபிடித்து விடலாம். அருகில் உள்ள 1,000 ரூபாய் நோட்டு படத்தை உற்று நோக்குங்கள்.
வழிகாட்டும் ஒளி
ரூபாய் நோட்டின் முன்பக்கத் தில் இடதுபுறம் உள்ள பூ வேலைப் பாடு ஒளியைப் பாய்ச்சுவதன் மூலம் ஊடுருவிப் பார்க்கக் கூடியது. நோட்டின்மீது வெளிச்சம் படும்படியாக வைத்துக்கொண் டால், நல்ல நோட்டாக இருந்தால் அதில் அந்த ரூபாய் நோட்டுக் கான எண் தெரியும். பூ வேலைப் பாடுக்கு அருகில் உள்ள வெள்ளை வெற்றிடத்தில் மகாத்மா காந்தியின் உருவமும், நோட்டின் எண்ணும் நீரோட்ட வடிவில் தெரியும். வெளிச்சத்துக்கு எதிராக இதை நன்கு பார்க்கலாம்.
நோட்டின் முன்பக்கத்தின் மையத்தில் அச்சிடப்பட்டுள்ள எண், இருவேறு கோணங்களில் பார்க்கும்போது இருவேறு வண்ணங்களில் தெரியும் வகை யில் விசேஷ மை பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
நோட்டைக் கிடை மட்டத்தில் வைத்துக்கொண்டால் இந்த எண் பச்சை நிறத்திலும் சாய்த்தால், நீல நிறத்திலும் இருக்கும். நோட்டின் கீழ்ப்புறத் திலும் வலது ஓரத்திலும் இருக்கும் எண் கட்டங்களின் மீது வெளிச்சத் தைப் பாய்ச்சினால் அது ஒளிரும்.
நோட்டின் முன்புறத்தில் ஒரு நேர்க்கோடு விட்டுவிட்டுச் செல்லும். அதில் பாரத் (இந்தி), ஆர்.பி.ஐ. என்ற எழுத்துகளும் ரூபாய் நோட்டின் எண்ணும் அச்சிடப்பட்டிருக்கும். ரூபாய் நோட்டைச் சாய்க்கும்போது நூலின் நிறமும் பச்சையிலிருந்து நீலமாக மாறும். வெளிச்சத்தைப் பாய்ச்சிப் பார்க்கும்போது நூல் அறுபடாமல் முழுதாகத் தெரியும்.
நல்ல நோட்டுகளில் பின்புற முள்ள பூ வேலைப்பாடும் ஊடு ருவிப் பார்க்கும் வகையில் இருக் கும். முதல் பக்கமுள்ள பூ வேலைப் பாட்டுடன் அது பொருந்தும். வெளிச்சத்துக்கு நேராக நோட்டை வைத்துப்பார்க்கும்போது ரூபாய் நோட்டின் எண், கண்ணாடிக்கு நேராகக் காட்டினால் தெரிவதைப் போன்ற பிம்பத்தில் இருக்கும்.
புடைப்பான மை
நல்ல நோட்டுகளில் எண்கள் கைகளால் தொட்டு உணரப்படும் வகையில் இன்டாக்ளியோ முறையில் அச்சிடப்பட்டிருக்கும். பார்வையற்றவர்களும் கைகளால் தடவிப் பார்த்துத் தெரிந்துகொள்வதற்காக இந்த ஏற்பாடு. ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா என்று மேலேயும் ரூபாய் நோட்டின் மதிப்பு நடுவில் இந்தியிலும் மகாத்மா காந்தியின் உருவமும் இப்படி இன்டாக்ளியோ முறையில் புடைப்பாக இடம்பெற்றிருக்கும். மகாத்மா காந்தியின் படத்துக்கு வலதுபுறத்தில் ஆர்.பி.ஐ. என்ற எழுத்தும் ரூபாய் எண்களும் சிறிய வடிவிலான எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருக்கும். உருப் பெருக்கிக் கண்ணாடி உதவியுடன் இவற்றைப் பார்க்கலாம்.
இடதுபுறத்தில் அசோகர் ஸ்தூபி சின்னத்துக்கு மேலே அடையாளக் குறியொன்று உயர்த்தப்பட்ட வடிவத்தில் எழுதப்பட்டிருக்கும். வெவ்வேறு வகையிலான முகமதிப்புள்ள ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப இது மாறும். பார்வையற்றவர்கள் இதைத் தடவிப் பார்த்து ரூபாய் நோட்டின் மதிப்பை அறிவார்கள்.
ரூபாய் நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு, நோட்டின் பின்புறத்தில் இடம்பெற்றிருக்கும். 2005- ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட நோட்டில் இது இருக்காது. பழைய நோட்டுகளில் பாதுகாப்பு ஏற்பாடு கள் குறைவு என்பதால்தான் அவற்றைப் புழக்கத்திலிருந்து விலக்கிக் கொள்ள ஆர்.பி.ஐ. முடிவு செய்திருக்கிறது.
சோதித்துப் பாருங்கள்
1,000 ரூபாய் நோட்டில் மட்டுமே ரூபாய் நோட்டின் எண், பாதுகாப்பு நூலில் இடம்பெற்றுள்ளது. 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளில் ரூபாயின் எண், நிறம் மாறும் மையில் அச்சிடப்படவில்லை. எனவே இவற்றைச் சாய்த்துப் பார்த்தாலும் எண்ணின் நிறம் அப்படியே இருக்கும். 10 ரூபாய் நோட்டில், பார்வையாளர்கள் தடவிப் பார்த்து அறியும் வகையி லான மையில் எண் அச்சிடப்பட வில்லை. செங்குத்தான கோட்டில் மறைக்கப்பட்ட படமும் இல்லை.
கள்ள நோட்டு என்று தெரிந்தபிறகு அவற்றைக் கொண்டு எதையும் வாங்க முயற்சிக்காதீர்கள். (நீண்ட நாள் கடனையும் அடைத்துவிடா தீர்கள்!). தெரிந்தோ தெரியா மலோ நீங்கள் கள்ளநோட்டைக் கொடுத்தால், அதை வைத்திருந் ததற்காகவே உங்களைக் கைது செய்யலாம். எங்கிருந்து உங்கள் கைக்கு வந்தது, யார் கொடுத்தார்கள் என்று எதுவுமே தெரியாவிட்டாலும் போலீஸ் நிலையத்தில் கொடுத்துவிடுங்கள்.

வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவனுடைய பெயர் ஸ்ரீமாறன். தமிழில் இதை திருமாறன் என்று சொல்லலாம். வியட்னாமில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைய சமஸ்கிருத கல்வெட்டு இவனை ஸ்ரீமாறன் என்று குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டில் ஆட்சி, ஆண்டு முதலிய விவரங்கள் கிடைக்கவில்லை. கல்வெட்டின் பெரும்பகுதி அழிந்துவிட்டது. ஆனால் எழுத்து அமைப்பின் அடிப்படையில் இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

வியட்னாமில் வோ-சான் என்னும் இடத்தில் ஒரு பாறையின் இரண்டு பக்கங்களில் (VO–CHANH ROCK INSCRIPTION) இது செதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமாறன் என்ற அரசனின் குடும்பம் செய்த நன்கொடையை (தானத்தை) கல்வெட்டு குறிப்பிடுகிறது. பாறையின் ஒரு பக்கத்தில் 15 வரிகளும் மறு பக்கத்தில் ஏழு வரிகளும் உள்ளன. ஆனால் ஒன்பது வரிகள் தவிர மற்றவை தேய்ந்து அழிந்துவிட்டன. சமஸ்கிருத பாட்டுப் பகுதி வசந்த திலகா அணியிலும் ஏனைய வரிகள் உரைநடையிலும் உள்ளன. கிடைத்த வரிகளிலும் கூட சில சொற்கள் அழிந்துவிட்டன. கல்வெட்டின் சில வரிகள்:-

. .. . . ... ப்ரஜானாம் கருண . .. . .. ப்ரதாம் விஜய
. . . . . .. . . . . . . . . . . . . . . . . .. . . . . . . . ..
ஸ்ரீ மாற ராஜகுல . . . . . . வ . .. .. . . . . ..
ஸ்ரீ மாற லோ. . . .. ன. . . .. .. .குலதந்தனேன
க்ராபதிம் ஸ்வகன. . .. ..ச . . . . . . . .. .. ..


இந்தக் கல்வெட்டில், தனக்குச் சொந்தமான வெள்ளி, தங்கம், தானியக் குவியல் மற்றுமுள்ள அசையும், அசையா சொத்து (ஸ்தாவர, ஜங்கம்) வகைகள் அனைத்தையும் தமக்கு நெருங்கிய மக்களுக்கு பொதுவுடமையாக்குவதாக மன்னன் அறிவிக்கிறான். எதிர்கால மன்னர்கள் இதை மதித்து நடக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கிறான். இது வீரனுக்கு தெரியட்டும். . .. . . .. . . .. .. . .என்று பாதியில் முடுகிறது கல்வெட்டு.

