Saturday, 31 August 2013

உஷ்ண பிரச்சனைகளை போக்கும் கற்றாழை

உஷ்ண பிரச்சனைகளை போக்கும் கற்றாழை

              உஷ்ண வாயு தொடர்பான பிணிகளை மிகவும் துரிதமாகவும், பூரணமாகவும் இது குணப்படுத்தும் கற்றாழை எங்கும் காணக் கிடைக்க கூடியது கற்றாழை. கோடைக்காலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்பு, நீர்தாரை எரிச்சல், மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் காந்தல் போன்ற பாதிப்புகளுக்கு, சோற்றுக் கற்றாழை உள்ள சோறு போன்ற கலவையை எடுத்து சுத்தமான நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பிறகு அதற்குச் சமமான அளவில் பனங்கற்கண்டினை அத்துடன் சேர்த்து காலை, மாலை இருவேளைகளிலும் உண்டு வரவேண்டும்.

இதனால் உடல் உஷ்ணமும், எரிச்சலும் குறையும். வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாகி, கண்கள் சிவந்து விடும். அப்போது, கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதி வெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடி கண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டை வைத்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும். இப்போது கண் எரிச்சல், குறைவதோடு, சிவந்த நிறமும் மறைந்து விடும்.

இதை இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் செய்து வந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கும். நன்றாக சதைப்பற்றுள்ள கற்றாழை மடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சதை பகுதியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். இந்த துண்டுகளைப் பலமுறை தண்ணீர் விட்டு கழுவவேண்டும். அவற்றின் வழுவழுப்புத் தன்மையும் நாற்றமும் அகலும் வரை கழுவி சுத்தம் செய்ய வேண்டியது முக்கியம்.

வாய் அகன்ற பாத்திரம் ஓன்றை எடுத்து அதில் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் கற்றாழைத் துண்டுகளைப் போட்டு பனங்கற்கண்டு அரை கிலோ, வெள்ளை வெங்காயம் கால் கிலோ ஆமணக்கு என்ணெய் ஆகியவற்றை சேகரித்து கொள்ள வேண்டும். வெங்காயத்தை மட்டும் இடித்து சாறு எடுத்து மற்ற பொருட்களோடு கலந்து அடுப்பிலிட்டுச் சிறு சிறு தீயாக எரிக்க வேண்டும்.

சாறு சுண்டி சடசடப்பு அடங்கும் வரை வைத்திருந்து பிறகு இறக்கி சூடு ஆறிய பிறகு கண்ணாடி ஜாடியொன்றில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். வயிற்றில் ரணம், மாந்தம், வயிற்றுவலி, புளியேப்பம், பொருமல், மற்றும் உஷ்ண வாயு தொடர்பான பிணிகள் தோன்றினால் வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் காலை,மாலை,கொடுத்து வர நல்ல முறையில் குணம் தெரியும். கற்றாழை உடல் முதல் உள்ளம் வரை அனைத்தையும் குணப்படுத்தும் சிறந்த மருந்து

தகவல் - தினகரன்

வேம்பு.!

வேம்பு.!

வேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும். சங்க இலக்கியங்களிலேயே “தெய்வம் சார்ந்த பராரை வேம்பு” என்று வேம்பு சிறப்பிக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட வேம்பு மருந்தாகித்த தப்பா மரம் என்பதை சித்தர்கள் அறிந்தனர். அவர்கள் சொன்னவற்றை இன்றைய விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்கின்றனர். இன்று வரை 30-க்கும் மேற்பட்ட தாவர இரசாயனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இலை, பட்டை, விதையிலுள் தைலம் பலவகையான பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.Streptomycinie போன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய் கிருமிகள் வேப்ப எண்ணெய்க்கு கட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன.

லக்னோவிலுள்ள King George மருத்துவக் கல்லூரியில் செய்த ஆய்வின் மூலம் வேப்பிலை மோசமான தோல் நோய்களையும் கட்டுப்படுத்தும், மேலும் குடல் புழுக்களையும் அகற்றும் ஆற்றல் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேகாலாயவில் உள்ள பழங்குடி மக்கள் இதய நோய்க்கும், காச நோய்க்கும் வேப்பம் பழங்களையும், இலைகளையும் பயன்படுத்துகிறார்கள்.வேப்பெண்ணெய்க்கு விந்துவிலுள்ள உயிர் அணுக்களைச் செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கண்டறிந்துள்ளது.

வேப்பிலையிலுள்ள குயிர் சிடின் என்னும் சத்து Bacteria-க்களைக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.வேப்ப எண்ணெய்யை சிதைத்து வடித்துப் பெறும் பைரோனிமின் மூலம் Rocketகான உந்துவிசை மாற்று எரிப்பொருளைப் பெறலாம் என்கின்றனர்.
எலிகளுக்கு வேப்பிலை சாற்றைக் கொடுத்து ஆராய்ந்ததில் அது கருத்தரிக்கும் ஆற்றலை 11-வது வாரத்தில் முற்றிலும் இழந்து விட்டதை அறிந்தனர். சாறு கொடுப்பதை நிறுத்தி விட்டால் மீண்டும் கருத்தரிக்கும் ஆற்றல் பெற்று விடுவதையும் கண்டுள்ளனர்.

நிலத்தின் அமிலத் தன்மையை நிலப்படுத்தும் தன்மையிலும், காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலும் வேம்பு தன்னிகரற்றது.வேப்பம் பூவிலிருந்து அடுத்த சத்து 3 வகையான நுண்புழுக்களைக் கட்டுப்படுத்துவதாக சித்திக் ஆலம் என்னும் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
சுற்றுச் சூழலை பாதுகாத்து நிலைப்படுத்தும் ஆற்றல் வேம்பிற்கு உள்ளது. காற்றில் கலந்துள்ள தூசியை வடிகட்டும் திறனும், Anthro cyanine என்னும் நச்சு வாயுக்களை ஈர்த்துக் கொள்ளும் பண்பும் வேம்பிற்கு இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றனர்.

