Friday, 13 December 2013

பொற்கைப் பாண்டியன்

நீதிக்காக தனது கையை 

வெட்டிக்கொண்ட பொற்கைப் 

பாண்டியன்.
==================


பல்வளம் உடைய நாடு பாண்டிய நாடு.
அந்நாட்டின் தலைநகரம், மதுரை மாநகரம்.
அங்கிருந்து அரசாண்டு வந்தான் பாண்டிய
மரபிலுதித்த அரசனொருவன். அவன் பெயர்
யாது என்பது வெளிப்படவில்லை. ஆயினும்
பொதுமக்கள், அவனை பொற்கைப் பாண்டியன்
என்று காரணப் பெயரிட்டு அழைத்து வந்தனர்.
பொற்கைப் பாண்டியன் அறிவு, அன்பு, பண்பு,
நீதி தவறாதவன். பொய், களவு,
கொலை முதலியவற்றுக்குச் சிறிதும்
இடமளிக்காதவன். குடிமக்களிடத்து மிக்க
பற்று உடையவன். அவர்கள் நன்மையைப் பெரிதும்
விரும்புபவன். அவர்களுடைய எண்ணங்களைத்
தெரிந்துகொள்வதில் மிக்க ஆர்வமுடையவன்.
அதன் பொருட்டு இரவு நேரங்களில் நகர்ச்
சோதனைக்குச் சென்றுவரும் வழக்கத்தையும்
கொண்டிருந்தான்.


ஒரு நாள் இரவு, பொற்கைப் பாண்டியன் சேவகன்
போல மாறுவேடம்
பூண்டு நகர்ச்சோதனை செய்யப் போனான். பெருந்
தெருக்களைச் சுற்றி வந்தான். சிறிய சந்துகளிலும்
நுழைந்து வந்தான். இறுதியில் பார்ப்பனர் ஒரு சேர
வாழும் தெரு ஒன்றுக்குப் போனான். அந்த
தெரு மிகவும் சிறிய தெரு. அதில் ஏறத்தாழ
ஐம்பது வீடுகள் இருந்தன. அந்த வீடுகள்
அனைத்தும் நன்கு மூடப்பட்டு இருந்தன.

ஆளரவமோ, பேச்சொலியோ எதுவுமே சிறிதும்
இல்லாமலும் இருந்தன. தெருவே மிகவும்
அமைதியாய்க் காணப்பட்டது. ஆனால், தெருவின்
இறுதியில் இருந்த ஒரு வீட்டில் மட்டும்
பேச்சொலி கேட்டது.
அந்த வீடு கீரந்தை என்னும் பார்ப்பனன்
ஒருவனுடைய வீடு ஆகும். அவன் மிக வறியவன்.
மனைவி ஒருத்தியைத் தவிர, வேறு எந்தத்
துணையும் இல்லாதவன். அரசன் அந்த
வீட்டை அடைந்து மறைந்து நின்றான்.
உள்ளே நிகழும் பேச்சைக் காது கொடுத்துக்
கேட்டான்.

"கண்ணே! நான் கங்கையாறு சென்று நீராடி,
காசி சென்று வாழ்க்கையை வளமுற நடத்த,
வேண்டும் பொருள் தேடி வருகிறேன். அதுவரை நீ
இங்கேயே இரு!" என்றான் கீரந்தை. "தாங்கள்
சென்று மீளும்வரை நான் ஒருத்தியாய் இந்தக்
காப்பில்லாத வீட்டில் எப்படி இருப்பேன்?
அது காறும் என்னைக் காப்பாற்றுபவர் யார்?"
என்று அச்சம் தோய்ந்த குரலில் கேட்டாள் அவன்
மனைவி.

அதற்கு அவன்,
"நாட்டு மக்களைக் காப்பவன் அரசனே ஆவான்.
அவனது காவலுக்கு முன்னே வேறு காவல்களென்ன
செய்யும்? பயனற்றவையாய் அன்றோ முடியும்?
நமது அரசனும் நாட்டு மக்களின் நலிவு காணப்
பொறுக்க மாட்டான். ஆகவே, அவன் உறுதியாக
உன்னைக் காப்பான்." என்று மறுமொழி கூறினான்.
காது கொடுத்து ஒற்றுக் கேட்டிருந்த அரசன்
களிப்புற்றான், கூத்தாடினான்,

அரண்மனை சென்று நன்கு தூங்கினான். மறுநாள்
பொழுது புலர்ந்தது.
அரசன் படுக்கை விட்டு எழுந்தான். முதல் நாள்
இரவு நிகழ்ந்த
நிகழ்ச்சி அவனது நினைவுக்கு வந்தது. பொருள்
தேடி வரச் சென்ற
கீரந்தை திரும்பி வரும்வரை அவனுடைய
மனைவியைக் காப்பாற்ற வேண்டும்
என்று எண்ணினான். அவளுக்கு மட்டும் உணவுப்
பொருள்களைக் கொடுத்தனுப்பலாம் என அவன்
ஒரு கணம் எண்ணினான். மறுகணம் அது தவறு.
பலரும் பலவாறு கருத இடமளிக்கும்
என்று கருதினான். முடிவில் அந்தத் தெருவில் உள்ள
அனைவருக்குமே உணவுப்
பொருள்களை அளிக்குமாறு அமைச்சனுக்கு ஆணையிட்டான்.