இதில் முக்கியமான சொற்கள் “ஸ்ரீமாற ராஜகுல” என்பதாகும். இந்த திருமாறனைக் குறித்து மிகவும் குறைவான தகவலே கிடைத்துள்ளது. ஆனால் வியட்னாம், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளில் 1300 ஆண்டுகளுக்கு நிலவிய இந்து சாம்ராஜ்யத்தின் முதல் மன்னன் இவன் என்பதை சீனர்களின் வரலாறும் உறுதி செய்கிகிறது.

திருமாறனை சீன வரலாற்று ஆசிரியர்கள் கியு லியன்(KIU LIEN) என்றும் இவன் ஹான் வம்சம் (HAN DYNASTY) சீனாவை ண்டபொழுது அவர்களின் கட்டுபாட்டில் இருந்த ‘சம்பா’ தேசத்தில் புரட்சி செய்து ஆட்சியைக் கைபற்றியதாகவும் எழுதிவைத்துள்ளனர். சம்பா (CHAMPA) என்பது தற்போதைய வியட்னாமின் ஒரு பகுதியாகும். மன்னனின் குடும்பப் பெயர் கியு(KIU) என்றும் மன்னனின் பெயர் லியன் (LIEN) என்றும் எழுதிவைத்துள்ளனர். இவன் காங்ட்சாவோவின் (KONG TSAO) புதல்வன் என்றும் தெரிகிறது. தென்கிழக்கு ஆசியா முழுதும் முதல்முதலாக தொல்பொருள் ஆராயச்சி நடத்திய பிரெஞ்சுக்காரர்கள் ஸ்ரீமாறனும், கியு லியானும் ஒருவர்தான் என்று உறுதிசெய்துள்ளனர். கி.பி. 137 ல் சீனர்களை எதிர்த்துக் கலகம் துவங்கியது. ஆனால் கிபி 192 ல்தான் ஸ்ரீ மாறன் ஆட்சி ஏற்பட்டது.

ஸ்ரீ மாறனுக்குப் பின்னர் ஆண்ட மன்னர்களில் பெயர்கள் எல்லாம் சீனமொழி வாயிலாக ‘உருமாறி’ கிடைப்பதால் அவர்களின் உண்மையான பெயர்கள் தெரியவில்லை. எல்லா மன்னர்களின் பெயர்களும் பான்(FAN) என்று முடிவதால் இதை ‘வர்மன்” என்று முடிவுசெய்துள்ளனர். ஏனெனில் இடையிடையேயும் ஆறாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் மன்னர்களின் பெயர்களுக்குப் பின்னால் ‘வர்மன்’ என்ற பெயர் தெளிவாக உள்ளது. இதில் வியப்பு என்னவென்றால் தமிழ்நாட்டில் கிடைத்த செப்புப் பட்டயங்களிலும் பாண்டியன் வம்சாவளியில் ஸ்ரீமாறன், வர்மன் என்ற இரண்டு பெயர்களும் கிடைக்கின்றன.

இந்தோனேசியாவுக்குச் சொந்தமான போர்னியோ தீவின் அடர்ந்த காட்டிற்குள் மூலவர்மன் என்ற மன்னனின் சமஸ்கிருதக் கல்வெட்டு கிடைத்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் 800க்கும் அதிகமான சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

வியட்னாமியக் கல்வெட்டு ‘பாண்டிய’ என்ற பெயரைக் குறிப்பிடவில்லை. ஆயினும் ஸ்ரீமாறன் (ஸ்ரீ = திரு) என்பவன் பாண்டியனே என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன:-

(1) இடைச்சங்கத்தின் கடைசி மன்னன் பெயர் திருமாறன். அவன் அரசாண்ட காலத்தில் கடல் பொங்கி தென் மதுரையை அழித்ததால் அவன் தற்போதைய மதுரையில் கடைச்சங்கத்தை அமைத்ததாக உரையாசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். இந்த மன்னனோ இவனது குலத்தினரோ வியட்னாமில் ஒரு அரசை நிறுவியிருக்கலாம்.

(2) வேள்விக்குடி செப்பேடும் திருமாறன் என்ற மன்னனைக் குறிப்பிடுகிறது. அதே செப்பேட்டில் மாறவர்மன் (அவனி சூளாமணி), ஸ்ரீமாறவர்மன்(அரிகேசரி) ஸ்ரீ மாறன்(ராஜசிம்மன்) என்ற பெயர்களையும் காணலாம். பாண்டிய வம்ச மன்னர்கள் மாறன், சடையன் என்ற பெயர்களை மாறி மாறிப் பயன்படுத்துவர்.

