Tuesday, 27 May 2014

வேர்க்கடலை

வேர்க்கடலை என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்து தான். இதனால் உடல் பருமன் கூடும், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதய நோய்கள் போன்ற பிரச்னைகள் வரும் என்ற நம்பிக்கை தான் இருந்து வருகின்றது. ஆனால் வருகின்ற ஆராய்ச்சிகளில் இந்த நம்பிக்கைகளுக்கு எந்த ஒரு ஆதாரம் இல்லை என்றே தெரிகிறது. காரணம் வேர்க்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும் அதனுடன் அதிகமான புரத சத்தும் இருக்கின்ற படியால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.
முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஆரோக்கியமான உணவாகும். ஏனெனில் இதிலுள்ள சர்க்கரையின் அளவு ரத்தத்தில் மிக மிக குறைந்த அளவே சேருவதால் பயமில்லாமல் சாப்பிடலாம். மேலும் இதில் இருக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருள் இன்சுலினை சுரக்கச் செய்யும் ஹார்மோனை துரிதப்படுத்தி சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. ஆகவே இவர்கள் அன்றாட உணவில் தைரியமாக வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம்.
வேர்க்கடலையில் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக காணப்படுவதால் வேர்க்கடலை சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்காது. மாறாக ரத்த கொதிப்பு குறையும். வேர்கடலையில் நைட்ரிக் அமிலம் என்ற வேதிப்பொருள் உள்ளது. இவை வேர்க்கடலையைச் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகிறது. மேலும் இதில் காணப்படும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் போன்ற உயிர் வேதிப் பொருட்கள் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் உருவாக்காமல் தடுக்கிறது.
வேர்க்கடலை நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால் வேர்க்கடலை சாப்பிட்டால் மலசிக்கல் ஏற்படாது. ஆகவே கர்ப்பிணிகள் கூட வேர்க்கடலையை சாப்பிடுவது நல்லது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனெனில் அதில் தான் நிறையச் சத்துக்கள் அடங்கியுள்ளது. மேலும் வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடுவதால் சிலருக்கு ஏற்படும் அஜீரணத்தை தவிர்க்கலாம். பொதுவாக உடல் எடையை குறைப்பவர்கள் நொறுக்கு தீணிக்கு பதிலாக வேர்க்கடலையை சாப்பிடலாம்,
ஏனெனில் இவை சாப்பிட்ட திருப்தி விரைவிலேயே கிடைப்பதால் மேலும் மேலும் எதையாவது சாப்பிட்டு உடல் எடையை கூட்டும் நிலை வராது. ஆனாலும் இதில் உடல் எடையைக் கூட்டும் புரத சத்து அதிகமிருப்பதால் அளவோடு சாப்பிடுவது தான் இவர்களுக்கு நல்லது. இதிலுள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் முதுமையில் ஏற்படும் ஆஸடியொபோராசிஸ் என்ற எலும்பு சம்பந்தமான நோயையும் தடுக்க உதவுகிறது.

Monday, 26 May 2014

தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை..



கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது! பிறர் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே!!
சரி வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும்? தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை. பின் எப்போது தான் கூடுகிறது ?
கச்சா எண்ணெய் விலை கூடும் போது தான் விலை கூடுகிறது. கச்சா எண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் - என்ன தொடர்பு ?
தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.
மினரல் ஆயில் என்றால் என்ன ?
பெட்ரோலியப் பொருட்களின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும். கச்சா எண்ணையிலிருந்து அதீத கடைசி பொருளே இந்த மினரல் ஆயில் ஆகும் .கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24 வகையான பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “மினரல் ஆயில்’. இதற்கு நிறமோ, மணமோ இருக்காது.இதன் அடர்த்தி அதிகம். எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம்.
பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை.. ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான்.
தேங்காய் எண்ணெய் என்று நாம் இது வரை நம்பி இருக்கிற - மினரல் ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய் இவைகள்..
johnson baby oil, amla hair oil, clinic plus, ervamartin hair oil, etc..
பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது.. பக்கங்கள் பத்தாது.
மினரல் ஆயில் சேர்த்தல் பக்க விளைவுகள் வருமா?
1.தோல் வறண்டு போகும்.
முடி தனது ஜீவன் இழந்து வறண்டு போகும்.
2.முடி கொட்டும்.. முடி சீக்கிரம் வெள்ளையாகும்
3.அரிப்பு வரும்.
4.ஆராய்ச்சிகள் குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கிறது.
தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள்.. டப்பாக்களில் அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய் யை வாங்காதீர்கள்.
குறிப்பு -நல்ல தேங்காய் எண்ணெய் முடியை நன்கு வளர வைக்கும்.. கலப்படமில்லா தேங்காய் எண்ணெய் முடி வளர ,கருக்க உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை.

Wednesday, 14 May 2014

ஆங்கில மோகத்தில் சிக்கி தவிக்கும் தமிழக இளைய தலைமுறையினருக்கு ஒரு சவுக்கடி ---

தமிழ் மொழியை நேசிக்கும் மலையாளக் குடும்பம் ! 1172 மதிப்பெண் பெற்ற மாணவி தமிழ் பட்டப்படிப்பு படிக்க ஆர்வம்!
தமிழ் மீது உள்ள பற்று காரணமாக பிளஸ் 2 தேர்வில் 1,172 மதிப்பெண்கள் எடுத்தும், தமிழ் பட்டப்படிப்பை தேர்வு செய்து படிக்க உள்ளதாக, சமையல் கலைஞரின் மகள் தெரிவித்துள்ளார்.
கோவை டவுன்ஹால் வைசீயாள் வீதியைச் சேர்ந்தவர் குமார். சமையல் பணிபுரிபவர். இவரது மகள் ஸ்ரீ வித்யா. கோவை அவிநாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைப்படிப்பு முடித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் மொத்தம் 1,172 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழ் 189, ஆங்கிலம் 189, வணிகவியல் 200, கணக்கு பதிவியல் 200, வணிக கணிதம் 199, பொருளியல் 195 என மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதலிடம் எடுத்துள்ளார்.
தமிழ் மொழி மீது ஏற்பட்டுள்ள பற்று காரணமாக பி.ஏ. தமிழ் மொழிப்பாடத்தை எடுத்து பயின்று, தமிழ் ஆசிரியை ஆக வேண்டும் எனக் கூறியுள்ளார். பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகள் தமிழ் மொழியை தவிர்த்த பட்டப்படிப்புகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கும் நிலையில், அதிக மதிப்பெண் எடுத்தும் தமிழ் மொழி பட்டப்படிப்பை தேர்வு செய்ய உள்ளதாக ஸ்ரீ வித்யா தேர்வு செய்ய உள்ளார்.
அதற்கு அவர் கூறும் காரணங்கள், எனக்கு தமிழ் மொழியின் மீது எப்போதும் ஆர்வம் அதிகம். அதனால்தான் 10ம் வகுப்பு தேர்வில் 469 மதிப்பெண்கள் எடுத்த போதிலும் கலை பாடப்பிரிவை மேல்நிலை வகுப்பில் தேர்வுசெய்தேன்.
தமிழ் மொழியியல் முனைவர் பட்டம் வரை பெற வேண்டும். சிறந்த தமிழ் ஆசிரியை ஆக வேண்டும் என்பது விருப்பம். தமிழ் மொழியை அழிக்கும் விதமாக தற்போது ஆங்கில ஆதிக்கம் உள்ளது. அதனை போக்க வேண்டும் என்பது லட்சியம். சிலப்பதிகாரம், புறநானூறு, கம்பராமாயணம், பாரதியாரின் கவிதை, தமிழ் இலக்கண இலக்கியம் ஆகியவை தமிழை அதிகமாக நேசிக்க வைத்தன. தமிழ் ஆசிரியர் வீரம்மாவின் தமிழ் கற்பிக்கும் திறன் என்னை வெகுவாக கவர்ந்தது. இதனாலேயே நான் தமிழ் எடுத்து படிக்க விரும்புகிறேன். கவிதை, கட்டுரை எழுதுவதில் எனக்கு ஆவல் அதிகம். கட்டுரைப் போட்டிகளில், மாவட்ட அளவில் பரிசுகளை பெற்றுள்ளேன் என்றார்.
ஸ்ரீவித்யாவின் பெற்றோர் கேரள மாநிலம் பாலக்காட்டை பூர்வீகமாக கொண்டவர்கள். தமிழ் மொழியை நேசிக்கும் மலையாளக் குடும்பம்
நன்றி - தமிழ் இந்து