அதன்படி நாள்தோறும் நிகழ்ந்துவந்தது.
அதோடு அரசனும் நாள்தோறும் நள்ளிரவில்
மாறுவேடம் பூண்டு நகர்க் காவல்
சென்று கீரந்தை மனைவிக்கு யாதோரு கேடும்
நிகழாதவாறு காத்து வந்தான். இதனை அந்த ஏழைப்
பார்ப்பனன் மனைவி அறியாள். நாட்கள் பல
சென்றன.
ஒரு நாள் இரவு அந்த வீட்டில் ஆண் குரல்
கேட்டது. காவலுக்குச் சென்றிருந்த அரசன்
இதனைக் கேட்டு திடுக்கிட்டான்; முகவும்
வருந்தினான். உள்ளே இருப்பவன் கணவனோ,
வேறு யாரோ என்ற ஐயம்
அரசனுக்கு உண்டாயிற்று.

அந்த ஐயத்தைப்
போக்கிக் கொள்ளும் பொருட்டு, அந்த
பார்ப்பனனுடைய வீட்டுக் கதவினைத்
தட்டு ஒலி செய்தான். பொருள் ஈட்டச் சென்றிருந்த
பார்ப்பனன் அன்று பகலே வந்துவிட்டான்.
அதனை அறியான் அரசன்.
கதவு தட்டப்படும் ஒலியினைக் கேட்ட பார்ப்பனன்,
வெகுண்டெழுந்து, "யாரது?" என்று அதட்டிய
குரலில் கேட்டான். அவன் மனம் தீய
எண்ணங்களை எண்ணியது. அதை அறிந்த அவன்
மனைவி செய்வது இன்னதென்று அறியாது திகைத்தாள்.

அவனது தீய எண்ணத்தைத் தெளிவிக்கும்
வழிவகை தெரியாது தவித்தாள்; "அரசன் காப்பான்
என்று கூறினாரே அன்று. அந்த அரசன்
இன்று எங்கே?" என்று அவள் கதறினாள்.
நிலையறிந்தான் அரசன்; நெஞ்சம் துணுக்குற்றான்;
திகைப்படைந்தான். "ஒரு வீட்டில் மட்டும்
தட்டினால், தட்டியவன் யாரோ என்ற ஐயம் எழுமே"
என்று கருதினான்; சிந்தித்தான்; தெளிவு பிறந்தது.
உடனே, அந்தத் தெருவில் இருந்த
எல்லா வீடுகளையும் தட்டி,
ஒலி எழுப்பிக்கொண்டே ஓடி,
அரண்மனை சேர்ந்தான். தெருப் பார்ப்பனர்
அனைவரும் கதவைத்
திறந்து கொண்டு வெளியே வந்தனர்; "கதவைத்
தட்டியவர் யார்?" என ஒருவருக்கொருவர் கேட்டுக்
கொண்டனர். ஒருவராலும் இன்னார் எனக்
கண்டு பிடிக்க முடியவில்லை. கள்வனாய்த்தான்
இருக்க வேண்டும் என்று கருதினர். "பாண்டிய
அரசன் ஆட்சியிலும் களவு நிகழ்வதா?" எனக்
கேட்டு வருத்தப்பட்டனர்.
மறுநாள் பொழுது புலர்ந்தது.

பார்ப்பனர்
அனைவரும் அரண்மனை சென்றனர்; அரசனைக்
கண்டனர். இரவு நடந்ததை எடுத்துரைத்து,
முறை வேண்டினர். அரசன் வருந்தினான்;
அமைச்சரை அழைத்து பார்ப்பனருடைய
முறையீட்டை கூறினான்.

"அவ்வாறு கதவைத்
தட்டியவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?"
என்று கேட்டான்.
அமைச்சர், "தட்டியவனைக் கண்டு பிடித்து,
அவனை விசாரித்த பிறகல்லவா, அதற்கான
தண்டனையைப் பற்றி எண்ண வேண்டும்?" என்றார்.

"அதைப்பற்றிய அக்கறை உமக்கு வேண்டாம்.

தவறிழைத்தவனுக்குக் கொடுக்கக் கூடிய
தண்டனை என்ன? அதை மட்டும் கூறும்!"
என்றான்.
அதற்கு அமைச்சர், "குற்றம் புரிந்தவன்
கையை வெட்டி எறிதலே தக்க தண்டனை ஆகும்!"
என்றார். உடனே அரசன் உடைவாளை உருவினான்.
யாரையோ வெட்டப் போகிறான் அரசன்
என்று எல்லோரும் உன்னிப்பாக கவனித்தனர்.