வேம்பு வெளியிடும் பிராகிபிடின் என்னும் வேதிப்பொருள் காற்றில் கலந்து மனிதனையும் தாவரங்களையும் தாக்கும் கிருமிகளை இயங்க விடாமல் தடுத்து அழிக்கிறது என்று Dr.சக்சேனா கண்டறிந்துள்ளனர்.

வேப்பம் விதைக்கும், எண்ணெய்க்கும் பிண்ணாக்கிற்கும்-123க்கும் மேற்பட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.வேம்பு Meliazia தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

வேறுபெயர்கள்
அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்திரம், பிசுமந்தம், வாதாளி.

மருத்துவப் பண்புகள்
இலை
1)புழு, பூச்சிகளால் நேரிடும் துன்பங்களை ஒழிக்கும்.
2)வேப்பங்கொழுந்தும், எள்ளும் சேர்த்து அரைத்துப் பூசிவர ஆறாத நாட்பட்ட புண்கள் ஆறும்.
3)வேப்பிலையை கற்ப முறைப்படி சாப்பிட்டு வர எந்த நோயும் அணுகாது.
4)வேப்பிலைச் சாறு + பழச்சாறு கலந்து படுக்கபோகும் முன் அருந்த ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.

பூ
பூவை குடிநீரிட்டு குடிக்க குன்ம நோய் தீரும்.

காய் + பழம்
தோல் நோய் தீரும்.

விதை
1)மூலம், தோல் நோய், சூதக சன்னி, குடல் கிருமி, நரம்புப் பிரிவு நீங்கும்.
2)விதை + கசகசா + தேங்காய் பால் சொறி, சிரங்கு, நமைச்சல், தேமல் தீரும்.

நெய்
1)துஷ்ட புண்கள் தீரும்.
2)ஆராத இரணங்கள் தீரும்.

வேப்பம் பட்டை
1)வேப்பம் பட்டை + திப்பிலி குடிநீர் இடுப்பு வாதம், கீல் வாதம் தீரும்.
2)கஷாயம் குட்டம் தீரும்.

அதிகமான மருந்துகளைப் பயன்படுத்தினால், மரபியல் குணங்களை நிர்ணயிக்கும் Chromosomes சிதைவுறுவதாக தற்கால ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. வேம்பு Chromosome களை பாதிக்காமல் நோய்க் கிருமிகளை மட்டும் அழிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.
பிசின்
1)மேக நோயைப் போக்கும்.

குறிப்புகள்
பூவைத் தலையில் வைக்க ஈறும் பேணும் தீரும்.

100 வயதான வேப்பமரப் பட்டையை நிழலில் உலர்த்திச் சூரணித்து பாலில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் அணுகாது.

பூச்சாறு + நெல்லிக்காய் சாறு கலந்து தர எந்த நோயும் அணுகாது, தோல் பளபளக்கும், இரத்தம் சுத்தமாகும்.

வேப்பமுத்து, மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்து முழுகி வரப் புழுவெட்டு மாறும். முடி செழித்து வளரும்.

வேப்பம்பட்டைத் + தூள் கரிசாலை + மல்லிச் சாறு 7 முறை பாவனை செய்து 1 மண்டலம் தேனில் உண்ண உடல் கருங்காலி மரம் போல் வலிமை உடையதாகும். விந்து கட்டும்

வேப்பம்பூ + வேப்ப எண்ணெய் கலந்து காய்ச்சி காதுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தக் காதில் உள்ள பூச்சிகள் வெளிப்படும். காது வலி, காது சீழ் மாறும்.

நம் வீடுகளில் வேம்பு வளர்ப்பது ஐதீகமாகக் கருதப்பட்டாலும், அதன் தத்துவம் என்னவென்றால் வேம்பை சுற்றி 10 ஆநவசந நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ளதென்றும், காற்றானது தூய்மையுறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

சிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு

சிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு

       சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

* சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.

* சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.

* வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.

* வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

* வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.

* உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.

* மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்தால் பெண்களின் உடல் பலமடையும். மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, நோய்க்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.

உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தகவல் - தினகரன்

எந்த மாவில் என்ன சத்து?-- சமையல் அரிச்சுவடி..!

எந்த மாவில் என்ன சத்து?-- சமையல் அரிச்சுவடி..!

       'தேனாக இருந்தாலும் தேவைக்குத் தக்கபடிதான் பயன்படுத்தணும்'' என்பது அனுபவ மொழி. மாவுப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன் இந்த வார்த்தைகளை மனதுக்குள் ஏற்றிக்கொள்வது நலம். ஆம்... ஏராளமான சத்துக்களைக் கொண்ட மாவுப் பொருட்களைப் பயன்படுத்தும்போது அவற்றின் குணங்களுக்குத் தக்கபடி அளவு வைத்துக்கொள்ள வேண்டும். யார் யார் எந்தெந்த வகையான மாவு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும், தவிர்க்க வேண்டும் என்பது குறித்து உணவியல் நிபுணர் கேட்டோம்.

''அந்தக் காலத்தில் மக்கள் எல்லா இடங்களுக்கும் பெரும்பாலும் நடந்துதான் போனார்கள். செய்யும் வேலைகளிலும் உடல் உழைப்பு அதிகம் இருந்தது. அதற்குத் தகுந்தாற்போல் அவர்களது உணவுப் பழக்கங்களும் இருந்தன. அன்றாட உணவில் 70 சதவிகிதம் வரை மாவுப் பொருட்களை அவர்கள் பயன்படுத்தினார்கள். தற்போதைய சூழ்நிலையில் நாம் சாப்பிடும் உணவில் 50 சதவிகிதம் முதல் 60 சதவிகிதம் அளவுக்கு மாவுச் சத்து இருந்தாலே போதும். அதாவது நாள் ஒன்றுக்கு 230 முதல் 250 கிராம் வரையிலான மாவுப் பொருட்களே போதுமானவை; எப்படிப் பார்த்தாலும் உடலுக்கு அதிக சக்தியைக் கொடுப்பதால், மாவுச் சத்து மிக்க பொருட்கள் எல்லோருக்குமே அவசியமானவை. ஆனாலும், தேவையின் அளவு தெரிந்து அவற்றைப் பயன்படுத்துவதே நலம்'' என்றவர் மாவுப் பொருட்களில் இருக்கும் சத்துக்களைப் பற்றி பேசினார்.

