Wednesday, 31 July 2013

மெக்காலேவின் சூழ்ச்சி - Macaulay's Trick



 வெட்கப்படவா? இல்ல துக்கப்படவா?

அடிமை ஆகினோம் என்று என்னவா? இல்லை ஏமாற்றப்பட்டோம் என்று என்னவா?

எப்படி நினைத்தாலும் சரி, எனது எண்ணம் நமது(இந்தியன்) கலாச்சாரமும், பண்ப்பாடும், மனிதநேயமும் அழிந்து கொண்டு தான் போகிறது.

இங்கே இருக்கும் புகைப்படம் ஆங்கிலேயன் Lord Macaulay என்பவரால் British Parliament யில் 1835 Feb 2ல் கூறப்பட்டது.

"நான் இந்தியா முழுவதும் சுற்றி பார்த்து விட்டேன், அங்கு ஒரு பிச்சைகாரனையோ, திருடனையோ கண்டது இல்லை. ஒரு தனி கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், வீரமும் கொண்ட நாடு தான் இந்தியா.

நாம் இந்தியாவை முழுமையாக ஆள முடியாதது, ஆனால் அவர்கள் பழமையான கல்வி முறையை நம் கல்வி முறைக்கு மாற்றி, அவர்கள் பண்பாட்டை மாற்றி நாமும் நம் ஆங்கிலமும் சிறந்ததது என்று நினைக்கவைதால் அவர்கள் அவர்கள் மீது வைத்து இருந்த நம்பிக்கை இழந்து விடுவார்கள், அதன் பின்னர் நாம் தெரிவிக்கும் முறையே அங்கு கலாச்சாரமாக மாறும்" என்று Lord Macaulay கூறியுள்ளான்.

அவன் நினைத்தது போல பலமாற்றங்கள் வந்தது இன்றும் அவனுக்கு அடிமையாகியது போலவே ஒரு உணர்வை தூண்ட செய்கிறது அவன் பரப்பிய கல்வியும், மத வெறியர்களையும் பார்கையில். 

அடிமை படுத்தியவன் சாதித்தானா? இல்லை அடிமையாக இருந்தவன் சாதி
த்தானா என்று கேட்டால்???

உங்களை சுற்றி நடப்பதை பாருங்கள் உங்களுக்கே புரியும் யார் வென்றார்கள் என்று.

.....கிஷன்......

Monday, 29 July 2013

குங்குமப்பூ அழகா? ஆரோக்கியமா?




ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, தனக்குப்பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பே.

இதற்காகக் குங்குமப் பூவை பசும்பாலில் கலந்து அருந்துவார்கள். இது ஒரு சம்பிரதாயம் போல் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த குங்குமப்பூ உண்மையிலேயே குழந்தைக்கு நல்ல நிறத்தையும் போஷாக்கையும் தருகிறதா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதுண்டு.

குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால் கருவுற்ற 5-ஆம் மாதத்திலிருந்து 9-வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. ஆரோக்கிய குழந்தைதான் அழகான குழந்தை என்பதை அறிந்த நம் முன்னோர்கள் குங்குமப்பூவை கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள்.

இது நலமான குழந்தையை பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. குங்குமப்பூவை ஞாழல்பூ, காஷ்மீரம் என்ற பெயர்களில் அழைக்கின்றனர். குங்குமப் பூ இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டது. இதனால் கருவுற்ற பெண்களுக்கு 5 ஆம் மாதம் முதல் 9 ஆம் மாதம் வரை கொடுப்பார்கள். இரத்த சோகையைப் போக்கி குழந்தையும் தாயும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும். பிறக்கும் குழந்தை நல்ல நிறப்பொலிவுடன் பிறக்கும்.

குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பிரசவத்தின் போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.
பிரசவித்த தாய்மார்களுக்கு
பிரசவித்த தாய்மார்களுக்கு உண்டாகும் குருதியிழப்பை சரிகட்டவும், மயக்கத்தைப் போக்கி புத்துணர்வு கொடுக்கவும், இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கவும் தினமும் 1/2 கிராம் அளவு 1 டம்ளர் பாலில் கலந்து அருந்துதல் நல்லது.