ஆனால், அரசன் தனது வலக் கையைத்
தானே வெட்டி எறிந்தான்! குருதி பெருகி விழிந்தது!
பார்ப்பனர் பயந்தனர்; நடுங்கினர். "அரசே! தாங்கள்
தங்கள் கையை வெட்டிக் கொள்ளக் காரணம்
என்ன?" என்று கேட்டனர். அரசன்
நடந்தவற்றை விரிவாக விளக்கிக் கூறினான்.

மன்னன் செயல் அறிந்து வியந்தனர் மக்கள்;
"இவனன்றோ நீதி நெறி தவறாத நேர்மை மிக்க
அரசன்!" என்று கூறி மகிழ்ந்தனர். அன்று முதல்,
பொன்னால் கையொன்று செய்து பொருத்திப்
பொலிவுறச் செய்து, பொற்கைப் பாண்டியன் என
அழைத்து வரலாயினர்.

Sunday, 1 September 2013

பிஸ்தா

பிஸ்தாவின் நன்மைகள்
 

 
உடலின் இரத்தம், கூந்தல், சருமம், மூளை, கண் பார்வை இவை யாவும் நல்ல முறையில் இருந்தால் தான் உடலுக்கு வலிமை. இவை நல்ல முறையில் இருப்பதற்கு பிஸ்தா பல வகைகளில் வழி வகுக்கின்றது.
அதிலும் இந்த பருப்பை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் கண் பார்வை சீராக இருக்கும். சருமத்திற்கு மினுமினுப்பு கிடைக்கும்.

மற்ற பருப்புகளை போன்று இதிலும் கொழுப்பு தன்மை அதிக அளவில் உள்ளது. இதன் மூலம் உடலுக்கு தேவையான ஈரத்தன்மை கிடைக்கின்றது.

ஆரோக்கியமான இதயம்

பிஸ்தா உடலின் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றது. இதன் மூலம் உடலின் தேவையற்ற கொழுப்புத் தன்மைகள் நீக்கப்பட்டு இதயம் பலமாக செயல்பட உதவுகின்றது.

நோயெதிர்ப்பு அழற்சி தன்மை

பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மைகள், உடலில் ஏற்படும் நீர் கட்டி மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படாமல் தடுக்கின்றது.

நீரிழிவு நோயை தடுக்கின்றது

பிஸ்தாவில் உள்ள 60% பாஸ்பரஸ், டைப் 2 நீரிழிவு நோயில் இருந்து பாதுகாக்கிறது.

மேலும் பிஸ்தாவில் உள்ள பாஸ்பரஸ், புரதச்சத்தை அமினோ அமிலமாக செய்து, குளுக்கோஸ் தன்மையை கொடுத்து, உடலுக்கு வலிமை சேர்க்கின்றது.

இரத்தத்திற்கு ஏற்றது

இரத்தத்தில் ஆக்ஸிஜனை எடுத்து செல்ல புரதச்சத்தில் ஒன்றான வைட்டமின் பி6 உதவுகின்றது. இத்தகைய வைட்டமின் பி6 பிஸ்தாவில் உள்ளது. ஆகவே பிஸ்தாவை எடுத்து கொள்வதால், இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் தன்மை அதிகரிக்கின்றது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

வைட்டமின் பி6 ஒரு ஆரோக்கியமான நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் காரணியாகும். இதனால் உடலில் இரத்தத்தின் ஓட்டம் சீராக ஓடுகின்றது. இத்தகைய வைட்டமின் பி6 பிஸ்தாவில் அதிக அளவில் உள்ளது.

மங்குஸ்தான் பழம்..!

மங்குஸ்தான் பழம்..!
பழங்களின் அரசி என்று பெருமையுடன் அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம் மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது. இது மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென் அமெரிக்க நாடுகள், பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது.
இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு இதை தென்கிழக்கு ஆசியநாடுகளில் பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்களுக்கும், பல்வலி, தொற்நோய் கிருமிகளையும் (Infection), காளான்களையும் (Fungus)அழிக்க பயன்படுத்தினர்.

மங்குஸ்தான் பழத்தின் தோல் பகுதி தடிமனாக காணப்படும். பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும்.

மன அழுத்தம் போக்கும்

நாட்பட்ட புண்கள், காயங்கள், காய்சல், இரத்தம் கலந்த வயிற்று போக்கு, உடல் மற்றும் மன சோர்வு, மன அழுத்தம், கவலை போன்றவைகளை குணமாக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது.

வீக்கம் குறைக்கவும், புற்று நோய் எதிர்ப்பு சக்தி, வயதாவதை நிதானப்படுத்தவும், தோல்களின் சுருக்கத்தை குறைக்கவும், பாக்டீரியா & வைரஸுக்கு எதிர்ப்பாகவும் பயன்படுகிறது.

உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும். வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.சீதபேதி இரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி உடனே குணமாகும்.

வாய் துர்நாற்றம் நீங்க

மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு, அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். வயிற்றுப் புண், வாய்ப் புண் குணமடையும். கிருமிகளைக் கொள்ளும்.

கண் எரிச்சலைப் போக்க

கனிணியில் வேலை செய்பவர்களுக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும்.

இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.

சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும்.அதுமட்டுமல்லாமல் இருமலை தடுக்கும், சூதக வலியை குணமாக்கும், தலைவலியை போக்கும்,நாவறட்சியை தணிக்கும்.

பெண்களுக்கு

மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது. மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

சீசன் காலங்களில் மங்குஸ்தான் பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது. அல்லது மங்குஸ்தான் பழத்தின் தோலை காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அதிக இரத்தப் போக்கு குறையும்.

வெள்ளரியின் மருத்துவம் குணங்கள்

வெள்ளரியின் மருத்துவம் குணங்கள்! ! ! !

 

 1. நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும்.

2. உடலைக் குளிரவைக்கும்.

3. இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் மிகுதி.

4. ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத் தணிக்கும் இப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும்.

5. வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விசேஷ ஜீரண நீர்சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு. எனவே செரிமானம் தீவிரமாகும். பசிஅதிகரிக்கும்.

6. மலத்தைக் கட்டுப்படுத்தும் பித்தத்தைக் குறைக்கும்.

7. உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப் போக்கும்.

8. புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புக ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு.

9. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி.மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும்,மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும்.

10. சிறுநீரகக் கோளாறு களைச் சரி செய்கிறது. எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது.

11. பித்தம், பித்தநீர், பித்த சம்பந்தமான தலை சுற்று, பித்த வாந்தி இவைகளை குணப்படுத்தும்

12. சமீபத்திய ஆய்வுகளின் படி, வெள்ளரி மூட்டுவலி வீக்க நோய்களைக் குணமாக்குகிறது

13. வயிறு நிறைய உணவு உண்ட பின் ஓரிரு வெள்ளரிக்காய் துண்டுகளை உண்ண வயிற்றுப் பொருமல் நீங்கும்.

14. வெள்ளரிச்சாறுடன், எலுமிச்சைசாறு கலந்து சாப்பிட உடல் ஊட்டம்பெறும்.

15. வெள்ளரிச்சாறுடன் பால் கலந்து முகத்தில் தேய்த்து, ஊறியபின் கழுவி வர முகம் பளபளப்பு அழகு பெறும்.

16. வெள்ளரிக்காய் விதைகளை அரைத்து, அடிவயிற்றில் பூச நீர்க்கடுப்பு நீங்கி, நீர் எளிதில் பிரியும்.

17. வெள்ளரிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட வயிற்று நோய், தொண்டை நோய்கள் தீரும்.

18. இளநீருடன் வெள்ளரித் துண்டுகளை கலந்து சாப்பிட வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

19. வெள்ளரி இலைகளை நீரிலிட்டு காய்த்து வடிகட்டி, இளநீரில் கலந்து மணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் சாப்பிட வயிற்றுப் போக்குத் தீரும்.

20. வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி முகத்தில் வைக்க முகம் குளிர்ச்சி பெறும். தோல் சுருக்கம் நீங்கும்.

21. தயிர் அல்லது மோரில் வெள்ளரிக்காயை வெட்டிப் போட்டு சாப்பிட தாகம் தீரும். அஜீரணம் நீங்கும்.

22. வெள்ளரிக்காய் துண்டுகளோடு தக்காளி, காரட், பீட்ரூட் துண்டுகளைச் சேர்த்து உப்பு, மிளகு சேர்த்து சாலட் போல் சாப்பிட உடலுக்கு மிக நன்மை கிடைக்கும்.

23. வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி, உப்பு மிளகாய்த் தூள் சேர்த்து சாப்பிட வயிற்றுக்கோளாறுகள் மாறும்.

24. வெள்ளரிச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தேய்த்து ஊறியபின் கழுவி வர, கோடை வெயிலால் ஏற்பட்ட முகச் சுருக்கம் மாறி முகம் பொலிவு பெறும்.

25. வெள்ளரிக்காயைத்தொடர்ந்து உண்டு வந்தால் சொறி, சிரங்கு குணமாகும். நரம்புகள் வலுப்பெறும். மஞ்சள் காமாலை குணமாகும்

26. சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள்,நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.

27. வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தால் கருவளையம் மறையும்.

28. உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சிறுநீர் வெளியேற உதவும்.

29. கண் பொங்குதல், உடல் சூடு, மலக்கட்டு, தீர்க்கும் உயர்ந்த உணவு கடல் உப்பை உடலில் குறைக்கும் உணவு.

30. சீறுநீரக எரிச்சல், கல் அடைப்பு, மூலச்சூடு, மூலவியாதிகள் ஒரு வாரத்தில் சரியாகும்.

31.உடல் பருமன், உடல் தொப்பை, மூட்டுப் பிணிகள், வலிமைகளை குறைத்திடும் இரத்த அழுத்தம்.