தானிய வகைகளைத் தோலுடன் சேர்த்து அரைக்கும்போது, அதில் ஹைடேட்ஸ் கிடைக்கிறது. இது மாவுச் சத்துக்களால் உடலில் சேரும் தேவைக்கு அதிகமான தாது உப்புக்களை வெளியேற்றிவிடும். சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள், மாவுப் பொருட்களைக் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணமாகக்கூடிய மாவுப் பொருட்களை வளரும் குழந்தைகள் சாப்பிடுவதால், நல்ல ஆரோக்கியமான வளர்ச்சி கிட்டும்'' எனச் சொன்ன கிருஷ்ணமூர்த்தி, மாவு வகைகளைப் பற்றி வரிசைப்படி விளக்கத் தொடங்கினார்.

மக்காச்சோள மாவு:

உடலுக்கு அதிக சக்தியைக் கொடுக்கக் கூடியது. இனிப்புச் சுவையுடன் இருப்பதால், சூப், க்ரீம் மற்றும் சாஸ் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாவில் கஞ்சி வைத்தும் குடிக்கலாம். நார்ச் சத்து, புரதம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், தைமின், ரிபோஃப்ளோவின், நியாசின், பொட்டாசியம், மெக்னீஷியம், சோடியம், தாமிரம், மங்கனீஸ், துத்தநாகம் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. பீட்டா கரோட்டின் ஓரளவே இருக்கிறது. கால்சியம், இரும்பு, அமினோ அமிலங்கள் ஆகியவை மிகக் குறைந்த அளவே இருக்கின்றன. மாவுச் சத்தை மாற்றி, சர்க்கரையின் அளவைக் கூட்டக்கூடிய தன்மை இதற்கு இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கலாம். சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள் குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். மற்ற எல்லோருக்கும் சாப்பிட ஏற்றது.

தினை மாவு:

பொடி தானியம் என்று இதைச் சொல்லுவார்கள். சலிக்காமல் அப்படியே பயன்படுத்துவதன் மூலம் ஓரளவு நார்ச் சத்து கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் போன்றோர் தினை மாவைக் கஞ்சியாகக் குடிக்காமல் ரொட்டி செய்து சாப்பிடலாம். உருண்டையாகப் பிடித்துச் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நேரடியாகச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதில், கார்போஹைட்ரேட் அதிக அளவு இருக்கிறது. புரதம், பாஸ்பரஸ், தைமின், ரிபோஃப்ளோவின், பொட்டாசியம், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. எண்ணெய்ச் சத்துக்கள், கால்சியம், இரும்பு, ஃபோலிக் அமிலம், குரோமியம், மெக்னீஷியம், மாங்கனீஸ் ஆகியவை குறைந்த அளவே இருக்கின்றன. சிறுநீரக நோயாளிகள் ஓரளவு எடுத்துக்கொள்ளலாம்.

கோதுமை மாவு:

இது உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும். புளித்த ஏப்பம், புளிப்புத் தன்மை பிரச்னை இருந்தால், கோதுமை மாவைக் கூழாகக் காய்ச்சிக் குடிக்கலாம். கோதுமைக் கூழில் வெந்தயத் தூளும் ஒரு சிட்டிகை மஞ்சளும் சேர்த்துச் சாப்பிட்டால், மாதவிடாயின்போது ஏற்படும் அதிகப்படியான உதிரப்போக்கு கட்டுப்படும். சருமத்தைப் பொலிவாக்கும். வளரும் குழந்தைகளுக்கு வெல்லம் சேர்த்து உருண்டையாகப் பிடித்துக்கொடுப்பதன் மூலம் ஊட்டச் சத்துக் குறைபாடு நீங்கும். தாது உப்புக்கள் இருப்பதால், கிட்னி நோயாளிகள் அதிகம் சாப்பிடக் கூடாது. கார்போஹைட்ரேட், நார்ச் சத்து, மெக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், ஃபோலிக் அமிலம், தைமின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. ரிபோஃப்ளோவின், புரதம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம் ஆகியவை ஓரளவும்... குரோமியம், கால்சியம் மிகக் குறைந்த அளவும் இருக்கின்றன. கோதுமை மாவில் செய்யப்படும் உணவுகள் மெதுவாகத்தான் ஜீரணமாகும் என்பதால், சர்க்கரை நோயாளிகள் எண்ணெய் சேர்க்காமல் சுக்கா ரொட்டியாகச் சுட்டுச் சாப்பிடலாம். சாப்பிட்டதும் நன்றாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

உளுந்து மாவு:

இந்த மாவு இடுப்பு எலும்பை உறுதியாக்கும். மாதவிடாய்ப் பிரச்னையைச் சரி செய்யும். ரத்தசோகையைத் தடுக்கும். இதில் புரதம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், கோலின் மற்றும் நார்ச் சத்து ஆகியவை அதிகமாக உள்ளன. கால்சியம், இரும்பு, தைமின், ரிபோஃப்ளோவின், மெக்னீஷியம், பொட்டாசியம், தாமிரம், குரோமியம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. பீட்டா கரோட்டின் குறைந்த அளவே இருக்கிறது. வளரும் குழந்தைகள், எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு மிகவும் நல்லது. சிறுநீரக நோயாளிகள் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெயை உறிஞ்சும் தன்மை இருப்பதால், ரத்த அழுத்த நோயாளிகள் கஞ்சி அல்லது களி செய்து சாப்பிடலாம்.

