பிஸ்தா
பிஸ்தாவின் நன்மைகள்
உடலின் இரத்தம், கூந்தல், சருமம், மூளை, கண் பார்வை இவை யாவும் நல்ல
முறையில் இருந்தால் தான் உடலுக்கு வலிமை. இவை நல்ல முறையில் இருப்பதற்கு
பிஸ்தா பல வகைகளில் வழி வகுக்கின்றது.
அதிலும் இந்த பருப்பை அதிக
அளவில் உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் கண் பார்வை சீராக இருக்கும்.
சருமத்திற்கு மினுமினுப்பு கிடைக்கும்.
மற்ற பருப்புகளை போன்று இதிலும் கொழுப்பு தன்மை அதிக அளவில் உள்ளது. இதன் மூலம் உடலுக்கு தேவையான ஈரத்தன்மை கிடைக்கின்றது.
ஆரோக்கியமான இதயம்
பிஸ்தா உடலின் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பை
அதிகரிக்கின்றது. இதன் மூலம் உடலின் தேவையற்ற கொழுப்புத் தன்மைகள்
நீக்கப்பட்டு இதயம் பலமாக செயல்பட உதவுகின்றது.
நோயெதிர்ப்பு அழற்சி தன்மை
பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி
தன்மைகள், உடலில் ஏற்படும் நீர் கட்டி மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படாமல்
தடுக்கின்றது.
நீரிழிவு நோயை தடுக்கின்றது
பிஸ்தாவில் உள்ள 60% பாஸ்பரஸ், டைப் 2 நீரிழிவு நோயில் இருந்து பாதுகாக்கிறது.
மேலும் பிஸ்தாவில் உள்ள பாஸ்பரஸ், புரதச்சத்தை அமினோ அமிலமாக செய்து, குளுக்கோஸ் தன்மையை கொடுத்து, உடலுக்கு வலிமை சேர்க்கின்றது.
இரத்தத்திற்கு ஏற்றது
இரத்தத்தில் ஆக்ஸிஜனை எடுத்து செல்ல புரதச்சத்தில் ஒன்றான வைட்டமின் பி6
உதவுகின்றது. இத்தகைய வைட்டமின் பி6 பிஸ்தாவில் உள்ளது. ஆகவே பிஸ்தாவை
எடுத்து கொள்வதால், இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் தன்மை அதிகரிக்கின்றது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
வைட்டமின் பி6 ஒரு ஆரோக்கியமான நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் காரணியாகும்.
இதனால் உடலில் இரத்தத்தின் ஓட்டம் சீராக ஓடுகின்றது. இத்தகைய வைட்டமின் பி6
பிஸ்தாவில் அதிக அளவில் உள்ளது.
No comments:
Post a Comment