தஞ்சைப் பெரியகோயில் மணல்மேல் எழுப்பப்பட்டதா?






             இராசராசேச்சுரத்தில் (தஞ்சைப் பெரிய கோயிலில்), ASI-ஆல் 350 அடிகளுக்கும் மேல் ஆழமாக போர் போடப்பட்டப் பகுதி. அப்படி போட்ட போது தான் ஒட்டுமொத்தக் கோவிலின் அடித்தளம் வெள்ளையான தூய மணலின் மேல் எழுப்பப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த White Sand தூய்மையான Silica ஆகும். இது ஆற்றங்கரை மணற்ப் படுக்கைப் பகுதிகளில் மட்டுமே கிடைக்கும் பொருளாகும். இதன் பின்னும் மாபெரும் அறிவியல் உண்மை இருக்கிறது. வெறும் Coupling & Locking முறைகளில் உருவாக்கப்பட்டுள்ள இக்கோவிலின் கட்டுமானம் பூமி அதிர்ச்சி, வெள்ள ஆபத்துக்கள் போன்ற இயற்கைப் பேரிடர்களிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு இந்த வெள்ளை மணலால் கட்டி எழுப்பப்பட்டுள்ளது.

             தஞ்சை தலையாட்டி பொம்மையும், நெல் அளந்து போடும் ஆடவல்லான் மரக்காலும், ஆடவல்லான் எடைக்கல் தஞ்சை பெரிய கோவிலும் ஒரே அறிவியல் தத்துவத்தில் நிற்கின்றன என்றால் அது மிகையாகாது. மூன்றும் புவியீர்ப்பு விசையுடன் தொடர்புடைய அறிவியல் உண்மைகள். தலையாட்டி பொம்மையை எப்படி சாய்த்தாலும் பழைய முறைக்கு அதன் ஒட்டுமொத்த உருவமும் செங்குத்தாக திரும்பிவிடும். ஏனென்றால் அதன் அடிப்பாகம் அதிக கனத்துடன் மையத்தை நோக்கிய விசையைக் கொண்டது. பழந்தமிழர்கள் நெல் அளந்து போடும் மரக்காலின் அமைப்பும் அடிப்பாகம் அரைவட்டமாகவும் நெல் முழுதும் நிரம்பிய நிலையில் முக்கோணமாக நிரம்பியும் இருக்கும். கூர்ந்து நோக்கின் மூன்றும் அடிப்படையில் அரைவட்ட முக்கோண வடிவம் கொண்டது.
2010ஆம் ஆண்டு இங்கே ஆழ்துளைக் கிணறு போடப்பட்டபோது ஒவ்வொரு 50 அடி ஆழத்திலும் எடுக்கப்பட்ட மணல் மாதிரி, இட்டலி ஊற்றிவைத்தாற்போல் அன்று வைக்கப்பட்டிருந்தது. ௦, 50, 100, 150, 200, 250, 300, 350 அடி ஆழம் என இவற்றின் மண் மாதிரிகள் மேலே கொட்டப்பட்டன.

             எனினும், தஞ்சைப் பெரிய கோவில் மீட்புப் படையினர் இதற்குத் தடையாணை பெற்றுவிட்டனர். தடையாணை பெறாமல் விட்டிருந்தால், கண்டிப்பாக மணல் கணிசமான அளவில் உறிஞ்சப்பட்டுக் கோயிலின் நிலைத்தன்மை போய்ப் பின்னொருநாளில் முழுக்கோயிலும் அப்படியே சாய்ந்துவிட்டிருக்கும். ஒருவேளை அதைத்தான் 'இவர்கள்' எதிர்பார்த்துச் செய்தார்களோ என்னவோ!!!
வெளியேறியது மணல் மட்டுமல்ல! ஆயிரம் ஆண்டு நினைவுகளும், ஆட்டைப் பெரிய திருவிழாவும், அது தமிழ்ப் புத்தாண்டு ஆகும்.

படங்கள்: யுவராஜ்
தகவல்: பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்

 Courtesy: Puli Vamsam - புலி வம்சம்'s

Tuesday, 13 May 2014

பேரீச்சம் பழம் சாப்பிடுங்க

மலச்சிக்கல், குடல் நோய்கள்,சளி மற்றும் இருமல்:- பேரீச்சம் பழம் சாப்பிடுங்க
தினமும் சாப்பிடக்கூடிய பேரீச்சம்பழத்தில் என்ன பயன் இருக்குதுன்னு உங்களுக்கு தெரியும்?. சாதாரணமா நினைச்சிடாதீங்க பேரீச்சம்பழத்தை. பேரீச்சம்பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி ரத்த விருத்தி செய்யும், எலும்புகளை பலப்படுத்தும், இளைப்பு நோயைக் குணப்படுத்தும் மேலும் இதயநோய் வராமல் தடுக்கும்.
மலச்சிக்கல்:
பேரீச்சம் பழம் மலச்சிக்களை போக்கக்கூடிய சிறந்த உணவாகும். மலச்சிக்களால் அவதிபடுபவர்கள் பேரீட்சைபழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர மலச்சிக்கள் பிரச்சனைகள் தீரும். மலச்சிக்களை போக்ககூடிய பேரீட்சைபழத்தை சாப்பிட விரும்பினால் தண்ணீரீல் ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைத்து விட்டு பின்னர் பேரீச்சம் பழத்தை சாப்பிடவேண்டும். ஒரு நாள் ஊற வைத்துவிட்டு சாப்பிடும் போதுதான் பேரீச்சம் பழத்தின் முழுபலனையும் பெறமுடியும். அதிக நார்ச்சத்து கொண்டதால் மலத்தை இளக்கி மலச்சிக்கலை போக்கிடும்.
குடல் நோய்கள்:
எண்ணற்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பேரீச்சம்பழம், உடலை சக்தியுடன் வைத்துக்கொள்ள உதவும் சிறந்த உணவாகும். தினமும் பேரீச்சம் பழம் சாப்பிட்டு வருபவர்கள் புத்துணர்வுடன் இருப்பதை காணலாம். தொடர்ந்து பேரீச்சம் பழம் உண்பவர்களுக்கு குடல் நோய்கள் மற்றும் இதயம் சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமடையும். வயிறு மற்றும் குடல் சம்பந்தமான அனைத்து நுண் கிருமிகளும் வெளியேறும்.
பெண்களுக்கு:
பெண்களுக்கு தேவையான இரத்தத்தை உற்பத்தி செய்திட உதவும். இரத்த சோகையை தவிர்த்திடும். நன்கு பழுத்த உலர்ந்த பழங்களை சுத்தம் செய்து விதை நீக்கி உண்பது நல்லது. பழங்களை பாலில் கொதிக்க வைத்து மசித்து உண்ணலாம். பழங்களை இரண்டாக நறுக்கி தேனில் ஊறப்போட்டு வைத்துக் கொண்டு தினசரி இரவு உண்ணலாம். பிற உணவுகளில் இனிப்பு சுவைக்காக பேரீச்சம் பழங்களை அரைத்து கலந்து உபயோகிக்கலாம். பேரீச்சம்பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வர எடை மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.
சளி மற்றும் இருமல்:
பேரீச்சம் பழம் சளி மற்றும் இருமலுக்கான சிறந்த மருந்தாக குழந்தைகளுக்கு பயன்படுகிறது. பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் அதிக பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு எலும்பும் பலப்படும்