கம்பு மாவு:

முளைக்கட்டிய கம்பை வறுத்துப் பொடிக்கும்போது, வாசனையும் ருசியும் அதிகரிப்பதோடு எளிதில் ஜீரணமும் ஆகும். எனவே, மலச்சிக்கல் பிரச்னை வராது. கஞ்சி, அடை மற்றும் தோசை செய்து சாப்பிடலாம். மால்டோஸ், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், மங்கனீஸ், துத்தநாகம், தாமிரம், நார்ச் சத்து ஆகியவை அதிகமாக இருக்கின்றன. புரதம், தைமின், ரிபோஃப்ளோவின், நியாசின் ஆகியவை மிதமான அளவில் இருக்கின்றன. கால்சியம், பீட்டா கரோட்டின், குரோமியம் குறைந்த அளவே இருக்கின்றன. ரத்தசோகை உள்ளவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் வெல்லம் சேர்த்துச் சாப்பிடுவதன் மூலம் உடலில் சத்துக்கள் கிரகிக்கப்படும். வெல்லப்பாகு காய்ச்சி அதனுடன் கம்பு மாவைக் கலந்து உருண்டை செய்து வளரும் பிள்ளைகளுக்குக் கொடுத்தால், நல்ல சக்தி கிடைக்கும். வயோதிகர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் போன்ற அனைவருக்கும் ஏற்றது.

கடலை மாவு:

இந்த மாவு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைக் கூட்டும். எளிதில் ஜீரணமாகும். சருமத்தைப் பொலிவாக்கும் தன்மையும் இதற்கு உண்டு. புரதம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீஷியம், சோடியம், தாமிரம், துத்தநாகம், நார்ச் சத்து ஆகியவை இதில் அதிகமாக உள்ளன. இரும்பும் குரோமியமும் ஓரளவு இருக்கின்றன. எண்ணெய்ச் சத்து, கால்சியம், பீட்டா கரோட்டின், தைமின், ரிபோஃப்ளோவின் ஆகியவை குறைந்த அளவில் இருக்கின்றன. சர்க்கரை நோயாளிகள் ஓரளவு எடுத்துக்கொள்ளலாம். சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள் மிதமான அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். ரத்தசோகை, மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் அடை செய்து சாப்பிடலாம். எல்லோருக்கும் ஏற்றது.

மைதா மாவு:

கோதுமைத் தவிடு மற்றும் முளை ஆகியவை பிரிக்கப்பட்டு மாவாக்கப்படுவதுதான் வெள்ளை நிறமுள்ள மைதா. நார்ச் சத்து இல்லாததால் மலத்தை கெட்டிப்படுத்தும். மைதாவில் செய்யும் பரோட்டா, சமோசா மற்றும் பேக்கரி வகை உணவுகள், இளம் வயதினரின் ஃபேவரிட். இதனுடன் காய்கறிகளையும், திரவ உணவுகளையும் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. அதிக அளவு கார்போஹைட்ரேட் இருப்பதால், உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும். புரதம் ஓரளவு இருக்கிறது. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், தைமின், ரிபோஃப்ளோவின், பொட்டாசியம், மெக்னீஷியம், தாமிரம் ஆகியவை மிகவும் குறைவாகவே இருக்கின்றன. வயோதிகர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் இந்த மாவுடன் ரவை, கோதுமை மாவு போன்றவற்றைச் சேர்த்து உண்ணுவது நல்லது. ஆனால், குறைந்த அளவு மட்டுமே சாப்பிட வேண்டும்.

வெள்ளைச் சோள மாவு:

இந்த மாவில் கஞ்சி, ரொட்டி போன்றவற்றைச் செய்து சாப்பிடலாம். இது உடலில் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். எல்லோருக்கும் ஏற்றது. உடலுக்கு அதிக சக்தியைக் கொடுக்கும். கார்போஹைட்ரேட், ஃபோலிக் அமிலம், தைமின், ரிபோஃப்ளோவின், நியாசின், வைட்டமின் பி 6, மெக்னீஷியம் மற்றும் நார்ச் சத்து அதிகமாக இருக்கின்றன. புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவை ஓரளவே இருக்கின்றன. கால்சியம், பீட்டா கரோட்டின் ஆகியவை குறைந்த அளவே இருக்கின்றன. எல்லோருக்கும் ஏற்ற இந்த வெள்ளைச் சோள மாவு விலையும் குறைவானது. ஆனால், ஜீரணிக்கும் சக்தி குறைவாக இருப்பவர்கள், இந்த மாவைத் தவிர்ப்பது நல்லது.

அரிசி மாவு:

பச்சரிசி மாவு, புழுங்கல் அரிசி மாவு, சிவப்பு அரிசி மாவு எனப் பல்வேறு வகையான அரிசி மாவு வகைகள் இருந்தாலும், நடைமுறையில், பச்சரிசி மாவின் பயன்பாடுகளே அதிகம். இது எளிதில் ஜீரணமாகும். எடை குறைந்தவர்கள் வெல்லம் கலந்த கொழுக்கட்டை, புட்டு போன்றவை செய்து சாப்பிட்டால் எடை கூடும். உடலுக்கு அதிக சக்தியையும் கொடுக்கும். சர்க்கரை நோயாளிகள் மிகக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்களுக்கு அரிசி மாவு உணவு மிகவும் நல்லது. இதில் மாவுச் சத்து அதிக அளவு இருக்கிறது. ஓரளவு பாஸ்பரஸும் புரதம், கால்சியம், இரும்பு, நார்ச் சத்து ஆகியவை குறைந்த அளவும் இருக்கின்றன. சிவப்பு அரிசி மாவில் தைமின், ரிபோஃப்ளோவின் போன்ற பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் மற்றும் இரும்புச் சத்துக்கள் இருக்கின்றன. கைக்குத்தல் அரிசியில் கோலின், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இருக்கின்றன. எளிதில் ஜீரணிக்கக் கூடியது.