32. நீரிழிவு நோயாளிகளுக்கு அவசிய உணவுச் சாறு
நீரிழிவு பிணியாளர்களின் மருந்துகளைக் குறைப்பதில் வெள்ளரிச்சாறு விடிவெள்ளியாய் இருக்கிறது

ஒரு முக்கிய குறிப்பு :

நுரையீரல் கோளாறுகள், கபம் & இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச்சாப்பிடுவது நல்லதல்ல.

செவ்வாழை..!

செவ்வாழை..!
எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

மாலைக்கண்நோய். . .

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.

பல்வலி குணமடையும். . .

பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சொரி சிறங்கு நீங்கும். . .

சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.

நரம்பு தளர்ச்சி குணமடையும். . .

நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
குழந்தை பேறு தரும்

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தொற்றுநோய் தடுக்கப்படும். . .

தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.

பூலித்தேவன்

பூலித்தேவன்
 
         பூலித்தேவரின் பெற்றோர்கள் பெயர் சித்திரபுத்திரத் தேவரும் சிவஞான நாச்சியாரும் ஆவர். பூலித்தேவர் 1-9-1715 ல் இவர்களின் புதல்வராகப்பிறந்தார். இயற்பெயர், ‘காத்தப்பப் பூலித்தேவர்’ என்பதாகும். ‘பூலித்தேவர்’ என்றும் ‘புலித்தேவர்’ என்றும் அழைக்கலாயினர் .பூலித்தேவருக்கு பன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப் பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம்,மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற சகலவிதமான வீரவிளையாட்டுக் களிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்ட்டது.அவரைப் பற்றிய ஒரு நாட்டுப் பாடலில் அவரின் உடல்வாகு பற்றிக் கூறப்பட்டுள்ளது. மாவீரன் பூலித்தேவர் ஆறடி உயரமுடையவர். ஒளி பொருந்திய முகமும், திண் தோள்களையும் உடையவர், பவளம் போன்ற உதடுகளும், மார்பும் இருந்ததாக அப்பாடல் கூறுகின்றது.

மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டு விளங்கினார். புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பம் இருந்தது. இதனால் பூலித்தேவரை எல்லோரும் புலித்தேவர் என்றே அழைத்து வந்தனர்.

காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல் அவருககுப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள்.அவரைப் பற்றிய ஒரு நாட்டுப் பாடலில் அவரின் உடல்வாகு பற்றிக் கூறப்பட்டுள்ளது. மாவீரன் பூலித்தேவர் ஆறடி உயரமுடையவர். ஒளி பொருந்திய முகமும், திண் தோள்களையும் உடையவர், பவளம் போன்ற உதடுகளும், மார்பும் இருந்ததாக அப்பாடல் கூறுகின்றது.அவரைப் பற்றிய ஒரு நாட்டுப் பாடலில் அவரின் உடல்வாகு பற்றிக் கூறப்பட்டுள்ளது. மாவீரன் பூலித்தேவர் ஆறடி உயரமுடையவர். ஒளி பொருந்திய முகமும், திண் தோள்களையும் உடையவர், பவளம் போன்ற உதடுகளும், மார்பும் இருந்ததாக அப்பாடல் கூறுகின்றது.

மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டு விளங்கினார். புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பம் இருந்தது. இதனால் பூலித்தேவரை எல்லோரும் புலித்தேவர் என்றே அழைத்து வந்தனர்.

காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல் அவருககுப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள்.
பாளையக் காரர்கள் கப்பம் கட்டாததால் கர்னல்ஹெரான் தலைமையில் கும்பினிப் படைமற்றும் ஆற்காடு நவாபின் அண்ணன் மாபூஸ்கான் தலைமையில் நவாபு படைகளும் 1755-ஆம் ஆண்டு பாளையக்காரர்களைத் தாக்குவதற்குப் புறபட்டது. பேச்சளவில் இருந்த பாளையக்காரர்களின் ஒற்றுமை போர் என்றவுடன் உடைந்தது.

மாபூஸ்கான், கர்னல்ஹெரானுக்குச் செய்தி அனுப்டபி உடனே புறப்பட்டுவரச் செய்தான். இருவரும் சேர்ந்து பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிட்டனர். ஆங்கிலேயர் வசம் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இருந்தன. இருந்தும் பூலித்தேவரின் கோட்டையில் ஒரு சிறு விரிசலைக் கூட ஏற்படுத்த முடியவில்லை. மாறாக அவர்களிடம் இருந்த தளவாடங்களும் உணவும் தீர்ந்தது . இந்த செய்தியைத் தன் ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட மன்னர் உடனடியாக கோட்டையை விட்டு வெளியே வந்து ஆங்கிலப்படைகளைக் கொன்று குவித்து சின்னாபின்னமாக்கினார்.

