கொழுப்பைக் குறைக்கலாம்!
நயன்தாராவில் தொடங்கி அமலா பால் வரை நடிகைகள் பலரும் 'லிப்போசக்ஷன்’ (Liposuction) என்ற உடலை ஸ்லிம்மாக மாற்றும் சிகிச்சை செய்துகொண்டதாக அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஒரு படத்தில் கொழுகொழுவென இருந்த நடிகை, அடுத்த படத்தில் ஸ்லிம்மாக காட்சியளித்தால், 'லைப்போசக்ஷன்’ செய்துகொண்டார், என்ற பேச்சும் எழதான் செய்கிறது. லைப்போசக்ஷன் சரியான சிகிச்சைதானா... பாதுகாப்பானதா? என்பது பற்றி, சென்னை காவேரி மருத்துவமனையின் மூத்த காஸ்மெட்டிக் சர்ஜன் ஜெயந்தி ரவீந்திரனிடம் கேட்டோம்.
'லிப்போசக்ஷன் என்றால், உடல் எடைக் குறைப்பு சிகிச்சை இல்லை. 120 கிலோ எடை உள்ளவர்கள், லிப்போசக்ஷன் மூலம் 80 கிலோவுக்கு எடை குறைந்துவிடலாம் என்று நினைத்தால், அது தவறு. உடல் எடைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், சரியான உணவுமுறை, உடற்பயிற்சிச் செய்வதன் மூலமே உடல் எடையைக் குறைக்க முடியும்.
அப்படி உடற்பயிற்சி செய்யும்போது வயிறு, தொடை, புஜம் என உடலின் ஒருசில பகுதிகளில் சேர்ந்துள்ள அதிகப்படியான எடையைக் குறைப்பது சிரமமாக இருக்கும். இருப்பினும், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியுடன் உடலின் சில பகுதிகளில் சேர்ந்துள்ள அதிகப்படியானக் கொழுப்பை உறிஞ்சி எடுப்பதன் மூலம், ஒட்டுமொத்தப் பலனைப் பெற முடியும். இப்படி அதிகப்படியானக் கொழுப்பை உறிஞ்சி எடுக்கும் சிகிச்சை முறைக்கு, 'லிப்போசக்ஷன்’ என்று பெயர்'' என்கிற டாக்டர் ஜெயந்தி, இதற்கான சிகிச்சை முறைகளையும் சொன்னார்.
''சிகிச்சைக்காக வருபவர்களுக்கு உடலில் எங்கெல்லாம் கொழுப்பை அகற்ற வேண்டும் என்பதையும் முதலில் பரிசோதனை செய்து திட்டமிடுவோம்.
லிப்போசக்ஷன் சிகிச்சையின்போது, மெல்லிய சிறிய குழாய் ஒன்று தோலுக்கு அடியில் பொருத்தப்படும். இதன்மூலம் முகத்தின் நாடி, கை, வயிறு, இடுப்பு, தொடை, மார்புப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பு அகற்றப்படும்.
சிறிய பகுதியில் கொழுப்பு அகற்றப்பட வேண்டும் எனில், அந்தக் குறிப்பிட்டப் பகுதிக்கு மட்டும் உணர்வு நீக்க மருந்து கொடுத்து, லிப்போசக்ஷன் செய்யப்படும். இதுவே பெரிய பகுதியாக இருந்தால், சிகிச்சையின் நேரம் அதிகமாகும். அப்போது சற்றுக் கூடுதலாக மயக்க மருந்து கொடுத்து, சிகிச்சை அளிக்கப்படும். காலையில் அறுவைசிகிச்சைச் செய்துவிட்டு, அன்று மாலையே வீடு திரும்பலாம்.
இந்த அறுவைசிகிச்சைக்கு 'பவர் அசிஸ்டெட் லிப்போசக்ஷன்', 'லேசர் லிப்போசக்ஷன்’ போன்ற பல்வேறு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. அல்ட்ரா சவுண்ட் துணையுடனும், சாதாரண மருந்து செலுத்தும் ஊசி மூலமாகவும் உடலில் உள்ள கொழுப்பு உறிஞ்சி எடுக்கப்படுகிறது.
கொழுப்பை உறிஞ்சி எடுக்கவேண்டிய இடத்தில், 'டியூம்சென்ட்’ (Tumescent)என்ற மருந்தைச் செலுத்தப்படும். இந்தச் சிகிச்சை மூலம் ரத்த இழப்பு பெருமளவு குறைக்கப்படும்.
தோலுக்கும் தசைக்கும் நடுவில் உள்ள கொழுப்பை மட்டுமே லிப்போசக்ஷன் முறையில் அகற்றப்படுகிறது. தசைக்கு கீழ் உள்ள கொழுப்பையோ, வயிற்றுக்குள் உள்ள கொழுப்பையோ தொடுவது இல்லை. இந்தச் சிகிச்சைக்குப் பிறகு, அறுவைசிகிச்சை செய்த இடம் கண்ணிப்போனதுபோல் நிறம் மாறி, மறத்துப்போயிருக்கும். இது, ஆறு வாரங்களில் சரியாகிவிடும்.
சக்ஷன் செய்வதற்கான கருவியைச் செலுத்த, ஒரு செ.மீ-க்கும் குறைவான துவாரம் போடுவோம். அந்தப் பகுதியில் தழும்புத் தடிமனாகாமல் இருக்கவும், குணம் அடையவும் மருந்து தரப்படும். இதனால், ஓரளவுக்குத் தழும்புகள் தெரியாமல் இருக்குமே தவிர, முற்றிலும் மறையாது.
உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மேற்கொண்டும், சிலருக்கு உடலின் சில இடங்களில் தசைகள் குறையாமல் பெரிதாக இருக்கலாம். அந்தக் குறிப்பிட்ட இடத்தில் உள்ள கொழுப்பை அகற்றி, உடலின் மற்ற பகுதியைப்போல இருக்க இந்தச் சிகிச்சை உதவுகிறது. 100 கிலோ உள்ளவர் 20 கிலோ குறைக்கவேண்டும் என்றால், இதில் செய்ய முடியாது. இந்தச் சிகிச்சைக்குப் பிறகு கொழுப்பு மீண்டும் படியாது என்று இல்லை; நோயாளியின் வாழ்க்கை முறையைப் பொறுத்து மீண்டும் கொழுப்புப் படிய வாய்ப்பும் உள்ளது.
மற்றபடி, 120 - 130 கிலோவுக்கு மேல் உள்ளவர்கள், என்னதான் உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு மேற்கொண்டும் உடல் குறையவில்லை என்ற நிலையில் உள்ளவர்களுக்குதான், 'பேரியாட்ரிக்’ என்ற அறுவை சிகிச்சை தீர்வாக இருக்கும்.
குறிப்பிட்ட பி.எம்.ஐ. தாண்டியவர்களுக்கு, அதாவது அதிகப்படியான உடல் பருமன் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே, இந்த அறுவைசிகிச்சைப் பரிந்துரைக்கப்படும். சாதாரணமாக உடல் எடைக் குறைய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த அறுவைசிகிச்சை செய்யப்படுவதில்லை' என்றார்.
Doctor Vikatan

No comments:
Post a Comment