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற 16 உணவுகள்

          

                    வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமானதாகவும் வைப்பது பெற்றோர்களின் கடமை. ஆகவே குழந்தைகள் வளரும் போதே, அவர்களின் உடல் நலனில் பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் சரியாக குழந்தைகளை கவனிக்காவிட்டால், குழந்தைகளின் உடலில் ஊட்டச்சத்து பற்றாக்குறை, வைட்டமின் பற்றாக்குறை போன்றவை ஏற்படும். மேலும் குழந்தைகள் வளர்ந்த பின்னர், அவர்களை பள்ளிக்கு அனுப்பும் போது நன்கு புத்திசாலித்தனத்துடனும், சிறந்த அறிவாளியாகவும் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் ஆசைப்படுவார்கள்.

         ஆனால் ஆசைப்பட்டால் மட்டும் போதாது, அவர்களின் மூளையை நன்கு செயல்பட வைக்கவும், ஆர்வத்தை அதிகரிக்கவும், மூளையின் இயக்கத்தை சீராக வைக்கக்கூடிய உணவுகளை சிறுவயதிலிருந்தே கொடுக்க வேண்டும். உடலிலேயே அதிக சத்துக்களை உறிஞ்சுவது மூளை தான். அதுமட்டுமின்றி, மூளை தான் உடலின் அனைத்து உறுப்புக்களை இயக்குகிறது. எனவே அத்தகைய முக்கியப் பகுதியை ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் மாற்றிவிடுகின்றன.
எனவே மூளையை பாதுகாப்பதற்கு ஒரே வழி உணவு தான். ஆகவே அந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், மூளை ஆரோக்கியமாக இருப்பதோடு, நன்கு செயல்பட்டு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும். சரி, இப்போது சிறுவயதிலிருந்தே குழந்தைகளின் மூளை வளர்ச்சியை சீராக வைக்கும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

சால்மன்
மீன்களில் சால்மன் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இத்தகைய ஃபேட்டி ஆசிட் உடலை ஆரோக்கியமாக வைப்பதோடு, மூளையின் வளர்ச்சியையும், செயல்பாட்டையும் சீராக வைக்கும்.

முட்டை
புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ள முட்டையின் மஞ்சள் கருவில், கோலைன் என்னும் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் பொருள் அதிகமாக உள்ளது. எனவே வளரும் குழந்தைகளுக்கு தினமும் 2 முட்டைகளை கொடுத்தால், குழந்தைகளின் மூளையானது சீராக இயங்கும்.

வேர்க்கடலை
பொதுவாக குழந்தைகளுக்கு பொரித்த உணவுகளை ஸ்நாக்ஸாக கொடுப்பதற்கு பதிலாக, வேர்க்கடலையை வறுத்தோ அல்லது வேக வைத்தோ கொடுத்தால், மூளைக்கு மிகவும் நல்லது.

தானியங்கள்
மூளைக்கு எப்போதும் குளுக்கோஸானது சீராக செல்ல வேண்டும். அத்தகைய குளுக்கோஸ் தானியங்களில் அதிகம் உள்ளது. எனவே தானியங்களால் ஆன பிரட்டை வைத்து, காலை அல்லது மாலை வேளையில் சாண்ட்விச் செய்து கொடுத்தால், குழந்தைகளின் வயிறு நிறைவதோடு, மூளை வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.

ஓட்ஸ்
குழந்தைகளின் மூளைக்கு வளர்ச்சிக்கு தேவையான உணவுகளில் முக்கியமானது ஓட்ஸ். ஓட்ஸ் குழந்தைகளின் உடலுக்கு மட்டுமின்றி, மூளைக்கும் ஆரோக்கியத்தை தரும். எனவே அவ்வப்போது ஓட்ஸ் கொடுத்து, ஞாபக சக்தியை அதிகமாக்குங்கள்.

பெர்ரிப் பழங்கள்
ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, ப்ளூபெர்ரி, ப்ளாக்பெர்ரி போன்ற பழங்களின் சுவைகள் குழந்தைகளுக்கு பிடிக்கும். மேலும் இத்தகைய பழங்களை குழந்தைகள் அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தியானது அதிகரிக்கும் என்று ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. ஆகவே இதனை கொடுக்க மறக்க வேண்டாம்.

பீன்ஸ்
உண்மையில் பீன்ஸ் ஒரு ஸ்பெஷலான உணவுப் பொருள் தான். ஏனெனில் இதில் உள்ள புரோட்டீன், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், நார்ச்சத்துக்கள் மற்றும் நிறைய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. அதிலும் காராமணி மற்றும் பிண்டோ பீன்ஸ் போன்றவற்றில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்ற பீன்ஸ்களை விட அதிகமாக உள்ளது. அதிலும் ALA என்னும் மூளையின் செயல்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் தேவையான பொருள் உள்ளது.

தக்காளி
மூளையில் ஏற்படும் பிரச்சனையை போக்குவதில் தக்காளி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில் இதில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை உடலில் பிரச்சனையை உண்டாக்கும் செல்களை அழித்து விடுகின்றன. எனவே குழந்தைகளுக்கு ஞாபக மறதி எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கு, தக்காளியை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.

பூசணி விதைகள்
பூசணி விதைகளில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஜிங்க் சத்து அதிகம் உள்ளது. எனஅவ குழந்தைகளில் மூளை வளர்ச்சியை ஆரோக்கியமானதாக வைப்பதற்கு, பூசணி விதைகளை கொடுக்க வேண்டும்.

குடைமிளகாய்
குடைமிளகாயும் மூளைக்கு ஏற்ற ஒரு சிறப்பான உணவு. அதிலும் குடைமிளகாயில், ஆரஞ்சை விட, அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே உணவில் குடைமிளகாயை சேர்த்து கொடுப்பது, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும்.

பால் பொருட்கள்
பால் பொருட்களில் புரோட்டீன் மற்றும் மூளை வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் பி அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே குழந்தைகளுக்கு தவறாமல் தினமும் பால் பொருட்களை கொடுப்பது அவசியமாகிறது.

நட்ஸ்
நட்ஸ் வகைகளில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. பொதுவாக வைட்டமின் ஈ குறைபாடும் ஞாபக மறதியை உண்டாக்கும். எனவே நட்ஸ் வகைகளை அதிகம் கொடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இதில் உடலுக்கு தேவையான கொழுப்புக்களும் நிறைந்துள்ளன

ப்ராக்கோலி
ப்ராக்கோலி மற்றொரு வகையான மூளைக்கு ஆரோக்கியத்தை தரும் உணவுப் பொருள். இதில் வைட்டமின் கே, சி மற்றும் ஆன்டி.-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், இதனை குழந்தைகள் சாப்பிடும் போது, மூளை நன்கு செயல்படும்.

