ஒடிசா பாலு - தமிழனின் பெருமைகளை ஆராய்ச்சி செய்பவர்.
கடல் ஆராய்ச்சியாளரான ஒடிசா பாலு , கடலுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான பந்தத்தை விளக்கினார்.
''கன்னியாகுமரி கடல் பகுதியை லட்சத்தீவு கடல் என்கிறார்கள். உண்மையில் அதை
குமரிக் கடல் என்றுதான் அழைக்க வேண்டும். ஏனெனில், கன்னியாகுமரி கடலில்
சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு அழிந்துபோன சங்கத் தமிழ் நகரங்களின்
எச்சங்களும் மலைத் தொடர்களும் மூழ்கிக்கிடக்கின்றன. இந்த இடிபாட்டுப்
பகுதிகள் சுறாக்கள் இனப் பெருக்கம் செய்ய உகந்தவை.
கடலில் உள்ள நீரோட்டங்களை நன்கு அறிந்தவை ஆமை கள். செயற்கைக்கோள் உதவியுடன் ஆமை களை ஆராய்ந்ததில் ஓர் உண்மை தெரிந்தது.
ஆமைகள் தமிழகக் கடலில் பாயும் நீரோட் டங்களின் வழியே நீந்தாமல் மிதந்து
சென்றே பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து பல்வேறு நாடுகளைச்
சென்றடைகின்றன.
இது இன்று, நேற்று நடப்பதல்ல. 65 கோடி
ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசருக்கு இணையான மூதாதையரான இந்த ஆமை கள், காலம்
காலமாக இப்படித்தான் கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களை முட்டையிட தேடிச்
செல்கின்றன.
ஆமைகள் அப்படிச் செல்லும்போது அதனைப் பின் தொடர்ந்து
சென்று கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களைக் கண்டுபிடித்து தொழிலை யும்
நாகரிகத்தையும் உலகில் முதன்முதலில் வளர்த்தது தமிழர்களே.
இன்றும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 1,300 தமிழ்ப் பெயர்களில்
ஊர்கள் இருக்கின்றன. உலகெங்கும் உள்ள ஊர்களில் தமிழ் வாசம் வீசுகிறது. அவை
எல்லாம் தமிழர்கள் ஆமையைப் பின்பற்றிச் சென்று கடல் வழி நீரோட்டப் பயணங்கள்
மூலம் நிலங்களைக் கண்டடைந்ததன் விளைவுகள்.
ஆனால், இன்று அந்த
ஆமைகளைப் பெருமளவு அழித்துவிட்டோம். கடலின் நீரோட்டங் களில் பல்வேறு
வண்ணங்களில் அடித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளை ஜெல்லி மீன்கள் என்று
நினைத்துச் சாப்பிடும் ஆமைகள் இறந்துபோகின்றன.
சென்னையில் அடையாறு, கூவம், முட்டுக்காடு, எண்ணூர் உட்பட தமிழகத்தில் 33 முகத்துவாரங்கள் இருக்கின்றன.
இவைதான் சுனாமியில் இருந்து தமிழகத்தைக் காக்கும் மிகப் பெரிய அரண்கள்.
இந்த முகத்துவாரங்கள் வேகமாக வரும் கடல் நீரை உள்வாங்கி அலைகளைச்
சாந்தப்படுத்தி மீண்டும் கடலுக்குள் கொண்டுசென்றுவிடுகின்ற பணியைச்
செய்கின்றன.
ஆனால், இன்று அத்தனை முகத்துவாரங்களையும்
சேதப்படுத்திவிட்டு, கற்களைக் கொட்டி கடல் அலையைத் தடுக்க முற்படுகிறோம்.
கல்லைக் கொட்டி எல்லாம் கடல் அலைகளைத் தணிக்க முடியாது!'' என்று
முடித்தார்.
Orissa Balu Facebook Address: https://www.facebook.com/orissa.balu
ஒடிசா பாலு தமிழனின் பெருமைகளை ஆராய்ச்சி செய்பவர்.
No comments:
Post a Comment