மேலும் சில பயன்கள்:

குங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி இரவு படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து நன்கு பசியைக் கொடுக்கும்.
குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்திவந்தால் தாது விருத்தியாகும், வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும், இரத்தம் சுத்தமாகும், இரத்தச்சோகை நீங்கும்.

கருவுற்ற பெண்களுக்கு சளி, இருமல் இருந்தால் அது குழந்தையின் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சளி இருமல் தாக்காமல் இருக்க குங்குமப்பூ சிறந்த மருந்தாகும்.

உண்மையான குங்குமப்பூவைத் தேர்வு செய்து வாங்குவதில் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது. உண்மையான குங்குமப்பூவைத் தேர்வு செய்து வாங்கிப் பயனடையலாம்.

இந்தியாவின் அஞ்சல் தலையில் தமிழுக்கு ஏன் இடமில்லை ?


ஒரு நாட்டின் பண்பாடு, மொழி மற்றும் சிறப்புகளை உலகில் பல இடங்களுக்கு எடுத்துச் செல்வது அஞ்சல் தலைகள் தான். இந்தியா போன்ற பல மொழிகள், பண்பாடுகள் மற்றும் சிறப்புகள் உள்ள நாட்டின் அஞ்சல் தலைகள் ஒரே ஒரு இந்திய மொழியில் மட்டுமே வெளியிடுதல் நியாயம் தானா என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவில் இந்தி மட்டும் தான் பேசப்படுகிறதா ? வெளிநாட்டில் வாழும் பலருக்கு இப்படியான செய்தி தான் போய் சேருகிறது. இந்திய நாட்டின் அஞ்சல் தலைகளை வெளிநாட்டினர் பார்க்க நேர்ந்தால், இந்தியாவில் இந்தி மட்டும் தான் தேசிய மொழி என்ற தவறான புரிதலுக்கு அவர்கள் ஆளாகின்றனர். 

மேலும் தமிழ்நாட்டில் இருந்து பிற இந்திய மாநிலங்களுக்கு செல்லும் உள்நாட்டு அஞ்சல் தலைகளிலும் தமிழ் இல்லை. எடுத்துக் காட்டாக தமிழ்நாட்டில் இருந்து வங்கத்திற்கு ஒரு அஞ்சல் சென்றால் , அதுவும் இந்தி மொழியிலேயே இருக்கிறது. அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அஞ்சல் தலையும் இந்தியில் தான் இருக்கிறது. இங்கு வேற்றுமையில் ஒற்றுமை எங்கு வாழ்கிறது ? 

தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் அஞ்சல் தலைகள் தமிழில் இருந்தால் , மேற்கு வங்கத்திற்கு சென்றடையும் போது அங்குள்ள மக்கள் தமிழ் எழுத்துருக்களை அறிந்து கொள்வார்கள் இல்லையா? அதே போல் மேற்கு வங்கத்தில் இருந்து வரும் அஞ்சல் தலைகள் தமிழகம் வரும் போது அவை வங்க மொழியில் இருந்தால் தமிழர்கள் வங்க தேசத்தை பற்றியும் , அவர்கள் பண்பாட்டை, எழுத்துருக்களை பற்றியும் அறிந்து கொள்ளலாம் அல்லவா ? இப்படி ஒவ்வொரு தேசிய இனங்களும் அவர்கள் அடையாளத்தையும் , மொழியையும் அஞ்சல் தலை மூலமாக மற்ற தேசிய இனங்களுக்கு எடுத்துச் செல்ல அஞ்சல் தலை உதவும் அல்லவா ? 