ஆளி விதை
ஆளி விதையில், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் நல்ல கொழுப்புக்களான ALA அதிகம் உள்ளது. எனவே இதனை குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் சேர்த்து கொடுத்து, உடலையும் மூளையின் செயல்பாட்டையும் சீராக இயங்கச் செய்யலாம்.

டார்க் சாக்லெட்
சாக்லெட் குழந்தைகளுக்கு கொடுக்காமல் சில அம்மாக்கள் இருப்பார்கள். ஆனால் உண்மையில் தினமும் குழந்தைகளுக்கு ஒரு துண்டு டார்க் சாக்லெட் கொடுப்பது மிகவும் நல்லது. இது அவர்களது உடலை மட்டும் ஆரோக்கியத்துடன் வைப்பதோடு, மூளை வளர்ச்சியை ஆரோக்கியமானதாக வைக்கும்.

கோகோ பீன்ஸ்
ஆய்வு ஒன்றில் கோகோ பீன்ஸை அதிகம் சாப்பிட்டால், மூளையின் ஆரோக்கியமானது அதிகரிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே கோகோ பீன்ஸை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், மிகவும் நல்லது.

பகத் சிங்



            பகத் சிங் 1907-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ந்தேதி பஞ்சாபில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில், பங்கா என்னும் கிராமத்தில் சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்ட சீக்கியக் குடும்பத்தில் பிறந்ததால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார்.

           சிறு வயதிலேயே 'ஜாலியன் வாலாபாக்' படுகொலையை கேள்விப்பட்டு அங்கு சென்று இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்து வந்து கடைசிவரை தன்னுடன் வைந்திருந்த கொள்கை பற்றாளர்.
விட்டிலிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து தோட்டத்தில் குழி வெட்டி முக்கால்வாசி புதைத்து அதை சுற்றி நீர் ஊற்றினார். அதை பார்த்த, அவரது தந்தை ஏன் பகத் இவ்வாறு செய்கிறாய் ? எனக்கேட்டார். அதற்கு பகத் அப்பா இந்த துப்பாக்கி மரமாகி தன் கிளைகளில் நிறைய துப்பாக்கிகளாய் காய்க்கும் அதை வைத்து வெள்ளையார்களை விரட்டுவேன், என்றார்.

          இளம் வயதிலேயே ஐரோப்பிய புராட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். முதுபெரும் காங்கிரஸ் தலைவர் 'லாலா லஜபதிராய்' இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியான சாண்டர்ஸை பகத்சிங்கும், ராஜகுருவும் இணைந்து,சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவாயினர்.

          அதே நேரத்தில், ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து தொழிலாளர்கள் தீவிராமாகப் போராடினர். இதனால், அவர்களை ஒடுக்க நினைத்த ஆங்கில அரசு “தொழில் தகராறு சட்ட வரைவு” என்ற ஒன்றை கொண்டுவந்தது. இச்சட்ட வரைவை ஏற்காத பகத்சிங், "சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் (Indian parliment) குண்டு வீசுவதென்று தீர்மானித்தார்". 1929 ஆம் ஆண்டு, ஏப்ரல் 8 ஆம் தேதி, இச்சட்ட வரைவு நிறைவேற்றப்பட்ட பொழுது, குண்டுகளை வீசினர். இதனால் பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகிய மூன்று பேரும் குண்டு வீசிய வழக்கில் கைதுசெய்யப்பட்டனர்.
சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் பகத் சிங் வீசிய, "ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட்ரி பப்ளிகன் ஆர்மியின்" துண்டுப் பிரசுரம்.
“மனித வாழ்வின் புனிதத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. மனிதனின் வளமான எதிர்காலத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. அத்தகைய எதிர்காலம் குறித்து நாங்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறோம். உண்மைதான். ஆனால், இப்போது நாங்கள் ரத்தம் சிந்தும்படி நிர்பந்திக்கப்படுகிறோம். அதற்காக வருத்தப்படுகிறோம்.”
(Sarfrosh gethamanna abh Hamari dilme hai- Punjabi)
பகத் சிங் 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதாற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. சில காலம் "நாத்திகனாய் இருந்த பகத் இறப்பதற்கு முன்" தனது சீக்கிய கடமையை நிறைவேற்ற அனுமதி கேட்டார். ஆனால், பிரிட்டிஷ் மறுத்துவிட்டது. அவர் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டணை நிறைவேற்ற அனுமதி கோரினார். அதுவும் மறுக்கப்பட்டது.

          தூக்குமேடைக்கு அழைத்து செல்ல படுகிறார் பகத்சிங். தூக்கில் போடுவதற்க்காக பகத் சிங் முகத்தை கருப்பு துணியால் மூட முற்படுகிறார்கள். உடனே ,பகத் சிங் நான் மரணமடையும் போதும் என் இந்தியாவை பார்த்துக்கொண்டே சாக விரும்புகிறேன் என் முகத்தை மூட வேண்டாம் என கேட்டு கொள்கிறார்.

                மரண தண்டனை நிறைவேற்ற படுகிறது. அவர் சொந்த ஊருக்கு அவனுடைய அஸ்தி கொண்டுவர படுகிறது. துக்கத்தில் இருந்த அந்த கிராம தாய்மார்கள் பகத்சிங்கின் அஸ்தியை எடுத்து தங்களுக்கு இப்படி ஒரு பிள்ளை பிறக்க வேண்டும் என பகத்சிங்கின் அஸ்தியை தங்கள் வயிற்றில் பூசி கொண்டார்கள்.

-வி. ராஜமருதவேல்
[copyrights reserved by rajamaruthavel- காப்புரிமை விதிகள் படி கட்டுரையில் மாற்றமில்லாமல் சமுகவலை தளங்களில் இணையங்களில் பகிரலாம்.]

Saturday, 10 May 2014

எப்படியுள்ளது நம் ராணுவ பலம்?

 


                  நமது ராணுவத்தைப் பொறுத்தவரை நம் முன்னே உள்ள பெரிய சவால், அதை வலிமை வாய்ந்ததாக மாற்றுவது மட்டுமல்ல; நம் நாட்டில் தயாராகும் போர்க் கருவிகள், ஆயுதங்கள், குண்டுகள், போக்குவரத்து வாகனங்கள், போர் விமானங்கள், கடற்படைக்கான கப்பல்கள், ரேடார்கள், கவச வாகனங்கள், நவீனக் காலணிகள், பனிமலைகளுக்கான பாதுகாப்பு உடைகள் போன்றவற்றுடன் ராணுவத்தைத் தன்னிறைவு கொண்டதாக மாற்றுவதும் பெரிய சவாலாகும்.

           உலகிலேயே அதிக அளவு ராணுவ சாதனங்களை இறக்குமதி செய்வதில் முதலிடம் வகிக்கும் நாடு சீனா என்பதை மாற்றி, 2011 முதல் இந்தியா அந்த இடத்தைப் பிடித்துவிட்டது. ஆனால், சீனாவைவிட நாம் அதிகமாக வாங்குகிறோமா? இல்லை, சீனா பெரும்பாலானவற்றை இப்போது உள்நாட்டிலேயே தயாரித்துக்கொள்வதுடன் பிற நாடுகளுக்கும் விற்கத் தொடங்கிவிட்டது. நாம் நம்முடைய தேவைக்கே வெளிநாடுகளைத்தான் நம்பியிருக்கிறோம்.