கேழ்வரகு மாவு:

இது வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது. எளிதில் ஜீரணிக்கக் கூடிய தன்மை இதற்கு உண்டு. மலச்சிக்கலைப் போக்கும். கேழ்வரகுடன் பொட்டுக்கடலை, வேர்க்கடலை போன்றவற்றைச் சேர்த்து அரைத்துக் கஞ்சி செய்து, குழந்தைகளுக்கு ஆறு மாதத்தில் இருந்து தாய்ப்பாலுடன் துணை உணவாகக் கொடுக்கலாம். உடலுக்கு அதிக சக்தியைக் கொடுக்கும். கார்போஹைட்ரேட், கால்சியம் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. பொட்டாசியம், தைமின், ரிபோஃப்ளோவின், ஃபோலிக் அமிலம், மங்கனீஸ், தாமிரம், மெக்னீஷியம், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. புரதம், இரும்பு, நியாசின் ஆகியவை மிகக் குறைந்த அளவில் இருக்கின்றன. சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள் ஓரளவுக்கே எடுத்துக்கொள்ளலாம். கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளரும் குழந்தைகள் ஆகியோர் வாரத்துக்கு மூன்று நாட்கள் எடுத்துக்கொள்வது நல்லது.

அஷ்டாங்க யோகப் பயிற்சிகள்

அஷ்டாங்க யோகப் பயிற்சிகள்

           அஷ்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். இவை இயற்கை அளித்த திறமை கள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன. இவ்வாறான அஷ்டமா சித்திகளைச் சித்தர்கள் அஷ்டாங்க யோகப் பயிற்சிகளால் பெற்றனர். அத்தகைய சித்திக ளை த் திருமந்திரம் விளக்குகிறது.

அஷ்டாங்க யோகப் பயிற்சிகள்

1. அணிமா
2. மஹிமா
3. லஹிமா
4. கரிமா
5. பிராத்தி
6. பிரகாமியம்
7. ஈசத்துவம்
8. வசித்துவம்

“அணுவினும் நுண்ணுருவு கொளல் அணிமாவாம்,அவற்றின்
அதி வேகத்து இயங்கியும் தோய்வற்ற உடல் லகிமா,
திணிய பெருவரை என மெய் சிறப்புறுகை பகிமா,
சிந்தித்த பலம் எவையும் செறிந்துறுகை பிராத்தி,
பிணை விழியர் ஆயிரவரொடும் புணர்ச்சி பெறுகை
பிரகாமி,ஈசிதை மாவலியும் அடி பேணி
மணமலர் போல் எவராலும் வாஞ்சிக்கப்படுகை
வசி வசிதை வலியாரால் தடுப்பரிய வாழ்வே!”

1. அணிமா:

பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறிய தாகக்காட்டுவது/ ஆக்குவது. பிருங்கி முனிவ ர் முத்தேவர்களைமட்டும் வலம் வருவதற்கா க சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும்.

2. மஹிமா:

சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது. வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், கிருஷ்ண பரமா த்மா அர்ஜூனனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்.

3. லஹிமா:

கனமான பொருளை இலேசான பொருளா க ஆக்குவது. திருநாவுக் கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்ட போது கல் மிதவையாகி கடலில் மிதந்தது லஹிமா ஆகும்.

4. கரிமா:

இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது. அமர்நீதி நாயனாரி டம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்த போது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடை சியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரிசெய்த சித்தி கரிமா.

5. பிராத்தி:

எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது. திருவிளையாடற் புராணத்தில் “எல்லாம்வல்ல சித்தரான படலம்” என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்த தாக வரும் சித்தி பிராத்தி.

6. பிரகாமியம்:

வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன் றுதல். அவ்வையார் இளவயதி லேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக் கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண் வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தா கும்.

7. ஈசத்துவம்:

ஐந்து தொழில்களை நடத்துதல். திருஞான சம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பி யமை ஈசத்துவம் எனும் சித்தாகும்.

8. வசித்துவம்

ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலிய வற்றைத் தம்வசப்படுத்துதல். திருநாவுக்க ரசர் தம்மைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமர் ஆலமரத்தி லிருந்து ஒலிசெய்து கொண்டிருந்த பறவை களின் ஓசை யை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்

இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கிலப் பயிற்சியுமே!..

இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கிலப் பயிற்சியுமே!..

 Photo: இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கிலப் பயிற்சியுமே ! 

தாய்மொழி வாயிலாகப் பயில்பவர்கள் தம் தேசிய இனத்தை உணர்ந்து, எழுச்சியுடன் திகழ்கிறார்கள்.  அயல்மொழி வாயிலாகப் பயில்பவர்கள் அடிமை எண்ணத்தில் ஊறித், தன் முனைப்பின்றிப் பெயரளவிற்கு வாழ்கிறார்கள். எனவேதான் கல்வியாளர்களும் மக்கள் நலம் நாடும் அரசியல் தலைவர்களும் தாய்மொழி வழிக்கல்வியை வலியுறுத்துகிறார்கள்.

  கல்விக்கு அடிப்படை கேட்டல் ஆகும். தெய்வப்புலவர் திருவள்ளுவர்,செல்வத்துள்  செல்வம் செவிச்செல்வம்  (திருக்குறள் 411) என்றதும் அதனால்தான்.     

    கற்றிலன் ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு
    ஒற்கத்தின் ஊற்றாம் துணை (திருக்குறள் 414) 

எனத் தெய்வப்புலவர் கேட்டலைச் சிறப்பிக்கின்றார். அப்படியாயின் கல்வியின் ஒரு பகுதியாகிய கேள்வியறிவு இன்னும் இன்றியமையாதது அன்றோ!  கேள்வியறிவு தாய்மொழியில் இருந்தால்தான் கல்வி சிறக்கும்.  இல்லையேல் கருத்தைப் புரிந்து கொள்வதற்குச் செலவிடும் நேரத்தை விட அதை வெளிப்படுத்தும் மொழியைப் புரிந்து கொள்ள மிகு நேரம்  வீணாகும். எனவேதான் கல்வி என்பது தாய்மொழி வாயிலாக அமைய வேண்டும் என்றே அறிஞர்கள் வலியுறுத்துகிறார்கள்.

  உலக மக்கள் தத்தம் தாய்மொழியில் கற்றுச் சிறந்திடும் வேளையில் தமிழ்நாட்டு மக்கள் தம் தாய்மொழியாகிய தமிழ்வழியில்  கற்கும் வாய்ப்பு அருகிக் கொண்டே போகும் அவலம் கொடுமையன்றோ!