உலக நாடுகளில் இலங்கை அரசு தமிழ் மொழிக்கு முழு உரிமையும் கொடுத்து அனைத்து அஞ்சல் தலைகளிலும் தமிழில் வெளியிடுகிறது. தமிழ் இனத்தை அழிக்கும் இலங்கை தேசம் கூட தமிழ் மொழியை அரசு மொழியாக்கி வாழ வைக்கிறது. தமிழீழம் தமிழருக்கு அமையவில்லை. ஒரு வேலை அமைந்திருந்தால் இப்படத்தில் காணப்படும் 'ஈழம்' என்ற சொல்லை தாங்கிய அஞ்சல்தலை உலகெங்கும் பரவி இருக்கும். அதே போல் 1960 களில் தமிழரசு என்ற பெயர் தாங்கி ஈழத் தமிழர்களால் ஒரு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. தமிழர்களுக்கு எல்லா உரிமையும் வேண்டும் என்றும் சிங்கள ஒருமொழி கொள்கையை எதிர்த்தும் தமிழர்கள் அப்போது தமிழரசு கட்சியின் சார்பில் அஞ்சல் தலை வெளியிட்டனர். மொரிசியஸ் , மலேசியா போன்ற வெளிநாடுகள் கூட அவ்வப்போது தமிழை பெருமைப்படுத்தும் விதமாக தமிழ் எழுத்துகளை தாங்கிய அஞ்சல் தலையை வெளியிடுகிறது. 

நிலைமை இப்படி இருக்க இந்தியாவில் மட்டும் இந்தி அல்லாத எந்த மொழிக்கும் அஞ்சல் தலை மற்றும் நாணயங்களில் இடமில்லை என்பது எவ்வளவு பெரிய அவமானம். இந்தியாவில் முதல் மொழி , உலகின் மூத்த மொழி தமிழாக இருந்தும் தமிழ் மொழி இந்திய அஞ்சல் தலையில் வரவில்லையே என்ற ஏக்கம் தமிழ் ஆர்வலர்கள் நடுவே நெருப்பாக கனன்று கொண்டே தான் இருக்கிறது. ஒரு நாள் எரிமலையாக கூட வெடிக்கலாம். அஞ்சல் தலையில் தமிழையும் , பிற மொழிகளையும் கொண்டு வருவதில் எந்த சிக்கலும் இல்லை. இந்திய அரசு நினைத்தால் செய்யலாம். ஆனால் திட்டமிட்டே பிற மொழிகளை புறக்கணிக்கும் ஹிந்திய அரசுக்கு இருப்பதால் இதை செய்யுமா என்பது தான் கேள்விக்குறி . 

தமிழ்நாடு அரசு இதற்கான குரலை உடனே கொடுக்க வேண்டும். அந்தந்த மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் அஞ்சல் தலைகள் அந்தந்த மாநில மொழிகளில் வெளியிட வேண்டும் என்ற சட்டம் இயற்ற வேண்டும். மாநிலங்களின் பண்பாடு மற்றும் மொழி எழுத்துருக்களை தாங்கிய அஞ்சல் தலைகளை வெளியிடும் முழு உரிமையும் மாநில அரசுக்கே வழங்கப்படுத்தல் வேண்டும். ஆளும் கட்சிகள் எதிர்கட்சிகள் இதற்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும். அப்போது தான் உண்மையில் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பதத்திற்கு பொருள் காணப்படும். தமிழும், தமிழர் பண்பாடும் அஞ்சல் தலை மூலகமாக உலகெங்கும் பவனி வரும். 

- தமிழர் பண்பாட்டு நடுவம்( From Facebook)


 

Sunday, 28 July 2013

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்

*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பைக் குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

*கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பவுடர் :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பவுடர் :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பவுடர் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பவுடர் :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பவுடர் :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பவுடர் :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பவுடர் :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

*கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பவுடர் :- ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பவுடர் :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பவுடர் :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பவுடர் :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பவுடர் :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பவுடர் :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பவுடர் :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பவுடர் :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பவுடர் :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பவுடர் :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

Thursday, 25 July 2013

ஒடிசா பாலு - தமிழனின் பெருமைகளை ஆராய்ச்சி செய்பவர்.