                2004-05-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவத் தேவைகளுக்கான இறக்குமதி 111% அதிகரித்துவிட்டது என்று ‘ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆய்வுக் கழகம்' தெரிவிக்கிறது.

பாகிஸ்தானுக்கு உதவும் சீனா
            சீனத்தில் இப்போது ராணுவத் தேவைகளுக்கான எல்லாமும் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஏற்றுமதியும் செய்யப்பட்டு நல்ல லாபமும் ஈட்டப்படுகிறது. சீன இறக்குமதியில் முதலிடத்தைப் பிடிப்பது பாகிஸ்தான். பாகிஸ்தானின் ஜே.எஃப்.17 ரக போர் விமானம் உள்பட எல்லாமே சீனத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. அவ்வளவு ஏன், பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் அனைத்துமே சீனத்தில் வடிவமைக்கப்பட்டவைதான். மியான்மர், வங்கதேசம், இலங்கை ஆகிய இந்தியாவைச் சுற்றி யுள்ள நாடுகளுக்கும் சீனாதான் தொடர்ந்து ஆயுதங்களை விற்றுவருகிறது.
அமெரிக்கா எங்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டால், உள்நாட்டுப் பாதுகாப்புக்கு எங்களுக்கு இதெல்லாம் தேவை என்று ஆப்கானிஸ்தான் சில ஆயுதங்கள், தளவாடங்கள், கருவிகள் அடங்கிய பட்டியலை இந்தியாவிடம் அளித்தது. அவற்றில் பெரும்பாலானவற்றைத் தர முடியாது என்று இந்தியா கூறிவிட்டது. இது ஒன்றே போதும் நம்முடைய பாது காப்புத் துறை எந்த அளவுக்குத் தன்னிறைவு பெற்றிருக் கிறது என்பதைப் புரிந்துகொள்ள.

போஃபர்ஸ் பீரங்கி
                 அக்னி-5 ரக ஏவுகணையும், கடற்படைக்குத் தேவைப்படும் அணுவிசை நீர்மூழ்கிக் கப்பல்களும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வந்தால்தான் நாம் ஓரளவுக்குத் தன்னிறைவு பெற்றிருக்கிறோம் என்று பொருள். பெரிய அளவில் எந்த ராணுவ சாதனத்தையும் ஏற்றுமதி செய்யும் நிலையில் நாம் இல்லை. நம்முடைய நாட்டில் தயாராகும் ‘இன்சாஸ்' ரக துப்பாக்கியைக்கூடப் பிற நாடுகள் வாங்காது என்பதே நம்முடைய ஆயுதங்களின் தரம். இந்தியாவுக்குத் தேவைப் படும் ராணுவ சாதனங்களையும் கருவிகளையும் தயாரிக்கும் பொறுப்பு எவருடையது, இதில் ஏற்படும் காலதாமதங்களுக்கு யாரைத் தண்டிப்பது என்பதில்கூட நம்மிடையே தெளிவான பதில் இல்லை. போஃபர்ஸ் எஃப்.எச்.77 ரக பீரங்கிகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதில்கூட முடிவெடுக்காமலும் நடவடிக்கை எடுக்காமலும் காலம் தாழ்த்தியது நம்முடைய திறமைக்கும் அக்கறைக்கும் நல்லதொரு சான்று!
ஸ்வீடனிலிருந்து 410 போஃபர்ஸ் பீரங்கிகளை வாங்க சுமார் ரூ.1,710 கோடி மதிப்பில் 1986-ல் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அதற்குப் பிறகு தேவைப்படும் 1,000 பீரங்கிகளை இந்தியாவிலேயே தயாரித்துக்கொள்ள உதவ வேண்டும் என்று அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அந்தக் கொள்முதலுக்காக கமிஷன் பெறப்பட்டதாகக் கூறி பிரச்சினை பெரிதானதால் அந்த ஒப்பந்தம் பாதியில் கைவிடப்பட்டது. இந்தியாவுக்குத் தேவைப்படும் பீரங்கிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இறக்குமதி செய்யவும் மாற்று வழி யோசிக்கப்படவில்லை. ராணுவம் தன்னுடைய தேவைக்காக மாற்று நிறுவன பீரங்கிகள் வேண்டும் என்று கேட்டபோது சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பீரங்கிகள் பரிசீலிக்கப்பட்டன. அவற்றுடனும் கமிஷன் புகார் உருவானதால் அவையும் நிராகரிக்கப்பட்டன.

யார் பொறுப்பு
          போஃபர்ஸ் பீரங்கி மட்டும் இல்லையென்றால், கார்கில் போரில் இந்திய ராணுவம் எளிதில் வெற்றி பெற்றிருக்க முடியாது. போஃபர்ஸ் பீரங்கிகளை இந்தியாவில் தயாரித்துக் கொள்வதற்கு வசதியாக அதன் வடிவமைப்பு, தொழில்நுட்பம் பற்றிய விவரம் ஆகிய அனைத்தும் 1987-லேயே இந்திய அரசிடம் ஸ்வீடனால் தரப்பட்டுவிட்டது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவை தூசிபடிந்து கிடந்தன. வேறு எந்த மாற்றும் இல்லையென்ற நிலைமைக்குப் பிறகே அதில் கவனம் செலுத்தினார்கள். உள்நாட்டிலேயே பீரங்கியைத் தயாரிக்கும் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. பிறகு, அதில் வெற்றி ஏற்பட்டது. ஸ்வீடன் தயாரித்துத் தந்த பீரங்கியால் 30 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள இலக்கைத்தான் சுட முடியும். இப்போது இந்தத் திறன் 38 கிலோ மீட்டராக அதிகமாகியிருக்கிறது. ஒரே சமயத்தில் பல ராக்கெட்டுகளை வெடிக்க வைக்கும் லாஞ்சர்களையும் அடுத்து வெற்றிகரமாகத் தயாரித்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக இந்த பீரங்கியின் வடிவமைப்புத் தகவல்களை வாங்கி வெறுமனே வைத்திருந்ததற்கும், உள்நாட்டில் தயாரிக்காமல் காலம் கடத்தியதற்கும் யார் பொறுப்பேற்கப்போகிறார்கள்?
உடனடியாகச் செய்ய வேண்டியவை
           ராணுவம் தொடர்பான, உயர் தொழில்நுட்பம் தேவைப் படுகிற தொழில்துறைகளில் அந்நிய முதலீட்டுக்கு இப்போது நிர்ணயித்துள்ள வரம்பை நீக்க வேண்டும்.

             ராணுவத்துக்குத் தேவைப்படும் சாதனங்களையும் கருவிகளையும் தயாரிக்க அரசுத் துறை நிறுவனங்களுக்கு மட்டும் உள்ள ஏகபோக உரிமை முடிவுக்கு வர வேண்டும். அணுசக்தி நீர்மூழ்கிகள், டேங்குகள், போர்க் கப்பல்கள் ஆகியவற்றுக்குத் தேவைப்படும் மிகவும் நுட்பமான கருவிகள், பாகங்களைத் தனியார் துறையிடமிருந்துதான் வாங்கிக்கொள்கின்றனர். அப்படியிருக்க, அந்த நிறுவனங்களும் அரசுத் துறை நிறுவனங்களுடன் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும். ஏகபோக உரிமையை நீக்க வேண்டும்.