ஆங்கிலேயருடனான முதல் போரில் பூலித்தேவர் வெற்றி பெற்றாலும் மறுபடியும் அவர்கள் தாக்குவார்கள் என்கிற காரணத்தினால் மீண்டும் பாளையகாரர்களை ஒன்றுபடுத்த பூலித்தேவர் முயற்சி செய்தார். ஆனால் அவருடைய எண்ணம் ஈடேறவில்லை. பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்க்கத் துணிவின்றி தங்கள் அரசாட்சியே போதும் என்கின்ற சுயநலத்தோடு ஒதுங்கிவிட்டார்கள். பூலித்தேவரின் கூட்டணி முயற்சி ஆற்காடு நவாபுக்கும் ஆங்கிலேயர்க்கும் தெரியவந்தது. உடனே அவர்கள் மற்ற பாளையக் காரர்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்குப் பதவி ஆசையைக் காட்டி, தங்கள் வசப்படுத்தினார்கள்.

இதன் மூலம் சுதேசிப்படை என்கின்ற புதிய படையை உருவாக்கி அதை யூசுப்கான் என்பவனிடம் ஒப்படைத்தனர். இந்த பூசுப்கான் பிறப்பால் மருதநாயகம் என்ற தமிழன். பின்னர் நாளடைவில் மதம் மாறி ஆங்கிலேயர்களோடு துணை சேர்ந்து பின்னர் சுதேசிப் படைகளின் தலைவன் ஆன இவன், பதவி ஆசைக்காக, அன்னியராட்சியை எதிர்த்து முதல் குரல் கொடுத்த மாவீரன் பூலித்தேவரை கடுமையாக எதிர்த்தான்.

1755-ஆம் ஆண்டு தொடங்கி 1767-ஆம் ஆண்டு வரை பல போர்களைப் பூலித்தேவர் சந்திக்க நேர்ந்தது, பரப்பளவில் ஒரு சிறிய பாளையத்திற்கு மட்டுமே தலைவரானாலும் பூலித்தேவரால் ஆங்கிலேயர்களையும், கூலிப்படைகளையும் எதிர்த்துப் பன்னிரெண்டு ஆண்டுகள் போர் புரிய முடிந்தது. 1761-ஆம் ஆண்டு கான்சாகிபுடன் இறுதியாக நடைபெற்ற போரில் பூலித்தேவரின் படைகள் யூசுப்கான் படைகளிடம் தோற்றன. பத்தாண்டுகளாக போராடிம் வெற்றி பெற இயலாத நிலையில் இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்ட பேய்வாய் பீரங்கிகளின் உதவியோடு பூலித்தேவரின் கோட்டையில் முதன் முதலாக உடைப்பு ஏற்படுத்தப்பட்டது.அதற்குப்பின் ஆங்கிலேயப் படை, தளவாடங்களோடு கோட்டைக்குள் புகுந்தது. இந்நிலையில் வேறு வழியின்றி எஞ்சிய படைகளோடு பூலித்தேவர் கடலாடிக்குத் தந்திரமாகத் தப்பிச் சென்றார். அவர் கோட்டையை விட்டு சென்றாலும் ரகசியமாக படைகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். சில மாதங்களுக்குப் பின்னர் பூலித்தேவரால் மீண்டும் கோட்டையைப் பிடித்து பாளையத்தைச் சீர்படுத்தினார்.

ஆனால் இதையறிந்த ஆங்கிலேயர் நெற்கட்டான் செவ்வல் பாளையத்தின் மன்னர் பூலித்தேவரைப் பிடிக்க ஒரு நாட்டையே வளைக்கக் கூடிய அளவுக்குப் பெரும் படையுடன் வந்தனர், இத்தகைய பெரும்படையை எதிர்பார்க்காத நிலையிலும் பூலித்தேவர் நிலைத்து நின்று போரைத் தொடர்ந்தார். ஆனால் ஆங்கிலேயப் படை பீரங்கிகளின் முன் மன்னர் படையின் வாளும் வேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை.அச்சமயம் பெய்த பலத்த மழையைப் பயன்படுத்தி மன்னர் தப்பிச் சென்றார். 1767 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போரே மன்னரின் கடைசிப்போர்.

மறைவு :

பூலித்தேவரின் மறைவு பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மன்னர் தப்பிச் சென்றாலும் அவர் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள் அவரைத் தீவிரமாகத் தேடினர். ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும் , அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் “பூலிசிவஞானம்” ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன. by.- V.RAJAMARUTHAVEL

கொழுப்பைக் குறைக்கலாம்!

கொழுப்பைக் குறைக்கலாம்!
 
               நயன்தாராவில் தொடங்கி அமலா பால் வரை நடிகைகள் பலரும் 'லிப்போசக்ஷன்’ (Liposuction) என்ற உடலை ஸ்லிம்மாக மாற்றும் சிகிச்சை செய்துகொண்டதாக அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஒரு படத்தில் கொழுகொழுவென இருந்த நடிகை, அடுத்த படத்தில் ஸ்லிம்மாக காட்சியளித்தால், 'லைப்போசக்ஷன்’ செய்துகொண்டார், என்ற பேச்சும் எழதான் செய்கிறது. லைப்போசக்ஷன் சரியான சிகிச்சைதானா... பாதுகாப்பானதா? என்பது பற்றி, சென்னை காவேரி மருத்துவமனையின் மூத்த காஸ்மெட்டிக் சர்ஜன் ஜெயந்தி ரவீந்திரனிடம் கேட்டோம்.