 தனியார் பள்ளி மாணவர்களைப் போன்று அரசுப் பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் பயிலும் வகையில் உள்ளாட்சிப் பள்ளிகளிலும் அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் தொடங்குவதாகத் தமிழ் ஆர்வம் மிக்கக் கல்வியமைச்சர் அறிவித்துள்ளார். தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பு நலன்களுக்கு இணையாக உள்ளாட்சிப்பள்ளிகளையும் அரசுப்பள்ளிகளையும் தரம் உயர்த்துவோம் என்றல்லவா   அமைச்சர் அறிவித்து இருக்க வேண்டும்? மாறாகக் கல்வி வணிகர்கள் வழியில் அரசும் செல்லும் என்பது  எவ்வாறு முறையாகும்?

  ஆங்கிலவழிக் கல்வியை அரசே தரலாம் என்னும் தலைப்பில் ஒருவர் தினமணியில் (மே10.2013) கட்டுரை எழுதியுள்ளார். “திறமையான ஆசிரியர்களைக் கண்டறிந்து பணியமர்த்தும் இவ்வேளையில், தமிழை வளர்ப்போம் எனக் கூறி தமிழனின் வளர்ச்சிக்குத் தடைபோடும் போலி முகமூடியை அணிதல் கூடாது” என அதில் பிதற்றி உள்ளார். தமிழால்தானே தமிழன் அடையாளம் காணப்படுகின்றான். அவ்வாறிருக்க தமிழை வளர்ப்போம் எனக்கூறித் தமிழனின் வளர்ச்சிக்குத் தடை போடுவதாக எங்ஙனம் கூறுகின்றார்? “தமிழின் உரிமையே தமிழர் உரிமையாகும். தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மையில்லை என்றால் தமிழர்க்கு முதன்மை இல்லை என்றுதான் பொருள். அயல்மொழிகளாம் ஆங்கிலத்துக்கும் இந்திக்கும் உள்ள முதன்மைகள் தமிழையும் தமிழரையும் தாழ்த்தும். ஆதலின் தமிழ் மொழிக்கு முதன்மையளிக்கும் பணியில் ஈடுபடுதல் தமிழர்களின் பிறவிக் கடனாகும்.” எனப் பயிற்றுமொழிக் காவலர் பேராசிரியர் சி. இலக்குவனார் [குறள்நெறி (மலர்2 இதழ்18): ஆவணி16,1996: 1.9.65], தமிழ் உரிமையே தமிழர் உரிமை என்பதை உணர்த்தி உள்ளாரே!

  தமிழை அழிப்பதன் மூலம் அல்லவா தமிழனின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல வாழ்விற்கும் தடை போடுகின்றனர். கட்டுரையாளரே, “இதனால் தமிழ் தாழ்ந்துவிடாது. ஏனெனில் தமிழும் ஒரு மொழிப் பாடமாக இருக்கத்தான் போகிறது ” என்று முத்து உதிர்த்துள்ளார். தமிழ்வழிக் கல்வியிலும் ஆங்கிலம் மொழிப்பாடமாகத் தானே இருக்கின்றது. அவ்வாறு இருக்க ஆங்கிலத்திற்குத் தடை எங்கே வந்தது? ஆங்கிலவழிக்கல்வியில் பயின்று தமிழைப் படிக்கலாம் என்னும் பொழுது, தமிழ்வழிக்கல்வியில் பயின்று ஆங்கிலம் முதலான பிற மொழிகளைப் படிக்கலாம் என்பதில் என்ன தவறு உள்ளது?

   இதற்கு ஓர் அறிவாளி, பின்னூட்டம் என்ற பெயரில், “குடிகாரன் மற்றும் பொறுப்பற்றவர்களின் வீட்டுப் பிள்ளைகள்தான் வேறு வழியின்றி அரசு தமிழ்ப் பள்ளிகளில் படிக்கிறார்கள்” எனத் தமிழ்வழி பயிலச் செய்யும் பெற்றோரை இழிவுபடுத்தி உள்ளார். இதனை எப்படி  தினமணி வெளியிட்டது என்றும் தெரியவில்லை. “தமிழ் மொழிக்கு எதிரான கட்டுரை தினமணியில் வந்திருப்பது வருத்தமளிக்கிறது” எனப் பாலகிருட்டிணன் என்பவர் பதிந்ததே பெரும்பாலோர் கருத்து.

  “நீங்கள் கூறுவது போல் வைத்துக்கொள்வோம். ஆங்கில வழிக் கல்வியில் படித்த மாணவனைக் கேளுங்கள் ‘ உனக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியுமா? உன் தாய்மொழி நன்றாகத் தெரியுமா? நீ படித்த பாடத்தின் அடிப்படை நன்றாகத் தெரியுமா? அதை எதற்காகப் படிக்கிறாய்? ஏன் படித்தாய்? நன்றாகப் புரியுமா பாடம் நடத்துவது? உன் திறமை எதுவென்று உனக்குத் தெரியுமா?’  என்று கேளுங்கள். அனைத்திற்கும் தெரியாது என்றுதான் பதில் வரும். இசுரேல் நாடு 55 ஆண்டுகளுக்கு முன்னாள்தான் உருவானது. நாடு உருவானதும் அவர்கள் செய்த முதல் வேலை அவர்கள் தாய் மொழியில் அறிவியல் மருத்துவம் அனைத்தையும் மொழிபெயர்த்துக் கல்வி முறையை அவர்கள் தாய் மொழியில் கொடுத்தார்கள் அதனால்தான் கடந்த 50 வருடங்களுள் அவர்கள் நாட்டில் நோபெல் பரிசு அறிவியலில் பெற்றவர்கள் மட்டும் 10 பேர். அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மக்கள் தொகை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் நம்மால் அவர்களுக்கு இணையாக வளர முடியவில்லை. காரணம், ஆங்கிலக் கல்வி முறை. பிறமொழியில் உள்ள அறிவியல் களஞ்சியங்களை நம் மொழியில் பெயர்த்துக் கொண்டுவரவேண்டும். அதுவே பாரதியின் கனவு. ஆங்கில மொழி தேவைதான் ஆனால் ஆங்கிலத்தில்தான் அறிவு என்பது அறிவீனம்”  என  இதற்குத்  திருச்செந்தூர் விவேக் தமிழ்க்குமரன்,   சரியான மறுமொழி அளித்துள்ளார்.  சமச்சீர் கல்வியை ஒருபுறம் நடைமுறைப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு ஆங்கிலவழிக் கல்வியைத் திணிப்பது முறையற்ற செயல்மட்டுமல்ல அறமற்ற செயலுமாகும்.