             ராணுவத்துக்குத் தேவைப்படுவனவற்றை இறக்குமதி செய்தோ, அல்லது கருவிகளை இறக்குமதி செய்து இணைத்தோ பூர்த்திசெய்துகொள்ளும் இப்போதைய முறையைக் கைவிட வேண்டும். இறக்குமதி செய்வதற்குப் பதிலாக தனியார் துறையும் பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி அமைப்பும் (டி.ஆர்.டி.ஓ.) இணைந்து செயல்பட ஊக்குவிக்க வேண்டும். எடை குறைவான விமானங்கள் தயாரிப்பு போன்றவற்றில் இந்த ஒத்துழைப்பைத் தொடங்கலாம்.
ராணுவத் தொழில்நுட்பம், தற்காப்புச் சாதனங்கள் போன்றவற்றை ஐரோப்பிய நாடுகளிடமிருந்தும் அமெரிக் காவிடமிருந்தும் சீனாவால் எளிதில் பெற முடியாது, இந்தியா அப்படியல்ல. இஸ்ரேல், ரஷ்யாவிடமிருந்தும்கூட வாங்கிக்கொள்ள முடிந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு அமைச்சகத்தை சிவில் அதிகாரிகள் நிர்வகிக் கும் இப்போதைய அமைப்பு முறை மாற வேண்டும். முப்படைகளின் தலைமைக்கும் பாதுகாப்புத் துறையின் தலைமைக்கும் நெருங்கிய ஒத்துழைப்பும் நட்பும் தேவை. அப்படியிருந்தால்தான் இப்போதைய அவலநிலை நீங்கும். 

(கட்டுரையாளர் பாகிஸ்தானில் இந்திய ஹைகமிஷனராகப் பதவி வகித்தவர்)
பிசினஸ் லைன், தமிழில்: சாரி.

Courtesy: The Hindu 

Sunday, 4 May 2014

மாவீரர் செண்பகராமன்

மாவீரர் செண்பகராமன்


ஹிட்லரையே மன்னிப்பு கேட்கச் செய்த தமிழன்..




      

Senbagaraman Pillai – (Sep 15, 1891–May 26, 1934)


  • Organized I.N.V
  • Higher education in Germany, Engineering Degree
  • He formed the International Pro-India Committee, Zurich as its headquarters in September 1914
  • He attacked Madras St.George Fort of 22 September 1914 with German Crusade Emden, against British government
  • Chempakaraman married in 1933, Wife Lakshmi who she met in Germany (Berlin)
  • In 1934, may 26 he died due to slow poisoning  by Germans
     
             எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோரச்செய்தவன் அடி பணியவைத்தவன் ஒருவன் உள்ளான். என்றால் நம்புவீர்களா அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள். ஆம் தோழர்களே அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கையான விடையம் தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரை கெளரவித்து சிலை ஒன்றை நிறுவியது.

        இத்தனைக்கும் செண்பகராமன் ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சுதந்திரத்திற்காய் போற்களமாடிய வீரர்கள் யார் என்று எமது தமிழ் சகோதரர்களிடம் ஒரு கேள்வி கேட்டால்; உடனே சுபாஸ் சந்திரபோஸ், பகத்சிங் என ஒரு பட்டியலை தருவார்கள். அவர்களிடம் நான் கேட்கிறேன் தமிழர்கள் ஒருவரும் போராடவில்லையா? அல்லது அவர்களின் போராட்டத்தில் வீரியம் இல்லையா? எண்ணற்ற தமிழ் மறவர்கள் விடுதலைக்காக வீரகாவியமானார்கள். வெள்ளையனின் பீரங்கிகளுக்கும் துப்பாக்கிகளுக்கும் முன்னால் வாளும் வேலும் கொண்டு போராடினால் சாவு நிச்சயம் என்று தெரிந்தும்; அடிமையாக வாழ்வதைவிட செத்துமடிவதே மேல் போராடிய வீரபாண்டிய கட்டப்பொம்மன், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார் போன்ற எண்ணற்ற தமிழ் மறவர்களையெல்லாம் பார்க்க உங்களுக்கு வீரர்களாக தெரியவில்லையா? இப்படி தமிழர்கள் இருப்பதால் தான் தமிழினத்தின் வரலாறு மண்ணோடு மண்ணாகிப் போகிறது. தமிழர்களாகிய நாங்கள் கூட தமிழ் வீரர்களை நினைவுகூறாவிட்டால் வேறு எவன் நினைவுகூறுவான்? கேரளாவிலோ அல்லது ஆந்திராவிலோ போய் கேட்டுப்பாருங்கள் வீரபாண்டிய கட்டப்பொம்மன் யார் என்று? ஒரு பத்து போராவது சரியான பதில் தருவார்களா? இல்லை நண்பர்களே நாங்கள் தான் எங்கள் வரலாற்றை பாதுகாக்கவேண்டும். இல்லையென்றால் காலம் எம் வரலாற்றை மறந்துவிடும். இன்னும் ஒரு ஆச்சரியத்தை உங்களுக்கு தருகிறேன்.

           இந்தியக் குடியரசின் உயிர் மூச்சாகத் திகழும் “ஜெய்ஹிந்த்” என்னும் தாரக மந்திரத்தை, முதன் முதலில் உச்சரித்தவர் வங்காளச் சிங்கம் சுபாஸ் சந்திரபோஸ் என்று தான் பலர் கருதுகின்றனர். அவர் நிறுவிய இந்திய தேசிய இராணுவத்தின் போர் முழக்கம் “ஜெய்ஹிந்த்” என்பது உண்மையே. ஆனால் அவருக்கு முன்பே “ஜெய்ஹிந்த்” மந்திரத்தை உச்சரித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய பெருமை செண்பகராமன் என்ற ஒரு தமிழனுக்குத்தான் உரியதென்றால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? யார் அந்த செண்பகராமன் என்று பார்ப்போம்.

         பாரத மாதாவின் அடிமை விலங்குகளை அடித்து நொறுக்கிவிட வேண்டும் என இந்திய மக்கள் அத்தனைபேரும் ஆக்ரோஷத்தால் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் அது. பால்மணம் மாறாத பள்ளி மாணவர்கள் கூட, போராட்டத்தில் குதித்து விட்டனர். பாரதத்தைக் காக்கப் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, ஒரு தலைவனாய் விளங்கினான் ஒரு பதினைந்து வயது சிறுவன். அவன் தான் நாஞ்சில் மண் பெற்றெடுத்த நாயகன் செண்பகராமன். இவனது திறமைகளையும் ஆற்றலையும் கண்டு வெள்ளையர்கள் வியந்து போனார்கள். சிறிது காலம் தலைமறைவாக வாழவேண்டிய நிற்பந்தம்; அதனால் ஜேர்மனிக்கு பயணமானான். ஆங்கிலேயர்களுக்கு அதிர்ச்சி இந்த சிறுவனால் இது எப்படி சாத்தியம்? வியந்தார்கள்.

         ஜெர்மனியிலே உயர்கல்விகளையெல்லாம் முடித்து கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டார். அறிவிலே சிறந்து மிளிரத்தொடங்கினார். ஜெர்மனியச் சக்கரவர்த்தியாக அப்போதிருந்த கெய்சர் மன்னன், தன் அந்தரங்க நண்பனாக செண்பகராமனை ஏற்றுக்கொண்டார் என்றால், மேலும் விளக்கம் தேவையில்லையல்லவா? டாக்டர் செண்பகராமன் கலந்து கொள்ளாத ராஜாங்க வைபவமோ, விருந்தோ ஜெர்மனியில் கிடையாதென்ற நிலைமை உருவாகியது.