'லிப்போசக்ஷன் என்றால், உடல் எடைக் குறைப்பு சிகிச்சை இல்லை. 120 கிலோ எடை உள்ளவர்கள், லிப்போசக்ஷன் மூலம் 80 கிலோவுக்கு எடை குறைந்துவிடலாம் என்று நினைத்தால், அது தவறு. உடல் எடைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், சரியான உணவுமுறை, உடற்பயிற்சிச் செய்வதன் மூலமே உடல் எடையைக் குறைக்க முடியும்.

அப்படி உடற்பயிற்சி செய்யும்போது வயிறு, தொடை, புஜம் என உடலின் ஒருசில பகுதிகளில் சேர்ந்துள்ள அதிகப்படியான எடையைக் குறைப்பது சிரமமாக இருக்கும். இருப்பினும், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியுடன் உடலின் சில பகுதிகளில் சேர்ந்துள்ள அதிகப்படியானக் கொழுப்பை உறிஞ்சி எடுப்பதன் மூலம், ஒட்டுமொத்தப் பலனைப் பெற முடியும். இப்படி அதிகப்படியானக் கொழுப்பை உறிஞ்சி எடுக்கும் சிகிச்சை முறைக்கு, 'லிப்போசக்ஷன்’ என்று பெயர்'' என்கிற டாக்டர் ஜெயந்தி, இதற்கான சிகிச்சை முறைகளையும் சொன்னார்.

''சிகிச்சைக்காக வருபவர்களுக்கு உடலில் எங்கெல்லாம் கொழுப்பை அகற்ற வேண்டும் என்பதையும் முதலில் பரிசோதனை செய்து திட்டமிடுவோம்.

லிப்போசக்ஷன் சிகிச்சையின்போது, மெல்லிய சிறிய குழாய் ஒன்று தோலுக்கு அடியில் பொருத்தப்படும். இதன்மூலம் முகத்தின் நாடி, கை, வயிறு, இடுப்பு, தொடை, மார்புப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பு அகற்றப்படும்.

சிறிய பகுதியில் கொழுப்பு அகற்றப்பட வேண்டும் எனில், அந்தக் குறிப்பிட்டப் பகுதிக்கு மட்டும் உணர்வு நீக்க மருந்து கொடுத்து, லிப்போசக்ஷன் செய்யப்படும். இதுவே பெரிய பகுதியாக இருந்தால், சிகிச்சையின் நேரம் அதிகமாகும். அப்போது சற்றுக் கூடுதலாக மயக்க மருந்து கொடுத்து, சிகிச்சை அளிக்கப்படும். காலையில் அறுவைசிகிச்சைச் செய்துவிட்டு, அன்று மாலையே வீடு திரும்பலாம்.

இந்த அறுவைசிகிச்சைக்கு 'பவர் அசிஸ்டெட் லிப்போசக்ஷன்', 'லேசர் லிப்போசக்ஷன்’ போன்ற பல்வேறு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. அல்ட்ரா சவுண்ட் துணையுடனும், சாதாரண மருந்து செலுத்தும் ஊசி மூலமாகவும் உடலில் உள்ள கொழுப்பு உறிஞ்சி எடுக்கப்படுகிறது.

கொழுப்பை உறிஞ்சி எடுக்கவேண்டிய இடத்தில், 'டியூம்சென்ட்’ (Tumescent)என்ற மருந்தைச் செலுத்தப்படும். இந்தச் சிகிச்சை மூலம் ரத்த இழப்பு பெருமளவு குறைக்கப்படும்.

தோலுக்கும் தசைக்கும் நடுவில் உள்ள கொழுப்பை மட்டுமே லிப்போசக்ஷன் முறையில் அகற்றப்படுகிறது. தசைக்கு கீழ் உள்ள கொழுப்பையோ, வயிற்றுக்குள் உள்ள கொழுப்பையோ தொடுவது இல்லை. இந்தச் சிகிச்சைக்குப் பிறகு, அறுவைசிகிச்சை செய்த இடம் கண்ணிப்போனதுபோல் நிறம் மாறி, மறத்துப்போயிருக்கும். இது, ஆறு வாரங்களில் சரியாகிவிடும்.

சக்ஷன் செய்வதற்கான கருவியைச் செலுத்த, ஒரு செ.மீ-க்கும் குறைவான துவாரம் போடுவோம். அந்தப் பகுதியில் தழும்புத் தடிமனாகாமல் இருக்கவும், குணம் அடையவும் மருந்து தரப்படும். இதனால், ஓரளவுக்குத் தழும்புகள் தெரியாமல் இருக்குமே தவிர, முற்றிலும் மறையாது.

உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மேற்கொண்டும், சிலருக்கு உடலின் சில இடங்களில் தசைகள் குறையாமல் பெரிதாக இருக்கலாம். அந்தக் குறிப்பிட்ட இடத்தில் உள்ள கொழுப்பை அகற்றி, உடலின் மற்ற பகுதியைப்போல இருக்க இந்தச் சிகிச்சை உதவுகிறது. 100 கிலோ உள்ளவர் 20 கிலோ குறைக்கவேண்டும் என்றால், இதில் செய்ய முடியாது. இந்தச் சிகிச்சைக்குப் பிறகு கொழுப்பு மீண்டும் படியாது என்று இல்லை; நோயாளியின் வாழ்க்கை முறையைப் பொறுத்து மீண்டும் கொழுப்புப் படிய வாய்ப்பும் உள்ளது.

மற்றபடி, 120 - 130 கிலோவுக்கு மேல் உள்ளவர்கள், என்னதான் உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு மேற்கொண்டும் உடல் குறையவில்லை என்ற நிலையில் உள்ளவர்களுக்குதான், 'பேரியாட்ரிக்’ என்ற அறுவை சிகிச்சை தீர்வாக இருக்கும்.

குறிப்பிட்ட பி.எம்.ஐ. தாண்டியவர்களுக்கு, அதாவது அதிகப்படியான உடல் பருமன் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே, இந்த அறுவைசிகிச்சைப் பரிந்துரைக்கப்படும். சாதாரணமாக உடல் எடைக் குறைய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த அறுவைசிகிச்சை செய்யப்படுவதில்லை' என்றார்.

Doctor Vikatan

பெண்களின் பாதுகாப்பிற்கு சில ஆலோசனைகள்.

பெண்களின் பாதுகாப்பிற்கு சில ஆலோசனைகள்..

              
1. இரவானாலும், பகலானாலும் இரயிலில் பயணம் செய்யும் போது ஆட்களே இல்லாத அல்லது ஒரு சிலர் மட்டுமே இருக்கும் கம்பார்ட்மெண்டில் ஏறாதீர்கள். ஆட்கள் இருக்கும் பக்கமே ஏறுங்கள்.

2. ஆட்டோவில் தனியே பயணம் செய்ய வேண்டியத் தருணம் வந்தால், ஆட்டோவில் ஏறும் போதே தொலைபேசியில் உங்கள் வீட்டாருக்கோ இல்லை நண்பருக்கோ அழைத்துப் பேசத் தொடங்குங்கள்.எங்கு இருந்து எங்கு செல்கிறீர்கள் என்பதை சொல்லி விட்டு தொடர்ந்து இறங்கும் இடம் வரும் வரை அழைப்பைத் துண்டிக்காமல் பேசிக் கொண்டே செல்லுங்கள்.
( அதற்காக ஆட்டோக்காரர் சரியான ரூட்டில் தான் செல்கிறாரா என்பதை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்)

3.பேருந்து நிலையம், இரயில் நிலையம், பேருந்து நிறுத்தம் என எங்கு நின்றாலும் ஏதேனும் ஒரு குடும்பம் நிற்கும் பக்கமோ இல்லை பெண்கள் கூட்டமாக நிற்கும் பக்கமோ நில்லுங்கள். தனியே நிற்காதீர்கள்.

4.இரவில் வீதியில் தனியாக நடக்க வேண்டி வந்தால், அச்சத்தோடு தலையை குனிந்தபடி நடக்காதீர்கள். நிமிர்ந்து எல்லா பக்கமும் நோட்டம் விட்ட படி நடங்கள்.அதற்காக திரு திருவென முழிக்க கூடாது.பயம் வந்தால் மீண்டும் தொலைபேசியில் துணைத் தேடிக் கொள்ளுங்கள்.தொலைபேசியை பையில் வைத்து விட்டு ஹெட் போனில் பேசுங்கள்.

5.கேலி கிண்டல் செய்யும் ஆண்களை எப்போதும் கண்டு கொள்ளாதீர்கள். முறைக்காதீர்கள்.நீங்கள் ஆகாயத்தில் நடப்பது போலவும் உங்கள் காதில் எதுவுமே விழாதது போலவும் நினைத்துக் கொண்டு நடையைக்கட்டுங்கள்.

6.கண்ட இடத்தில் எல்லாம் மொபைல் ரீ சார்ஜ் செய்யாதீர்கள். எவரையும் எளிதில் நம்பி மொபைல் நம்பர் கொடுக்காதீர்கள்.காதலனே அழைத்தாலும் தேவையற்ற நேரங்களில் தேவையற்ற இடங்களுக்கு செல்லாதீர்கள்.

7.மற்ற பெண்கள் அப்படி இருக்கிறார்களே என்று எவரை பார்த்தும் எதையும் செய்யாதீர்கள்.

8.உங்கள் சுதந்திரத்திற்கான எல்லையை யாரும் சொல்லிதரக் கூடாது.நீங்களே உங்களுக்கு எல்லை இட்டுக் கொள்ளுங்கள்.

# தன் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் தான் வளர்ந்த ஊரை விட்டு ஏதோ ஒரு நகரத்தில், பெண்கள் விடுதியில் தன் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்காக சொல்கிறேன். உங்களுக்கு உங்களை விட பெரிய பாதுகாப்பு யாருமில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

-ஆதிரா