Orissa Balu
 
கடல் ஆராய்ச்சியாளரான ஒடிசா பாலு , கடலுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான பந்தத்தை விளக்கினார்.

''கன்னியாகுமரி கடல் பகுதியை லட்சத்தீவு கடல் என்கிறார்கள். உண்மையில் அதை குமரிக் கடல் என்றுதான் அழைக்க வேண்டும். ஏனெனில், கன்னியாகுமரி கடலில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு அழிந்துபோன சங்கத் தமிழ் நகரங்களின் எச்சங்களும் மலைத் தொடர்களும் மூழ்கிக்கிடக்கின்றன. இந்த இடிபாட்டுப் பகுதிகள் சுறாக்கள் இனப் பெருக்கம் செய்ய உகந்தவை.

கடலில் உள்ள நீரோட்டங்களை நன்கு அறிந்தவை ஆமை கள். செயற்கைக்கோள் உதவியுடன் ஆமை களை ஆராய்ந்ததில் ஓர் உண்மை தெரிந்தது.

ஆமைகள் தமிழகக் கடலில் பாயும் நீரோட் டங்களின் வழியே நீந்தாமல் மிதந்து சென்றே பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து பல்வேறு நாடுகளைச் சென்றடைகின்றன.

இது இன்று, நேற்று நடப்பதல்ல. 65 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசருக்கு இணையான மூதாதையரான இந்த ஆமை கள், காலம் காலமாக இப்படித்தான் கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களை முட்டையிட தேடிச் செல்கின்றன.

ஆமைகள் அப்படிச் செல்லும்போது அதனைப் பின் தொடர்ந்து சென்று கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களைக் கண்டுபிடித்து தொழிலை யும் நாகரிகத்தையும் உலகில் முதன்முதலில் வளர்த்தது தமிழர்களே.

இன்றும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 1,300 தமிழ்ப் பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன. உலகெங்கும் உள்ள ஊர்களில் தமிழ் வாசம் வீசுகிறது. அவை எல்லாம் தமிழர்கள் ஆமையைப் பின்பற்றிச் சென்று கடல் வழி நீரோட்டப் பயணங்கள் மூலம் நிலங்களைக் கண்டடைந்ததன் விளைவுகள்.

ஆனால், இன்று அந்த ஆமைகளைப் பெருமளவு அழித்துவிட்டோம். கடலின் நீரோட்டங் களில் பல்வேறு வண்ணங்களில் அடித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளை ஜெல்லி மீன்கள் என்று நினைத்துச் சாப்பிடும் ஆமைகள் இறந்துபோகின்றன.


சென்னையில் அடையாறு, கூவம், முட்டுக்காடு, எண்ணூர் உட்பட தமிழகத்தில் 33 முகத்துவாரங்கள் இருக்கின்றன.

இவைதான் சுனாமியில் இருந்து தமிழகத்தைக் காக்கும் மிகப் பெரிய அரண்கள். இந்த முகத்துவாரங்கள் வேகமாக வரும் கடல் நீரை உள்வாங்கி அலைகளைச் சாந்தப்படுத்தி மீண்டும் கடலுக்குள் கொண்டுசென்றுவிடுகின்ற பணியைச் செய்கின்றன.

ஆனால், இன்று அத்தனை முகத்துவாரங்களையும் சேதப்படுத்திவிட்டு, கற்களைக் கொட்டி கடல் அலையைத் தடுக்க முற்படுகிறோம். கல்லைக் கொட்டி எல்லாம் கடல் அலைகளைத் தணிக்க முடியாது!'' என்று முடித்தார்.
 http://news.vikatan.com/article.php?module=news&aid=12355
Orissa Balu Facebook Address: https://www.facebook.com/orissa.balu
ஒடிசா பாலு தமிழனின் பெருமைகளை ஆராய்ச்சி செய்பவர்.
 