(3) தொல்காப்பியத்தை அரங்கேற்றிய இடைச்சங்க கால மன்னன் நிலந்தரு திருவில் பாண்டியன் என்று பனம்பாரனாரின் பாயிரம் கூறுகிறது. பல நாடுகளை வென்று தந்ததால் “நிலந்தரு” “திரு பாண்டியன்” (ஸ்ரீமாறன்) என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

(4) சங்க இலக்கியப் பாடல்களிலும் அடிக்குறிப்பிலும் குறைந்தது பத்து முறை ‘மாறன்’ என்ற மன்னர்கள் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் இடைச்சங்ககால மன்னன் முடித்திருமாறன். நற்றிணை 105, 228 ஆகிய 2 பாடல்களை இயற்றியவன்.

(5) தென்கிழக்கு ஆசியா முழுவதும் அகத்திய முனிவரின் சிலைகள் கிடைக்கின்றன. அகத்தியர் “கடலைக் குடித்த” கதைகளும் பிரபலமாகியிருக்கின்றன. முதல்முதலில் கடலைக் கடந்து ஆட்சி நிறுவியதை “கடலைக் குடித்தார்” என்று பெருமையாக உயர்வு நவிற்சியாக குறிப்பிடுகின்றனர். வேள்விக்குடி செப்பேடு இந்தக் கதைகளைக் குறிப்பிட்டுவிட்டு அகத்தியரை பாண்டியரின் “குல குரு” என்றும் கூறுகிறது.

(6) இந்திய இலக்கியகர்த்தாக்களின் முக்கிய இடத்தை வகிக்கும் மாபெரும் வடமொழிக் கவிஞன் காளிதாசன், பாண்டியர்களையும் அகத்தியரையும் தொடர்புப்படுத்தி கவி புனைந்துள்ளான் (ரகு வம்சம் 6 –61)

ஆசியாவில் 800க்கும் அதிகமான சமஸ்கிருதக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

(7) புறநானூற்றுப் பாடல் (புறம் 182) பாடிய ஒரு பாண்டிய மன்னன் பெயர் “கடலுள் மாய்ந்த” இளம்பெருவழுதி. இவன் வெளிநாடு செல்லும்போதோ, வெளிநாடுகளை வென்று திரும்பும் போதோ கடலில் மூழ்கி இறந்திருக்கலாம்.

(8) டாலமி, பெரிப்ளூஸ் என்ற யாத்ரீகர்கள் கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் நடந்த தென் இந்திய கடல் வாணிபத்தைக் குறிப்பிடுகின்றனர்.

(9) தென் இந்தியாவை கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் 400 ஆண்டுகளுக்கு ஆண்ட சாத்வா இன மன்னர்கள் தமிழ் மொழியில் வெளியிட்ட நாணயங்களில் ‘கப்பல்’ படம் உள்ளது.

(10) தமிழ் நாடு முழுவதும் கிடைக்கும் ரோமானிய நாணயங்களும் தமிழர்களின் கடல் வாணிபத்தை உறுதி செய்கின்றன.

(11) ‘மிலிந்த பன்ன’ என்ற கி.மு. இரண்டாம் நூற்றாண்டு பெளத்த மத நூல் வங்கம், சோழமண்டலம், குஜராத், சீனம், எகிப்து இடையே நிலவிய வணிகத்தைக் குறிப்பிடுகிறது.

(12) மலேசியாவில் தமிழ் கல்வெட்டு இருக்கிறது. தாய்லாந்தில் தமிழ்நாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளன.

மேற்கூரிய சான்றுகள் அனைத்தும் தமிழர்களின் கடல் பயண வன்மையைக் காட்டுகின்றன. அகஸ்டஸ் சீசரின் அவையில் பாண்டிய மன்னனின் தூதர் இருந்ததையும் ரோமானிய ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றன.

ரோம் (இத்தாலி) வரை சென்ற தமிழனுக்கு, தென்கிழக்கு ஆசியாவிலுள்ள வியட்னாமுக்குச் செல்வது எளிது தானே!

Reference:

(1) R.C. MAJUMDAR- CHAMPA: HISTORY & CULTURE OF AN INDIAN COLONIAL KINGDOM IN THE FAR EAST GIAN PUBLISHING HOUSE DELHI – REPRINT 1985.


-ச. சுவாமிநாதன்

Sunday, 15 June 2014

ரத்தத்தில் சர்க்கரையை கட்டுபடுத்தும் கொய்யா



கொய்யாக்கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கொய்யா வீட்டுத் தோட்டங்களிலும், வயல் வரப்புகளிலும் வளர்க்கப்படும் மரவகையாகும். இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது. இதற்கு ஜாம்பலா, கோவா, பலாம்பர் என்ற பெயர்களும் உண்டு. கொய்யா முக்கனியான மா, பலா, வாழை இவற்றிக்கு இணையாக வர்ணிக்கப்படும் பழமாகும். மிகக் குறைந்த விலையில் அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்ட பழம் இது.