 தமிழ்வழிப்பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் தொடங்குவதால் மாணாக்கர் களிடையே பிளவு எண்ணத்தையும் உயர்வு தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்கித் தன்னம்பிக்கையற்ற தலைமுறைகளை உருவாக்கப் போவதை அரசு ஏன் புரிந்து கொள்ளவில்லை எனத் தெரியவில்லை.

  இதனை எதிர்க்க வேண்டிய எதிர்க்கட்சிகள் அமைதிகாக்கின்றன. சட்டப்படி எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும்  மிகுதியான வாக்குகள் அடிப்படையில் தி.மு.க. தான் செல்வாக்கான எதிர்க்கட்சியாகும். ஆனால், அதன் தலைவருக்கே தமிழ்வழிக்கல்வியில் நாட்டமில்லாததால் அக்கட்சி இதனை எதிர்க்கவில்லை. தமிழ்வழிக்கல்வியில் நாட்டமிருந்தால் கல்லூரியில் தமிழ்வழிக்கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டிய காலக்கட்டத்தில் இதற்கு வாழ்நாளெல்லாம் எதிர்ப்புக் குரல் கொடுத்த  மருத்துவர் ஏ.எல்.இலக்குமணசாமியை ஓராள் குழுவாக  அமர்த்தி அதற்குத் தடை விதித்திருப்பாரா? தமிழ்ச்சான்றோர்களின் பட்டினிப்  போரை நிறுத்துவற்கு அளித்த அறிக்கையில்கூட, ஆங்கில வழிக்கல்வி வணிகர்களின் வாதுரைஞர்போல்தான் கருத்துகளைத் தெரிவித்து இருந்தார். முனைவர் முத்துக்குமரன் குழு அளித்த சமச்சீர்க்கல்வி அறிக்கையில் தமிழ்வழிக்கல்வி வலியுறுத்தப் பட்டிருப்பினும் அதனை ஒதுக்கி வைத்திருப்பாரா? ஆட்சியில் இரு்ந்த பொழுது சென்னை மாநகராட்சிப்பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவுகள்  தொடங்க வித்திட்டிருப்பாரா? பல கோடி உரூபாய்ச் செலவில் செம்மொழி மாநாட்டை நடத்தியவர் சில  கோடி உரூபாய் ஒதுக்கித் தரமான தமிழ்வழிக்கல்விக்கு வழி அமைத்திரு்க்க மாட்டாரா?  எனவே, பிற எதிர்க்கட்சிகளும் தமிழ் நல அமைப்புகளும் அரசிடம் ஆங்கில வழிக்கல்விக்கு முற்றுப்புள்ளி இட நெருக்கடி அளிக்க வேண்டும். இருக்கின்ற ஆங்கிலவழிப்பள்ளிகள் அனைத்தும் படிப்படியாகத் தமிழ் வழிப்பள்ளிகளாக மாற நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டும்.

  “நம் தமிழ் வழிக் கல்விக்கான உரிமைப்போர் முதலில் தமிழக அரசிற்கு எதிராகத்தான் அமைய வேண்டும். தமிழ் வழிக்கல்வியே தமிழின எழுச்சிக்கு அடிப்படையாகும் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். . . . . ‘தமிழ்வழியாகப் படித்தலே தலைவர்களை உருவாக்கும். உயர்கல்வி ஓங்கிட ஒண்டமிழ் வழியே கற்போம்’ என்பனவே நம் குறிக்கோளாகும். இதனை வலியுறுத்தியே நம் அறப்போர் இருக்க வேண்டும்”  எனப் பயிற்றுமொழிக் காவலர் பேராசிரியர் சி.இலக்குவனார் [ குறள்நெறி (மலர்2 இதழ்8): சித்திரை 19,1996: 1.05.1965]  அன்று கூறி்யது இன்றைக்கும்  தேவையானதாகக் கல்விநிலை இழிவாகவே உள்ளது.

   “வேற்று நாட்டார் ஆட்சியினால் உண்டான பல தீமைகளுள் மிகக் கொடியது இந்திய இளைஞர்கள்மீது அழிவைக் கொடுக்கும் அயல்மொழியைப் பாடமொழியாகச் சுமத்தியதே என வரலாறு கூறும். அது நாட்டின் ஆற்றலை உறிஞ்சி விட்டது. மாணவர்களின் வாணாளைக் குறைத்து விட்டது. அவர்களை நாட்டு மக்களினின்றும் வேறுபடுத்தித் தனிமைப்படுத்தி விட்டது. அதனால் கல்வி வீணான செலவு மிகுந்த ஒன்றாகிவிட்டது. இது தொடர்ந்து நீடிக்குமேயானால் நமது நாட்டின் ஆன்மாவையே கொள்ளை கொண்டு போய்விடும்.  அயல்  பாட மொழியின் மயக்கத்திலிருந்து கல்வி கற்ற இந்தியர்கள் எவ்வளவு விரைவில் விடுபடுகின்றார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்கட்கும் மக்கட்கும் நல்லதாகும்”  என அண்ணல் காந்தியடிகள்(Young India 5.7.1929)   கூறியதை அவரைப் போற்றுவோர் மறப்பது ஏன்?