கரும்பின் நன்மைகள்





கரும்பு:

கரும்பில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. ஆனால் அதன் உண்மையான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. அதனால் கரும்பு சாப்பிடாமல் இருக்கின்றனர். முதலில் கரும்பின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

ஏனெனில் பொங்கல் பண்டிகையின் போது தான் கரும்பு மிகவும் விலை மலிவாக கிடைக்கும். இந்த நாட்களில் கரும்பை சாப்பிட்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயலுங்கள். இப்போது கரும்பை சாப்பிட்டால், என்ன நன்மைகளைப் பெறலாம் என்பதைப் பார்ப்போமா!!!

மஞ்சள் காமாலை:

கரும்பு சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. பொதுவாக மஞ்சள் காமாலை வந்தால், சருமம் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இதற்கு காரணம், பிலிரூபின் இரத்தத்தில் கலந்திருப்பதே ஆகும். அதுமட்டுமின்றி மோசமான கல்லீரல் செயல்பாடுகள் மற்றும் பித்த நாளங்களில் அடைப்பு போன்றவைகளும் மஞ்சள் காமாலையை உண்டாக்கும். எனவே மஞ்சள் காமாலையிலிருந்து உடனே குணமாவதற்கு, இரண்டு டம்ளர் கரும்பு சாற்றுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.

தொற்றுநோய்கள்:

உடலில் உள்ள சிறுநீரக குழாய், பிறப்புறுப்பு, செரிமான மண்டலக் குழாய் போன்ற பல இடங்களில் தொற்றுநோய்களினால் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும். இத்தகையவற்றை சரிசெய்ய ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால், அவை சரியாகிவிடும்.

சிறுநீரக கற்கள்:

கரும்பின் நன்மைகளிலேயே முக்கியமான ஒன்று என்றால் அது சிறுநீரக கற்களை குணமாக்குவது தான். பொதுவாக இந்த கற்கள் உடலில் ஏற்படும் வறட்சியினால் ஏற்படும். அதற்காகத் தான் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் அவை அந்த கற்களை உடைத்து வெளியேற்றிவிடும். எனவே தண்ணீர் மட்டுமின்றி, கரும்பு சாற்றையும் குடித்தால், அந்த கற்கள் எளிதில் உடைந்து கரைந்துவிடும்.

நீரிழிவுக்கு கரும்பு:

இனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் சாப்பிட பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் இதில் இருக்கும் இனிப்பானது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்கும். எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை எந்த ஒரு அச்சமுமின்றி சாப்பிடலாம்.

ஊட்டச்சத்துக்கள்:

கரும்பில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அதிலும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால், உடலில் எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாடுமின்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்

சளி, இருமல் மற்றும் தொண்டை வலி:

நிறைய பேர் இருமல், சளி அல்லது தொண்டை வலி இருந்தால், கரும்பை நிச்சயம் சாப்பிடக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் அந்த மாதிரியான எண்ணம் தவறானது. இந்த மாதிரியான பிரச்சனைக்கு சிறந்தது என்று சொன்னால், அது கரும்பு தான்.

புற்றுநோய்:

கரும்பில் இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையுடையது. குறிப்பாக பெருங்குடல், நுரையீரல் அல்லது மார்பக புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்தது.

நீர் வறட்சி:

நிறைய மக்கள் அதிக அளவு தண்ணீர் குடிப்பதை விரும்பமாட்டார்கள். எனவே அத்தகையவர்களுக்கு உடலில் ஏற்படும் வறட்சியை நீக்க கரும்பு சாற்றை குடிக்கலாம். மேலும் கோடைகாலத்தில் உடலானது அதிக சூடாக இருக்கும். எனவே உடல் வெப்பத்தை தணிப்பதற்கு தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு குடிப்பது நல்லது.