          தாயகத்தை விட்டு வெளியேறியதன் நோக்கமே, இனிமேற்தானே நிறைவேற வேண்டும் என்று உழைக்க ஆரம்பித்தான். இந்திய தேசியப் போராட்டத்தைப் பற்றி ஜெர்மனில் நிகழ்ந்த சரமாரியான சொற்பொழிவுகளைத் தொடர்ந்து, இவற்றின் எதிரொலியாக அங்கு “இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி” ஒன்று நிறுவப்பட்டது. டாக்டர் செண்பகராமனே இதற்கும் தலைமை தாங்கினார். இந்தக் கமிட்டியின் உதவியோடு, ஐரோப்பிய நாடுகளிடையே, இந்தியாவைப் பற்றி நிலவிய தவறான அபிப்பிராயங்களைத் தவிடுபொடியாக்கிய செண்பகராமன், இந்திய நலனுக்கு அக் கமிட்டியை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.

         தனது எண்ணங்களை ஐரோப்பிய நாடுகளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவதற்காக டாக்டர் செண்பகராமன் நடத்திய “புரோ இந்தியா” ( PRO INDIA ) எனும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியாவை நிர்மாணிக்கப் போகும் புரட்சிக் குரலாகியது.



ஹிட்லர் மன்னிப்பு கோரல் Adolf Hitler Apologist to Indian Chempakaraman Pillai,

            ஒருநாள் டாக்டர் செண்பகராமனும், ஹிட்லரும் அவருடைய சகாக்களும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அகங்காரம் பிடித்த ஹிட்லர், ஆணவத்தோடு இந்தியாவையும், இந்தியத் தலைவர்களையும் பற்றி இழிவாகப் பேசினார்.

             ‘சுதந்திரம் பெறக்கூடிய யோக்கியதை இந்தியர்களுக்கு கிடையாது” என்றாராம் ஹிட்லர். இதைக் கேட்டதும் கொதித்தெழுந்து, சிங்கம் போல் கர்ஜித்தார் செண்பகராமன். இந்தியாவின் பாரம்பரிய பெருமை பற்றியும் இந்தியத் தலைவர்களின் மேதா விலாசம் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை எடுத்து ஹிட்லர் முன் விளக்கினார். டாக்டரின் கர்ஜனையைக் கேட்ட ஹிட்லர் உண்மையிலேயே ஸ்தம்பித்து விட்டார். டாக்டர் செண்பகராமனின் மனோசக்தி முன், தன்னால் நிற்க முடியாது அடங்கியதோடு, தாம் செய்த பிழையையும் உணர்ந்து உடனே செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார். வார்த்தையளவில் மன்னிப்புக் கேட்டால் போதாது எழுத்திலும்; மன்னிப்பைத் தரவேண்டும் என்று வாதாடினார் பிடிவாதக்காரரான டாக்டர் செண்பகராமன். அதன்படியே, எழுத்தில் மன்னிப்புக் கோரினார்.

          முதலாம் உலகப்போர் பிரிட்டனுக்கும் ஜெர்மனுக்குமிடையில் ஆரம்பமாகியது. உடனடியாக டாக்டர் செண்பகராமன் ஐரோப்பிய நாடுகளில் அப்போது சிதறிக் கிடந்த இந்தியர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஒரு ராணுவ சக்தியாக உருவாக்கினார். போரில் தனக்குச் சாதகமாக இந்தியர்களைப் பயன்படுத்த ஜெர்மனி முயற்சித்தது. அக்கட்டத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த இந்தியர்களின் மனோபாவத்தை, போரினால் எழும் இந்த நெருக்கடியை இந்தியாவின் விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் தீர்மானம் செய்து உள்ளனர். ஜெர்மனியர் லாபத்திற்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பது அவர்கள் நோக்கமல்ல என நேருஜி தனது சுயசரிதையில் தெளிவாக எடுத்து விளக்கி இருந்தார்.
இவ்விதம் பாரதத்தின் நலன் கருதி செண்பகராமன் உருவாக்கிய போராட்ட அணிக்கு “இந்திய தேசியத் தொண்டர்படை”(ஐ.என்.வி) என்று பெயர் கொடுக்கப்பட்டது.

            ஜெர்மனி கேட்டுக் கொண்டபடி, சில நிபந்தனைகளோடு போரில், ஜெர்மனிக்கு உதவ ஐ. என். வி. எனும் இந்தியப்படை ஒப்புக் கொண்டது. செண்பகராமனின் திட்டங்கள் அனைத்தையும் ஜெர்மனின் கெய்ஸர் மன்னர் ஏற்றுக் கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்திலேதான், செண்பகராமனின் மதிநுட்பத்தைப் பாராட்டி, “சுதந்திர பாரதத்தின் முதல் ஜனாதிபதியாக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்” என்று கெய்ஸர் மன்னர் தனது அந்தரங்க ஆவலை வெளியிட்டார்.

           யுத்த காலத்தில், "எம்டன்" என்ற பிரசித்தி பெற்ற நீர் முழ்கிக் கப்பலின் பெயரைக் கேட்டாலே, அன்று பிரிட்டிஷார் கதி கலங்கினர் அந்தக் கப்பலைச் செலுத்தி. 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சென்னையிலுள்ள சென்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தாக்கி, பிரிட்டிஷ் அரசை கலங்கடித்த வீரன் வேறு யாரென்று நினைக்கிறீர்கள்? “எம்டன்” எனும் பிரமாண்டமான நீர் மூழ்கியின் பொறியியலாளரும், இரண்டாவது கமாண்டருமான டாக்டர் செண்பகராமன்தான். சென்ட் ஜோர்ஜ் கோட்டை தகர்ந்ததற்கும், பிரிட்டிஷார் நடுங்கியதற்கும் காரணபூதர்! எம்டன் குண்டு வீச்சு சம்பவத்தைப் பற்றிய வரலாறு, கோட்டைச் சுவற்றில் பதிக்கப்பட்டிருப்பதை இப்போதும், சென்னையிலுள்ள இதே கோட்டையில் காணலாம். இது நடந்தது செண்பகராமனின் இருபத்தி மூன்றாவது வயதில்! இத்தனை இளம் பருவத்தில் செண்பகராமன் மேற்கொண்ட சாதனைகளை கண்டு ஆங்கிலேயர்கள் வியந்தார்கள். அவர் வழி நடத்திய ஐ. என். வி. யின் ஆற்றலைக் கண்டு வெள்ளையர் அடைந்த பீதிக்கு அளவே கிடையாதென வரலாறு கூறுகிறது.

        இத்தனை வீரசாகசங்களை புரிந்து ஆங்கிலேயர்களை துவசம் செய்த மாவீரன் நாசிப்படைகளின் நயவஞ்சகமான சூழ்ச்சியால் கொல்லப்படுகின்றார்.
தங்கள் தலைவரை வாதாடி வென்ற செண்பகராமனை, நாசியர் வெறுத்தனர். எனவே, அவர் கலந்து கொண்ட அரசாங்க விருந்து ஒன்றில் பரிமாறப்பட்ட உணவில் திட்டமிட்டபடி நஞ்சைக் கலந்தனர். அந்த நஞ்சு நாளடைவில் மெல்ல மெல்ல செண்பகராமனை நோயாளியாக்கி படுத்த படுக்கையில் வீழ்த்தியது. தீவிர சிகிச்சைக்குப் பின் சிறிது நாளில் நலம் பெற்ற செண்பகராமனை, நாசிகள் மீண்டும் தாக்கிப் படுகாயப் படுத்தினார்கள். அதுவே அவரை மரணப் படுக்கையில் வீழ்த்தக் காரணமாக அமைந்தது. 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாளன்று செண்பக ராமனின் உயிர் பிரிந்தது.