  தாய்மொழிவழிக்கல்விக்கு எதிரான போக்கிற்குக் காரணம் ஆங்கிலேய ஆட்சிதானா என்றால் அதுதான் இல்லை. ஆங்கிலேயர் ஆட்சி செய்த பொழுது, மேற்கத்திய முறைகளைப் புகுத்துவதற்காகவும் சமயப் பரப்புரைக்காகவும் அலுவல் தொடர்பிற்காகவும் ஆங்கிலத்தைக் கற்பித்தனர். இருப்பினும் அவர்கள், தாய்மொழிவழிக்கல்வியையே ஊக்கப்படுத்தினர்.  மார்ச்சு 4, 1835 இல்பிரித்தானிய இந்தியாவின்அலுவலக மொழியாக ஆங்கிலம் ஆனது. எண்ணத்திலும் செயலிலும்  இந்தியர்கள் ஆங்கிலேயர்களாக இருக்க வேண்டும் என்ற மெக்காலே, ஆங்கிலக்கல்விக்குக் கால்கோள் இட்டாலும் மேல்தட்டு மக்கள் ஆங்கிலக் கல்வியைப் பெற்று அதனைத் தத்தம் தாய்மொழிவாயிலாக மக்களுக்கு அளிக்க வேண்டும் எனத் தாய்மொழிவழிக்கல்விக்குச் சார்பாகவே வலியுறுத்தி உள்ளார். ஆங்கிலேய ஆட்சியில் அமர்த்தப்பட்ட கல்விக் குழுக்கள் அல்லது ஆணையங்கள் யாவும் தாய்மொழி வழிக்கல்வியையே வலியுறுத்தியுள்ளன. அங்ஙனமே ஆங்கிலேய அரசும் நடவடிக்கை எடுத்தது.

  1882 ஆம் ஆண்டு அண்டர் ஆணையம் (Hunter Commission of 1882) மக்களுக்கான தொடக்ககக்கல்வி என்பது தாய்மொழிவாயிலாகவே இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. [(a)    Policy : (i) Primary education should be regarded as the instruction of the masses. It should be closely related to the practical aspect of the life of the masses. (ii) Primary education should be imparted through the medium of mother tongue.]

 1854 இல் அறிக்கை அளித்த சார்லசு உட்டு(Charles Wood) கலை , அறிவியல்,  மெய்யியல்,  ஐரோப்பிய இலக்கியம் ஆகியவற்றிற்கு ஆங்கிலப்பயிற்சிக்கு முதன்மை அளித்தாலும் உயர்நிலைப்பள்ளி வரை தாய்மொழிக்கல்வி தேவை  என்பதை  வலியுறுத்தினார்.
  இந்தியப் பகர ஆளுநர் கர்சன் பெருமகன், (Lord Curzon, Viceroy of India)செப்தம்பர் 2, 1901 இல் சிம்லாவில் ஆங்கிலேயக் கல்வியாளர்களை மட்டும் கொண்ட ஒரு கூட்டத்தைக் கூட்டினார். இங்கும் தாய்மொழிவழிக்கல்வியே வலியுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத் தாமசு இராலேயின் (Thomas Raleigh) தலைமையில் அமைக்கப்பட்ட  இந்தியப் பல்கலைக்கழக ஆணையம்,  இந்தியச் செம்மொ ழிகளை மேம்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தது. அப்பொழுது செம்மொழி என்றால் சமசுகிருதமும் அரபியும் பெர்சியனும் என எண்ணப்பட்டது. காலத்தே மூத்த உயர்தனிச் செம்மொழியான செந்தமிழுக்கு அறிந்தேற்பு கிடைத்த பின்பும் மாநாடுதான் நடத்த முடிந்ததே தவிர, முழுமையான கல்வி மொழியாக நம்மால் ஆக்க இயலவில்லை.

 1917இல் அமைக்கப்பட்ட சடுலெர் ஆணையம் (Saddler Commission) எனப்படும் கல்கத்தா பல்கலைக்கழக ஆணையம், உயர்நிலைப்பள்ளியின் கல்விமொழி தாய்மொழியே எனப் பரிந்துரைத்தது. இவ்வாறு, ஆங்கிலேயர்கள் தம் தொடர்பிற்காகவும் பரப்புரைக்காகவும் ஆங்கிலமொழிக்கல்வியை நடைமுறைப்படுத்தினாலும் தாய்மொழிவழிக் கல்வியே சிறந்தது என அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.
ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற நாமோ - குறிப்பாகத் தமிழ் மக்களோ - ஆங்கிலச் சுமையை இறக்கி வைக்க மனமின்றி இருக்கின்றோம்.

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
          எண்ணுவம் என்பது இழுக்கு.

  தமிழ்நாட்டுக் கல்லூரிகளில்  இன்னும் வேற்றுமொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்பட்டு வருவது மிக மிக வருந்தத்தக்கது; நாணத்தக்கது. உலகில் வேறெந்த உரிமை நாட்டிலும் வேற்று மொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை. நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை. … … …. … ஆங்கிலத்தின் வழியாகவும் படிக்கலாம் என்ற நிலையை வைத்துக் கொண்டு அதன் வழியாகப் படித்து வருவோர்க்கே மதிப்பும் தந்து கொண்டிருந்தால் தாழ்த்தப்படும் தமிழ்வழியாகப் படிக்க எவர் முன்வருவர்?”  எனப் பயிற்றுமொழிக் காவலர் பேராசிரியர் சி.இலக்குவனார் [குறள்நெறி (மலர் 2 இதழ் 8): சித்திரை 19, 1996: 1.05.1965] கேட்ட வினா இன்றைக்கும் உயிரோட்டமாக உள்ளது நம் தாழ்நிலையாகும்.

  தமிழ்நல நடவடிக்கைகளை எடுத்துவரும் முதல்வர், தான் அறிவித்தது தவறு  என்றால்  அதனை நீக்கத் தயங்காதவர் எனப் பெயர் எடுத்த முதல்வர், உடனே மழலை நிலையில் இருந்து ஆய்வு நிலை முடிய எல்லா நிலைகளிலும் தமிழ்வழிக்கல்விக்கு  ஆவன செய்ய வேண்டும்.

தமிழ் வழிக்கல்வியே நம்மைத் தரணியில் உயர்த்தும்!  தலைநிமிரச் செய்யும்!

 உரிமைக்கு  தமிழ் மொழி! உறவுக்கு அயல்மொழி!
(கட்டுரையாளர்: தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்
இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கிலப் பயிற்சியுமே !