Wednesday, 14 May 2014

தஞ்சைப் பெரியகோயில் மணல்மேல் எழுப்பப்பட்டதா?






             இராசராசேச்சுரத்தில் (தஞ்சைப் பெரிய கோயிலில்), ASI-ஆல் 350 அடிகளுக்கும் மேல் ஆழமாக போர் போடப்பட்டப் பகுதி. அப்படி போட்ட போது தான் ஒட்டுமொத்தக் கோவிலின் அடித்தளம் வெள்ளையான தூய மணலின் மேல் எழுப்பப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த White Sand தூய்மையான Silica ஆகும். இது ஆற்றங்கரை மணற்ப் படுக்கைப் பகுதிகளில் மட்டுமே கிடைக்கும் பொருளாகும். இதன் பின்னும் மாபெரும் அறிவியல் உண்மை இருக்கிறது. வெறும் Coupling & Locking முறைகளில் உருவாக்கப்பட்டுள்ள இக்கோவிலின் கட்டுமானம் பூமி அதிர்ச்சி, வெள்ள ஆபத்துக்கள் போன்ற இயற்கைப் பேரிடர்களிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு இந்த வெள்ளை மணலால் கட்டி எழுப்பப்பட்டுள்ளது.

             தஞ்சை தலையாட்டி பொம்மையும், நெல் அளந்து போடும் ஆடவல்லான் மரக்காலும், ஆடவல்லான் எடைக்கல் தஞ்சை பெரிய கோவிலும் ஒரே அறிவியல் தத்துவத்தில் நிற்கின்றன என்றால் அது மிகையாகாது. மூன்றும் புவியீர்ப்பு விசையுடன் தொடர்புடைய அறிவியல் உண்மைகள். தலையாட்டி பொம்மையை எப்படி சாய்த்தாலும் பழைய முறைக்கு அதன் ஒட்டுமொத்த உருவமும் செங்குத்தாக திரும்பிவிடும். ஏனென்றால் அதன் அடிப்பாகம் அதிக கனத்துடன் மையத்தை நோக்கிய விசையைக் கொண்டது. பழந்தமிழர்கள் நெல் அளந்து போடும் மரக்காலின் அமைப்பும் அடிப்பாகம் அரைவட்டமாகவும் நெல் முழுதும் நிரம்பிய நிலையில் முக்கோணமாக நிரம்பியும் இருக்கும். கூர்ந்து நோக்கின் மூன்றும் அடிப்படையில் அரைவட்ட முக்கோண வடிவம் கொண்டது.
2010ஆம் ஆண்டு இங்கே ஆழ்துளைக் கிணறு போடப்பட்டபோது ஒவ்வொரு 50 அடி ஆழத்திலும் எடுக்கப்பட்ட மணல் மாதிரி, இட்டலி ஊற்றிவைத்தாற்போல் அன்று வைக்கப்பட்டிருந்தது. ௦, 50, 100, 150, 200, 250, 300, 350 அடி ஆழம் என இவற்றின் மண் மாதிரிகள் மேலே கொட்டப்பட்டன.

             எனினும், தஞ்சைப் பெரிய கோவில் மீட்புப் படையினர் இதற்குத் தடையாணை பெற்றுவிட்டனர். தடையாணை பெறாமல் விட்டிருந்தால், கண்டிப்பாக மணல் கணிசமான அளவில் உறிஞ்சப்பட்டுக் கோயிலின் நிலைத்தன்மை போய்ப் பின்னொருநாளில் முழுக்கோயிலும் அப்படியே சாய்ந்துவிட்டிருக்கும். ஒருவேளை அதைத்தான் 'இவர்கள்' எதிர்பார்த்துச் செய்தார்களோ என்னவோ!!!
வெளியேறியது மணல் மட்டுமல்ல! ஆயிரம் ஆண்டு நினைவுகளும், ஆட்டைப் பெரிய திருவிழாவும், அது தமிழ்ப் புத்தாண்டு ஆகும்.

படங்கள்: யுவராஜ்
தகவல்: பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்

 Courtesy: Puli Vamsam - புலி வம்சம்'s

No comments:

Post a Comment