             தன் இறுதி லட்சியத்தை மனைவியிடம் கூறுகிறார் செண்பகராமன்.
இந்திய சுதந்திரத்தை கண்ணால் காணாமல். என் உயிர் பிரியத்தான் போகிறது.எனினும் நான் இறந்த பின், எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச் சென்று, நான்பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில்கரைத்துவிடு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டடின் வளமிக்க வயல்களில் தூவிவிடு.அதோடு என் உயிர் பிரிந்தபின்னும், என் போராட்டத்தை தொடர்ந்து நீ, நடத்தவேண்டும். நெஞ்சை உருக்கும் வண்ணம் மேற் கண்ட வேண்டுகோளை விடுத்தசெண்பகராமனின் உயிர் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இவ்வுலகத்தைவிட்டு நீங்கி அமரத்துவம் அடைந்தது.


          இவரின் துணைவியார் ஜான்சி தம் கணவரின் சாம்பலைப் பாதுகாத்து வைத்திருந்தார். முப்பத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சுதந்திர இந்தியாவில் 1966 ஆம் ஆண்டு செண்பகராமன் விரும்பியபடியே அவரின் சாம்பல் கரமனை ஆற்றில் கரைக்கப்பட்டு நாஞ்சில் வயல்களில் தூவப்பட்டது.



       

       Senbagaraman Pillai (September 15 1891–May 26 1934), was an Indian revolutionary during the Indian Independence Movement, who went abroad to organise an army to declare war against the British for India's freedom.

Early life
          Champakaraman Pillai (Shenbagaraman Pillai) was born of Tamil descent at Cochin in Kerala. His father, Chinnaswami Pillai, who was a police official, and mother Nagammal went to Trivandrum from Kanniyakumari in Tamil Nadu and settled in Kerala. Pillai had his early education and spent his boyhood at Trivandrum. Even during his student days, he was attracted to books and periodicals preaching nationalism, and heard the speeches of all the political leaders who were in the forefront of the Indian freedom movement.

          Pillai was greatly influenced by Bal Gangadhar Tilak and his writings in his journal, "Kesari", and when Tilak was arrested and sentenced to transportation, Pillai pledged lifelong dedication to the cause of India's liberation. He came to the firm conviction that the only and best way to drive the British out, was to join hands with their enemies, and with their help, organise an armed attack from outside. It was at this time that Pillai came into contact with an Englishman who was working as a spy for the Germans, and with the latter's help he left India when he was seventeen years old.

In Europe
         Pillai first went to Colombo and from there to Switzerland. At Zurich he completed his education and took a Doctorate in engineering. After the outbreak of the First World War, Pillai found an opportunity to carry out his long-cherished plans. With the help of the German Embassy, he formed the International Pro-India Committee in September 1914, with Zurich as its headquarters, and himself as the President. That this committee was formed almost immediately after the declaration of War, indicates the impatience of the Indian revolutionaries abroad, who organised themselves under the leadership of Pillai to take advantage of the new situation created by the war.
It was soon recognised that they must have their centre in Berlin. Pillai moved to Berlin in October 1914 and started the Indian Independence Committee. Many prominent Indian revolutionaries abroad, including Taraknath Das, Barkatullah, Chandrakant Chakravarty, Bhupendranath Dutta (brother of Swami Vivekananda), Prabhakar, Virendranath Chattopadhyaya, Birendra Sarkar, and Herambalal Gupta, joined him to work out the programme. Lala Har Dayal was also persuaded to join them in the movement. The International Pro-India Committee formed in Zurich was merged in the Berlin Committee, which continued as the guiding and controlling institution for all the Pro-Indian revolutionary activities in Europe. Soon the Committee's branches sprang up in Amsterdam, Stockholm, Washington, and in many other parts of Europe and America.

War activities
        AT the start of the war, Pillai, along with Virendranath Chattopadhyay and a number of other Indian students in Germany,came to form the Berlin Committee. This committee ultimately became involved in the so called Hindu-German Conspiracy and, along with the Ghadar Party in USA, was key in the Ghadar Conspiracy and the German plot. Pillai won the admiration of the German Kaiser, who conferred titles and honour upon Pillai. He won the confidence of the Germans to such an extent that he was allowed to lead the operations of the German Navy in the Indian Ocean, and it was on this occasion that he demonstrated his capacity as a warrior, directing the German warship, SMS|Emden|1906|6, striking deep into the British naval installations and destroying British war-vessels. The British Government announced a reward of one lakh pounds to anyone who could capture Pillai and hand him over to them, but without success.

         Pillai was the forerunner of Rash Behari Bose and Subhas Chandra Bose in organising an Indian Army abroad to strike against the enemies at home. He founded the Indian National Volunteer Corps or International Cadet Corps ICC during World War I, and prescribed military uniform and discipline to the volunteers, who were under the direct control of army leaders engaged in the war. In July 1914, Pillai gave a message from Berlin to the Indian soldiers that it was time for them to rise in revolt and fight the British in order to liberate India. Later in 1919, when Pillai met Netaji Subhas Chandra Bose at Vienna, he explained his plan of action to him.

Prime Minister of Provisional Government of India
          Pillai was among those who first gave the slogan of "Jai Hind" to the people of India and to the many Indians abroad who were struggling for the cause of Indian Independence. He had the privilege of being the Prime Minister of the Provisional Government of India set up in Afghanistan in December 1915, with Raja Mahendra Pratap of Kabul as President. However, the defeat of the Germans in the war shattered the hopes of the revolutionaries.

          The Germans were all along helping the Indian revolutionaries with a selfish motive. Though the Indian patriots made it clear to the Germans that they were equal partners in their fight against the common enemy – British imperialism – and what was expected of them was help by way of funds, arms, and ammunition, to the revolutionaries who were abroad and at home fighting the British, the Germans wanted to exploit the revolutionaries for their propaganda work and gathering military intelligence. When they started losing the battle, the Germans lost their interest in the revolutionaries and even started looking upon many with suspicion. This strained the relationship between the Indian revolutionaries and the Germans. Pillai raised his voice against the view of Adolf Hitler that Indians were still incapable of ruling themselves, and he even forced Hitler to apologise in writing. But he fell a victim to the wrath of the Nazis. In 1931 Pillai had married Lakshmibai of Manipur, whom he had met in Berlin. The Nazis killed Champakaraman by poison on May 26 1934.

His last wish
         Pillai's last wish was that his ashes be carried to his homeland, and his wife fulfilled this thirty-three years after his death. She underwent indescribable sufferings and hardships during this period, and the Nazis made her life miserable. However, to fulfill her mission of preserving his ashes, his diary, and secret documents, she faced all hardships and lived in Berlin, Italy, and Spain and later reached Mumbai. The Indian Navy's warship, I.N.S. Delhi, flying the flag of Free India, brought Pillai's ashes to Cochin on September 16 1966, but later, due to the apathy of the Indian government, Pillai's wife herself died of starvation in Mumbai in 1973