கொய்யா கோடைக்காலங்களில் தான் அபரிமிதமாக விளையும். தற்போது உயிரி தொழில் நுட்ப முறையில் வருடம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது.கொய்யாவில் பலவகைகள் உள்ளன. தற்போது விற்பனைக்கு வரும் பழங்களில் உள் சதைப்பகுதி வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் உள்ளன. ஒரு சில வகை கொய்யாவின் சதைப்பகுதி ரோஸ் நிறத்தில் காணப்படும். இவை அனைத்தின் மருத்துவப் பயனும் ஒன்றுதான். கொய்யாக்கனியின் சுவையைப் போல் அதன் மணமும் ரம்மியமாக இருக்கும். இதில் அதிகளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக நெல்லிக்கனிக்கு அடுத்த நிலையில் வைட்டமின் சி சத்து கொண்ட பழம் கொய்யாதான்.

மருத்துவப் பயன்கள்

மலச்சிக்கல் தீரும்: நோயின் ஆரம்பமே மலச்சிக்கல்தான். அனைத்து நோய்களின் தாக்கமும் மலச்சிக்கலில் இருந்துதான் ஆரம்பிக்கும். மலச்சிக்கலைப் போக்கினாலே நோயில்லா நல்வாழ்வு வாழலாம் என்பது சித்தர்களின் கூற்று. நன்கு கனித்த கொய்யாப் பழத்தை இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். குடலின் செரிமான சக்தி அதிகரிக்கும்.

வயிற்றுப்புண் ஆறும்: தற்போதைய உணவுகளில் அதிகம் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் அவை அஜீரணத்தை உண்டாக்கி வயிற்றுப் புண்ணை ஏற்படுத்துகிறது. இதனைப் போக்க உணவுக்குப்பின் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிக நல்லது. மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் இப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் மூல நோயிலிருந்து விடுபடலாம்.
கல்லீரல் பலப்படும்: உடலின் சேமிப்புக் கிடங்கான கல்லீரல் பாதிக்கப்பட்டால், உடலின் பித்தத்தின் தன்மை மாறுபடும். இதனால் உடல் பல பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும். இதை தவிர்த்து கல்லீரலை பலப்படுத்த கொய்யாப்பழத்தை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.
நீரிழிவு நோயாளிகளுக்கு: நீரிழிவு நோயின் தாக்கம் கண்டாலே அதை சாப்பிடக் கூடாது இதை சாப்பிடக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் பாடாய்ப்படுத்தும். ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளை குறைக்க கொய்யாப்பழம் உகந்தது. மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் தன்மையும் உண்டு.
ரத்தச்சோகை மாறும்: ரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் ரத்தச்சோகை உண்டாகிறது. இந்தியக் குழந்தைகளில் அதுவும் பெண் குழந்தைகளில் 63.8 சதவீதம் குழந்தைகள் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இக்குறையை பழங்களும் கீரைகளும் நிவர்த்தி செய்யும். இதில் குறிப்பாக கொய்யாப்பழம் ரத்தச்சோகையை மாற்றும் தன்மை கொண்டது.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு:
குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் சி சத்து கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு அளவோடு கொய்யப்பழத்தைக் கொடுத்து வந்தால் குழந்தைகளின் எலும்புகள் பலப்படும். பற்கள் பலமடையும். நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.குழந்தைகளுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும். சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொய்யாவுக்கு உண்டு. நரம்புகளைப் பலப்படுத்தும். உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும்.

கொழுப்பைக் குறைக்கும்: அதிக ரத்த அழுத்தம், அதிக கொழுப்பை குறைக்கும் தன்மை கொய்யாவுக்கு உண்டு. தினமும் இரண்டு கொய்யாப்பழம் உண்டு வந்தால் கொலஸ்டிரால் குறையும் என இந்திய இருதய ஆராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளது.

இதய படபடப்பு நீங்கும்: ஒரு சிலருக்கு சிறிது வேலை செய்தால் கூட இதயம் படபடப்பு உண்டாகிவிடும். உடலில் வியர்வை அதிகம் தோன்றும். இது இதய நோயின் அறிகுறியாகக்கூட அமையலாம். இந்த படபடப்பைக் குறைக்க கொய்யாப்பழம் மிகவும் உகந்தது. இதய படபடப்பு உள்ளவர்கள் தினம் ஒரு கொய்யாப்பழம் உண்பது நல்லது.