- Thanks for Facebook - உலக தமிழ் மக்கள் இயக்கம்

Tuesday, 23 July 2013

CT SCAN மற்றும் MRI SCAN



மருத்துவ கருவிகள் - CT SCAN

பல மருத்துவமனைகளில், ஆராய்ச்சி மையங்களில், கண்டறி நிலையங்களில் (SCAN சென்டர்ஸ்), " இங்கு CT ஸ்கேன் செய்யப்படும், MRI எடுக்கப்படும், ECG எடுக்கப்படும், XRAY வசதி உண்டு, BLOOD TEST செய்யப்படும்" என பல விளம்பரங்களை காணலாம்! இவை எல்லாம் என்ன? எதற்காக? என்ன வித்தியாசம்?

இவைகளை பற்றி சிறிதளவு தெரிந்து வைத்திருந்தால் அறிவுக்காக இல்லாமல் ஆபத்து காலங்களுக்காகவாவது உதவும். என்னால் முடிந்த அளவு எளிமையாக விளக்க முயற்சிக்கிறேன். சிறிதேனும் உதவியாக இருந்தால் மகிழ்ச்சி.

ஏதாவது விபத்து ஏற்பட்டாலோ, தவறி விழுந்தாலோ தற்போது மருத்துவர்கள் பரிந்துரை செய்வது CT SCAN மற்றும் MRI . இந்த இரண்டு கருவிகளும் உடலின் அனைத்து பாகங்களையும் ஸ்கேன் செய்து பார்க்க உதவுகிறது, இரண்டும் ஏறக்குறைய ஒரே பணியை செய்தாலும், இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் தொழில்நுட்பத்திலும் கட்டணத்திலும் உள்ளது.

CT ஸ்கேன்:

COMPUTED TOMOGRAPH என்பதின் சுருக்கமே CT ஆகும். இதை 3 பகுதிகளாக பிரிக்கலாம். முதலாவது COMPUTER அடுத்து PATIENT TABLE பிறகு GANTRY . பலர் XRAY பிலிம் - ஐ பார்த்திருப்பீர்கள், பல படங்களிலும் சிலர் வீட்டிலும் இருக்கும் கருப்பு BACKGROUND இல் எலும்புகள் தெரியும் ஒளி ஊடுருவும் படம். இந்த XRAY பிலிம் போல் பல பில்ம்களை சேர்த்தால் கிடைக்கும் ஒரு தொடர் படங்களே CT ஸ்கேன்.


CT ஸ்கேன்

நம் திரைப்படங்களில் அடுத்தடுத்த frame களின் தொடர்ச்சியே படமாக வரும் அதுபோல அடுத்தடுத்த XRAY பிலிம் களின் தொடர்ச்சியே CT ஸ்கேன் படமாக வருகிறது.ஆனால் FILM களில் RECORD செய்யாமல் கம்ப்யூட்டர் இல் பதிவு செய்து எடுக்கப்படுகிறது.

முதலில் PATIENT ஐ டேபிள் இல் படுக்க வைப்பர்.

அந்த டேபிள் இன் மேல் பாகம் GANTRY எனப்படும் பெரிய வலையத்திற்குள் பொருத்தி எந்த பாகம் ஸ்கேன் செய்ய வேண்டுமோ அந்த இடத்தை POSITION செய்வர்.

GANTRY - க்கு உள்ளே ஒரு XRAY TUBE உம் DETECTOR களும் எதிர் எதிரில் இருக்கும், ஸ்கேன் ஆரம்பித்தவுடன் இவை இரண்டும் GANTRY வளையத்தில் வேகமாய் சுற்றும்.


XRAY கதிர் வீச்சை உமிழ PATIENT இன் உடலில் ஊடுருவி DETECTOR ஐ சேரும். DETECTOR அதை கம்ப்யூட்டர் ருக்கு அனுப்பி ஒரு தெளிவான IMAGE ஐ கொடுக்கும்.



XRAY கதிர் எலும்புகளை ஊடுருவாது அதனால் அந்த இடங்களை தவிர்த்து மற்ற இடங்கள் ஊடுருவல் அடிப்படையில் வெள்ளை கருப்பாக மாறி தெரியும்.

டிப்ஸ்:
இப்போது வளர்ந்துள்ள தொழில்நுட்பத்தால் XRAY TUBE சுற்றும் வேகத்தை பொறுத்து SCAN செய்யும் இடமும் மாறுகிறது. வேகமாக இயங்கும் இதயத்தை கூட ஸ்கேன் செய்ய முடியும், இதன் மூலம் ரத்த குழாய் அடைப்பையும் காணலாம். சுற்றும் வேகம் கூட கூட கட்டணமும் அதிகரிக்கும்.

எச்சரிக்கை:
கதிர்வீச்சை உபயோகிப்பதால் கர்ப்பிணி பெண்கள் ஸ்கேன் செய்ய கூடாது, அங்கு வேலை செய்யும் TECHNICIAN கள் பாதுகாப்பு முறைகளை கையாள்வது அவசியம். சரியான அளவு உபயோகித்தால் இது மருத்துவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

Thanks-arunprasathgs.blogspot

Monday, 22 July 2013

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்..


  1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து கால் வலிக்க அவள் காத்திருப்பாள்

2) அவள் மீது தவறே இல்லாவிட்டாலும் உங்களுடன் சமாதானம் ஆக அடிக்கடி மன்னிப்பு கேட்பாள்.

3) உங்கள் வார்த்தை தரும் வலியில் கண்ணீர் வடிந்தாலும் அடுத்தகனமே புன்னகையில் அதை மறைத்திடுவாள் .

4) நீங்கள் எத்தனை முறை காயப்படுத்தி இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் மீது கொண்ட நேசம் மட்டும் குறையாமல் பார்த்துக் கொள்வாள்.

5) இருவரும் விவாதிக்கும் விடயத்தில் அவள் சொல்லும் கருத்து சரியாக இருக்கும் போதிலும் விவாதத்தை தொடராமல் முடிக்கவே முயற்சி செய்வாள் உங்கள் உறவு முறிந்து போகாமல் இருக்க.

6)சிறு சிறு குறும்புகள் செய்தேனும் உங்களை சிரிக்க வைக்க முயற்சிப்பாள்.நீங்கள் அவளுக்கு எத்தனை முக்கியமானவர் என்பதை அடிக்கடி உறுதி செய்வாள்.

7)நீங்கள் சந்தோசமாக இருக்கும் தருணத்தில் அவள் கவலையாக இருந்தால் , அதைப் பகிர்ந்து உங்கள் சந்தோசம் கெட்டு விடக் கூடாதென்று கவலைகளைக் கண்ணில் மறைப்பாள்.

8)உங்களின் ஒரு சில முரட்டு குணங்கள் அவளை பாதித்தாலும் உங்களை விட்டு விலகும் எண்ணம் இல்லாதவளாய் இருப்பாள்.

9)உங்கள் குடும்பத்திலும் நண்பர் வட்டத்திலும் நீங்கள் மதிப்போரையும் நேசிப்போரையும் அவளும் நேசிப்பாள்.

10)நீங்கள் தொலைப் பேசியில் அழைக்காவிட்டாலும் அவள் அழைப்புக்கு பதிலளிக்கா விட்டாலும் , அதற்கு நீங்கள் தரும் விளக்கத்தையும் உங்கள் சூழ்நிலையையும் புரிந்துக் கொள்வாள்.
(நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. எனக்கு என் மனைவி அனிதா  கிடைத்திருக்கிறாள் - சிவகுமார்)

Friday, 19 July 2013

வெ‌ற்‌றி பெற மூ‌ன்று வ‌ழிக‌ள்...

ம‌ற்றவ‌ர்களை ‌விட அ‌திகமாக தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.
ம‌ற்றவ‌ர்களை விட அ‌திகமாக ப‌ணியா‌ற்று‌ங்க‌ள்.
ம‌ற்றவ‌ர்களை ‌விட குறைவாக எ‌தி‌ர்பாரு‌ங்க‌ள்.

-‌வி‌ல்‌லிய‌ம்‌ஸ் ஷே‌க்‌ஸ்‌பிய‌ர்

Sunday, 14 July 2013

கற்க

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.